இனியனுக்காக தீபா எடுக்கும் அதிரடி முடிவு.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் இனியன் மருத்துவமனையில் இருக்கிறார். அவனின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் குடும்பமே தவிக்கிறது.
அதே போல கார்த்திக் தன்னுடைய நண்பர் இளையராஜாவை சந்தித்து பேசுகிறார். இந்த நிலையில் கார்த்திகை தீபம் தொடரில் இன்று நடக்க போவது என்ன என்பதை பார்க்கலாம்.

நேற்றைய எபிசோடு: இன்றைய எபிசோடில், கார்த்திக் இளையராஜா வேலை செய்த கேசட் கம்பெனியை விலைக்கு வாங்கி அபிராமி ஆடியோ கம்பெனி என பெயர் மாற்றி அதில் தன்னுடைய நண்பனுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கிறார். இதனால், இளையராஜா நண்பனை நினைத்து பெருமைப்படுகிறார்.
மருத்துவமனையில் இனியன்: இதையடுத்து அங்கிருந்து கிளம்பும் கார்த்திக், தீபாவுக்கு போன் செய்து இனியன் உடல் நிலை குறித்து விசாரிக்கிறார். அப்போது தீபா அவனுக்கு ஒரு பிரச்னையும் இல்ல நான் வீட்டிற்கு கிளம்பி வரேன் என்று சொல்ல கார்த்திக் ரெண்டு நாள் அங்கே இருந்து அவனை பார்த்துக்கோ, அங்கேயே இருந்திட்டு வா என்று சொல்ல. இங்கே ஒரு பிரச்னையும் இல்ல நான் வரேன் என்று சொல்லி தீபா போனை வைக்கிறாள்.
நக்கலாக சிரிக்கும் ஐஸ்வர்யா: வீட்டிற்கு வந்த தீபாவிடம், மீனாட்சி இனியன் உடல்நிலை குறித்து கேட்டுக்கொண்டிருக்கும் போது, அங்கு வரும் ஐஸ்வர்யா, உடல்நிலை குறித்து விசாரித்து பணத்துக்கு என்ன பண்ண போறேன்னு பார்க்கலாம் என்று நக்கலாக பேச தீபா அவளுக்கு பதிலடி கொடுக்கிறாள். இதையெல்லாம் அபிராமி மேலே இருந்து பார்க்கிறாள்.
முருகன் காட்டிய வழி: அதனை தொடர்ந்து தீபா வெளியே இருக்கும் முருகன் சிலை முன்பு சென்று எனக்கு ஒரு வேலை வாங்கி கொடு என்று பிரார்த்தனை செய்ய அப்போது நியூஸ் பேப்பர் ஒன்று பறந்து வந்து வீட்டிற்குள் விழ அதில் அபிராமி ஆடியோ கம்பெனியில் வேலை வாய்ப்பு இருப்பதாக வந்திருக்கும் செய்தியை படித்து முருகனுக்கு நன்றி சொல்கிறாள்.
சோகத்தில் தீபா: பிறகு கார்த்திக் தீபா ரூமில் இருக்கும் நேரத்தில் கார்த்திக் வீட்டில் இருப்பவர்களிடம் புதியதாக கம்பெனி வாங்கி இருக்கும் விஷயத்தை சொல்ல எல்லாரும் அவனை பாராட்டுகின்றனர். ரூமுக்கு வந்ததும் தீபாவிடமும் விஷயத்தை சொல்ல முயற்சி செய்ய அவள் சோகமாக இருப்பதால் நாளைக்கு சொல்லிக்கலாம் என்று சொல்லாமல் அமைதியாகி விடுகிறான்.
இனியன் குறித்து மீண்டும் கேட்டும் தீபா உண்மையை சொல்லாமல் மறைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











