பாத் டப்பில் கூமாப்பட்டி தங்கபாண்டியுடன் சாந்தினி குளியல்.. வீடியோவைப் பாருங்க.. வரவர நெருக்கம் கூடுதே!

சென்னை: "எங்க போனாலும் நாங்க இப்படித்தான்" என்பது போல, ஜீ தமிழின் கில்லாடி ஜோடி நட்சத்திரங்களான கூமாப்பட்டி தங்கபாண்டியும், சாந்தினியும் இப்போது இலங்கை கடற்கரையில் ஜாலியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அந்நிய தேசத்தில் இவர்கள் அடிக்கும் லூட்டிக்கு எல்லையே இல்லாமல் சிறகடித்துக் கொண்டு இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் இப்போது இவர்களின் இந்த சிறகடிக்கும் வீடியோக்கள் தான் செம ட்ரெண்டிங். இவர்களின் அலப்பறையைப் பார்த்த ரசிகர்கள், இவங்க லூட்டிக்கு அளவே இல்லையா? வரவர இவங்க நெருக்கம் ரொம்பவே கூடுதே என ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

பொதுவாகவே வெளிநாட்டிற்கு ஷூட்டிங் போனா சுற்ற மாட்டோமா? என்பதுதான் செலிபிரிட்டிகளின் பாணி. அந்த வகையில், தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'கில்லாடி ஜோடி' நிகழ்ச்சியின் ஸ்பெஷல் படப்பிடிப்புக்காக மொத்த குழுவினரும் ஒட்டுமொத்தமாக இலங்கை சென்றுள்ளனர். அங்கே நிகழ்ச்சிக்கான டாஸ்க்குகள் ஒருபுறம் பரபரப்பாக நடைபெற்றாலும், சாந்தினியுடன் கூமாபட்டி தங்கபாண்டி அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

Zee Tamil Killadi Jodi Stars Chandini and Koomapatti Thangapandi Bold Bath Tub Video from Sri Lanka goes Viral

பாத் டப் குளியல்: குறிப்பாக, அங்குள்ள சொகுசு விடுதியில் இருவரும் பாத் டப்பில் (Bathtub) ஒன்றாக அமர்ந்து ஜாலியாகப் பேசிக்கொண்டு இருக்கும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். ஏற்கனவே இவர்களது 'ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி' வேற லெவலில் ஒர்க்-அவுட் ஆகி வரும் நிலையில், இந்த வீடியோவில் இவர்களது நெருக்கத்தைப் பார்த்துவிட்டு "நெஜமாவே இவங்க லவ் பண்றாங்களோ?" என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.

ஓவர் சேட்டை: அந்த வீடியோவில், இருவரும் ஒரே பாத் டப்பில் அமர்ந்து உள்ளார்கள். சாந்தினியைப் பார்த்து சிட்டிசன் படத்தில் வரும் பாடலான பூக்காரி பாடலைப் பாடுகிறார். பாடிக் கொண்டே ஜூஸ் ஒன்றையும் கொடுக்கிறார். உடனே சாந்தினியோ, ஏற்கனவே குளித்துக் கொண்டு இருக்கிறாய். இதில் ஜூஸ் குடித்து சளி பிடித்துக் கொண்டால் என்ன செய்வது என்று கேட்கிறார். அதற்கு நான் உனக்கு பக்கத்தில் இருக்கும் வரை சளி வராது என்று கூறுகிறார் கூமாப்பட்டி தங்கபாண்டி. அப்படியா என்று கேட்ட சாந்தினி, ஒழுங்கா உட்காரு என்று கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Zee Tamil Killadi Jodi Stars Chandini and Koomapatti Thangapandi Bold Bath Tub Video from Sri Lanka goes Viral

சிங்கிள் பசங்க டூ கில்லாடி ஜோடி:இவர்கள் இருவரும் இதற்கு முன்னதாக ஜீ தமிழில் ஒளிபரப்பான 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியில் ஜோடியாக பங்கேற்று மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் இவர்களுக்கிடையே இருந்த அந்த புரிதலும், மாமன் மகன் - அத்தை மகள் உறவு போல ஒருவர் மாற்றி ஒருவர் கலாய்த்துக் கொள்வதும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறியது. ஒருவருக்காக மற்றொருவர் நலம் விரும்புவது, கிண்டலடிப்பது என எப்போதும் கலகலப்பாக இருக்கும் இந்த ஜோடி, திரைக்கு வெளியேயும் மிகச்சிறந்த நண்பர்களாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: zee tamil chandini sri lanka
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X