Zee tamil: ஜீ தமிழ் குடும்ப விருதுகள்.. ஞாயிற்றுக்கிழமை காத்திருக்கும் கொண்டாட்டம்!

சென்னை: ஜீ தமிழ் குடும்ப விருதுகள் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிகழ்ச்சி இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ்.

இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

zee tamil kudumbam viruthugal 2023 telecasting on sunday

ஜீ தமிழ் குடும்ப விருதுகள்: இதன் காரணமாக சேனல் நிர்வாகமும் ஒவ்வொரு ஆண்டும் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் என்ற மிகப்பெரிய விழாவின் மூலமாக பிரபலங்களின் திறமைகளுக்கு மகுடம் சூட்டி வருகிறது. கடந்த வருடத்திற்கான விருது விழா நிகழ்ச்சி இவ்வாண்டு தொடக்கத்தில் நடைபெற்றதை தொடர்ந்து இந்த வருடத்திற்கான விருது விழா நிகழ்ச்சி தீபாவளி ஸ்பெஷலாக ஒளிபரப்பாக உள்ளது.

ரெட் கார்பெட் நிகழ்ச்சி: அதன்படி ஜீ தமிழ் குடும்ப விருதுகள் நிகழ்ச்சி இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் முதல் பாகம் வரும் ஞாயிறு மதியம் 12 மணி முதல் 1 மணி வரை ரெட் கார்பெட் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து மதியம் 1 மணி முதல் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முதல் பாகம் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி: இதனை தொடர்ந்து இரண்டாம் பாகம் தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் தீபாவளி தினத்தின் ஒளிபரப்பு நேரம் குறித்த தகவல் வெகு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. உங்கள் பேவரைட் பிரபலங்களின் திறமைகளை கொண்டாடும் ஜீ குடும்ப விருதுகள் விழாவை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

திரைப்பிரபலங்கள்: இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா மற்றும் ஆர்.ஜே விஜய் ஆகியோர் தொகுத்து வழங்க கார்த்திக், விஷால், ஆர்யா, ஜெய், வெற்றிமாறன், கலைப்புலி எஸ் தாணு, பொன் ராம், அருண் விஜய், பார்த்திபன், ஜெயம் ரவி என எக்கச்சக்கமான பிரபலங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். ஜீ தமிழ் பிரபலங்களின் திறமையை கொண்டாடும் இந்த நிகழ்ச்சி நிச்சயம் மக்களின் மனதை கவரும் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X