ஜீ டிவி நல்ல நேரம்: ராமு– கார்த்தி நட்பில் விரிசலா?…
யானை ராமு உடன் நட்பாக இருந்த சிறுவன், சின்ன பிரச்சினையில் யானையுடன் கோபம் கொள்கிறான். தன்னைவிட்டு போய்விடுமாறு காட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்து விடுகிறான்.
ஒரு கிராமத்தை கதைக்களமாக கொண்டு, இரண்டு பெரிய மனிதர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான பாசப்போராட்டத்தை சொல்வதே இத்தொடர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர், 'நல்ல நேரம்'.

நகேந்திரன் சூழ்ச்சி
ஊர்த் தலைவராக அதிரடியாக பதவியேற்ற நாகேந்திரன் குடும்பம், பதவியை விட்டுக் கொடுத்த உத்தமராசா குடும்பத்தை வம்சப் பகை தீர்க்க, பழிவாங்கும் சூழ்ச்சிகளை தொடருகிறது.

கிருஷ்ணா – பிரீத்தி
இதற்கிடையே, அந்த ஊருக்கு பள்ளி ஆசிரியையாக வந்த மாதவி, நாகேந்திரன் மகன் கிருஷ்ணாவை காதலிக்கிறாள். கிருஷ்ணாவோ, முன்னாள் ஊர்த் தலைவர் உத்தமராசா மகள் பிரீத்தியை காதலிக்கிறான்.

மாதவியின் சூழ்ச்சி
திடீர் திருப்பமாக மாதவி, கிருஷ்ணா தன்னை கெடுத்து விட்டான் என்றும், அதனால் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் ஊர்ப் பஞ்சாயத்தை கூட்டுகிறாள்.

உடையும் காதல்
இந்த சூழ்நிலையில் பிரீத்தி-கிருஷ்ணாவின் காதல் உடைகிறது. கிருஷ்ணாவோ தான் தவறு செய்யவில்லை என போராடுகிறான். மாதவியோ கிருஷ்ணாதான் தவறு செய்தான் என உறுதிபட கூறுவதோடு, அவனை திருமணம் செய்யவும் போராடுகிறாள். இதனால் பிரீத்தியின் மனதை மாற்றி அவளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள்.

உத்தமராசா குடும்பம்
மாதவியின் கர்ப்பத்திற்கு காரணம் யார்? பிரீத்தி-கிருஷ்ணாவின் காதல் மீண்டும் தொடருகிறதா? ஊர்த்தலைவராக இருக்கும் நாகேந்திரன் குடும்பத்தால் பகையாளி குடும்பமான உத்தமராசாவின் குடும்பம் என்ன ஆகிறது என்பதை இனிவரும் எபிசோடுகளில் காணலாம்.

யானை திரும்புமா?
சிறுவனுடன் கோபித்துக் கொண்டு ஊர்க்காட்டில் இருக்கும் யானை, ஊருக்குள் நடக்கும் பிரச்சினைகளை எப்படி அடையாளம் காட்டுகிறது? பரபரப்பான திருப்பங்களோடு தொடருகிறது, தொடர்.
திரைக்கதை: தேவிபாலா. வசனம்: சாய்கிருஷ்ணா. இயக்கம்: ஆர்.தியாகராஜன்.


Click it and Unblock the Notifications











