அட்ராசக்க... ஜீ தமிழ் புத்தாண்டுக்கு போட்ட நிகழ்ச்சிகளின் பிளான் மற்றும் டி ஆர் பி போட்டி

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரமிப்பூட்டும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் அணிவகுப்புடன் இந்த 2022-ஆம் ஆண்டினை அதிரடியாகத் துவங்குங்கள் என்று பல திட்டங்களுடன் ஜீ வந்துள்ளது .

உலகம் முழுவதும் உள்ள மக்கள் எல்லோரும் 2022-ஆம் ஆண்டை கோலாகலமாகத் துவங்குகையில், தமது அன்பார்ந்த நேயர்களுக்கு இந்த புத்தாண்டில் சிறப்பான ஆச்சரியங்களை வழங்க ஜீ தமிழ் திட்டமிட்டுள்ளது

நேயர்களின் பல்சுவை பொழுதுபோக்கு தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்துவரும் ஜீ தமிழ் தொலைக்காட்சி, வரும் ஜனவரி 1, 2022, புத்தாண்டினை கொண்டாடும் விதமாகப் பிரமிப்பூட்டும் தொடர் நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளது.

குடும்பத் திரைப்படம்

குடும்பத் திரைப்படம்

பாரம்பரியமான விவாத நிகழ்ச்சி துவங்கி, ஆக்ஷன் நிறைந்த திரைப்படம், இசை மற்றும் போட்டி நிகழ்ச்சிகள், மற்றும் உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக வெளியிடப்படவுள்ள குடும்பத் திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு உற்சாகமான நிகழ்ச்சிகளை 2022-ஆம் ஆண்டின் முதல் நாளிலேயே வழங்கவுள்ளது

வாழ்வோடு தொடர்புடைய

வாழ்வோடு தொடர்புடைய

புத்தாண்டு கொண்டாட்டங்களை, ஜீ தமிழ் தொலைக்காட்சி பாரம்பரியமான விவாத நிகழ்ச்சியான 'பட்டிமன்றம்' மூலம் இனிதே துவங்குகிறது. இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்பானதாக்கும் வகையில், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் விவாதக் குழுவினர்கள் நம் தினசரி வாழ்வோடு தொடர்புடைய தலைப்புகளைப் பேசுபொருளாகக் கொண்டுள்ளது.

வெள்ளையர்களின் வருகை

வெள்ளையர்களின் வருகை

காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்த ஒரு மணிநேர சிறப்பு நிகழ்ச்சியை, தமிழக அரசின் பெருமைமிகு கலைமாமணி விருதினைப் பெற்றவரும், சிறந்த தமிழ் பேச்சாளரும், எழுத்தாளர் மற்றும் அறிஞருமான சுகி சிவம் நடுவராக வழிநடத்தவுள்ளார். பர்வீன் சுல்தானா, சாந்தாமணி, டாக்டர். சுந்தர ஆவுடையப்பன், கே சரவணன், சுசித்ரா, மற்றும் மோகன சுந்தரம் ஆகிய பிரபலங்கள் பங்கேற்று, 'வெள்ளையர்களின் வருகைக்குப் பின் நாம் அதிகம் பெற்றோமா? அல்லது அதிகம் இழந்தோமா?' என்கிற தலைப்பில், நேயர்களின் மனம் கவரும் வகையில் விவாதிக்கவுள்ளனர்.

ஜீவா, ஷாலினி பாண்டே

ஜீவா, ஷாலினி பாண்டே

இந்த சுவாரஸ்யமான விவாத நிகழ்ச்சியைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு காமெடி மற்றும் ஆக்ஷன் திரைப்படமான 'கொரில்லா' ஒளிபரப்பாகவுள்ளது. ஒரு சிறு குற்றவாளி, நடிகராகத் துடிக்கும் ஒரு நபர், சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் மற்றும் வங்கியால் கடன் மறுக்கப்பட்ட ஒரு விவசாயி - ஆகிய நான்கு நண்பர்களின் வாழ்க்கைப் பயணத்தை இத்திரைப்படம் பேசுகிறது. நேயர்களின் மனநிலையை ஒத்துப்போகும் ஒவ்வொரு கதாபாத்திரமும், காட்சிகளோடு காண்போரைக் கட்டிப்போடும். ஜீவா, ஷாலினி பாண்டே, மற்றும் யோகி பாபு ஆகிய முன்னணி கதாபாத்திரங்களாக நடித்துள்ள இத்திரைப்படத்தினை டான் சேன்டி இயக்கியுள்ளார். ராதா ரவி, சதீஷ், ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, மதன் மற்றும் ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், மையக் கதாபாத்திரமாக ஒரு நிஜ சிம்பன்சி குரங்கு நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ரன் பேபி ரன்

ரன் பேபி ரன்

பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இசைப்போட்டி நிகழ்ச்சியான 'சவுண்ட் பார்ட்டி' மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதில், நடிகர் வைபவ், நடிகை பார்வதி நாயர், இயக்குனர் & நடிகர் பாண்டியராஜன், சம்யுக்தா சண்முகநாதன், ரித்திகா மற்றும் சோம் சேகர் ஆகியோர் பங்கேற்று, கேளிக்கை நிறைந்த சுவாரஸ்யமான சவால்களை சந்திக்கவுள்ளார்கள். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சிந்திக்கத் தூண்டும் போட்டிகளைக் கொண்ட விளையாட்டு நிகழ்ச்சியான 'ரன் பேபி ரன்' ஒளிபரப்பாகும்.

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக

பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்த விளையாட்டு நிகழ்ச்சியினை, நடிகர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஜகன் நகைச்சுவையான பல சவால்களுடன் தொகுத்து வழங்க, பிரபல கலைஞர்கள் மிதுன், புவியரசு முத்துசாமி, நந்தா மாஸ்டர், சர்வைவர் ஐஸ்வர்யா கிருஷ்ணன், தர்ஷனா & அஷ்வினி ராதாகிருஷ்ணா உள்ளிட்டோர் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் முத்தாய்ப்பாக, நேயர்களுக்கு விருந்தாக, பிற்பகல் 3:30 மணிக்கு உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக 'டக் ஜெகதீஷ்' திரைப்படம், ஜீ தமிழில் திரையிடப்படவுள்ளது. சிவா நிர்வானா எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் நானி கதாநாயகனாகவும், ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

டி ஆர் பி போட்டி

டி ஆர் பி போட்டி

ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து சொத்து விவகாரங்களையும் தீர்த்து வைக்க நினைக்கும் ஒரு வருவாய்த்துறை அலுவலரின் வாழ்க்கையையும், தனது அண்ணன் குடும்பத்துடன் இணைய மேற்கொள்ளும் முயற்சிகளையும் இந்த 'டக் ஜெகதீஷ்' திரைப்படம் கூறவுள்ளது. சொத்து தகராறு காரணமாகப் பிரிந்த அக்குடும்பம் பிரிந்துள்ளது, அதனை ஜெகதீஷ் தன் தீர்த்துவைக்க முயல்வதே கதை. குடும்ப பாசமும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் நிறைந்த இந்த திரைப்படத்துடன் உங்களது புத்தாண்டைக் கோலாகலத்துடன் துவங்குங்கள் என்று பல திட்டங்களுடன் ஜீ டிவி வந்துள்ளது .இந்த மெகா கொண்டாட்ட நிகழ்ச்சிகளுடன் இணைந்து, புதிய வருடத்தினை சுவாரஸ்யத்துடன் துவங்க ஜனவரி 1, காலை 9 மணிமுதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியைக் கண்டு மகிழுங்கள். பல டிவி சேனல்கள் பல டி ஆர் பி போட்டிகள் கண்டிப்பாக இருக்கும். இருந்தாலும் ஜீ டிவி யில் ஸ்வாரஸ்யங்களுக்கு பஞ்சம் இருக்காது என்று பல ப்ரோமோஸ் வந்த வண்ணம் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X