For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  புது சீரியல்களை களமிறக்கும் ஜீ தமிழ்.. மத்த சீரியல் மாதிரி இல்ல.. கதைல பல ட்விஸ்ட் இருக்கு !

  |

  சென்னை :டிசம்பர் 13 முதல் 'பேரன்பு' மற்றும் 'தெய்வம் தந்த பூவே' ஆகிய இரண்டு புத்தம் புதிய நெடுந்தொடர்களை அறிமுகம் செய்ய உள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி.

  'பேரன்பு' மற்றும் 'தெய்வம் தந்த பூவே' ஆகிய தொடர்கள் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தெளிவாக காட்டும் விதமாக தயாராகியுள்ளது .

  வழக்கமான பிற்போக்கு சிந்தனையை தகர்க்கும் இரண்டு கதாநாயகிகளின் வலுவான கதைகளுடன் வெளிவரப்போகிறது இத்தொடர்கள்.

  தாமரையின் கோபம் பலவீனம் அதை அடிக்கடி சீண்டிப்பார்க்கும் பிரியங்கா புரமோவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்! தாமரையின் கோபம் பலவீனம் அதை அடிக்கடி சீண்டிப்பார்க்கும் பிரியங்கா புரமோவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!

  மாமியார் மருமகள்

  மாமியார் மருமகள்

  மாமியாரின் இடத்தில் ஒரு தாயைப் பெறும் பெண்கள் அனைவரும் பாக்கியசாலிகள், என்கிற நம்பிக்கைக்கு உயிரூட்டும் விதமாக ஜீ தமிழ், புதிய தொடர்களை வழங்கவுள்ளது. தலைப்பிலேயே வரும் 'பேரன்பு', வழக்கத்திற்கு மாறான மாமியார்-மருமகள் உறவினைக் காட்டும் அன்பான ஒரு இனிய குடும்பத் தொடராகும். இதில் பழம்பெரும் நடிகை ஷமிதா ஸ்ரீகுமார் மற்றும் வைஷ்ணவி அருள்மொழி ஆகியோர் முறையே மாமியார், மருமகள் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

  பழம்பெரும் நடிகர்கள்

  பழம்பெரும் நடிகர்கள்

  பிரபல கட்டிடக்கலை வல்லுநரான கார்த்திக்குடன், பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட ஒரு திருமண உறவினை துவங்கும் - கடவுள் நம்பிக்கையும், நல்ல மனதும் கொண்ட பெண்ணான வானதியின் வாழ்க்கையே இத்தொடரின் கதைக்களமாகும். கார்த்திக் கதாபாத்திரத்தில் விஜய் வெங்கடேசன் நடிக்கிறார். இருப்பினும், குணாதிசயங்களில் உள்ள வேறுபாடுகளின் காரணமாகத் தம்பதிகள் இருவருக்கும் இடையில் ஒரு அசவுகரியம் நிலவுவதை உணர்கிறார், மாமியார் .மணமகன் இல்லத் தலைவியான அவர், வானதியின் மீது தன் மகனுக்குக் காதலை உணரவைக்கும் பொறுப்பினை ஏற்கிறார். இத்தொடரானது, வருகின்ற டிசம்பர் 13 முதல் திங்கள் முதல் சனி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

  தெய்வம் தந்த பூவே

  தெய்வம் தந்த பூவே

  டிசம்பர் 13 முதல் மதியம் 2:30 மணிக்கு மற்றொரு தொடரான 'தெய்வம் தந்த பூவே' ஒளிபரப்பாகும். வாழ்வில் தடைகளைக் கடந்து தைரியமாக உலகினை எதிர்கொள்ளும், தளராத மனமுடைய சிங்கப்பெண்ணான மித்ராவின் கதையை மையமாக கொண்டது .எதிர்பாராமல் வினயை சந்திக்கும் மித்ரா, விதிவசத்தால் திசைமாறிய அவனது வாழ்க்கையைத் தனது நெறிகளால் மாற்றுகிறாள். 'நல்ல மனிதர்களே வாழ்வில் அதிக சோதனைகளுக்கு ஆளாவார்கள்' என்பதற்கு ஏற்ப மித்ராவும் தனது கடந்த காலத்தில் ஒரு கஷ்டத்தினைக் கடந்தே வந்திருக்கிறாள், ஆனால் அந்த மோசமான காலத்தின் தாக்கம் இப்போதும் அவளைத் தொடர்கிறது. அவள் தனது இக்கட்டான சூழ்நிலையை எப்படிச் சமாளிக்கிறாள் என்பதே கதை.

  சிங்கப்பெண் மித்ரா

  சிங்கப்பெண் மித்ரா

  தனது நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை மேம்படுத்தும் இலட்சியத்துடன், தைரியமும், அன்பும் நிறைந்த பெண்ணான மித்ரா கதாபாத்திரத்தில் நிமிஷா செங்கப்பா நடிக்கிறார். மேலும், ஒரு நேர்மையான பணக்கார கதாபாத்திரத்தில் அம்ருத் கலாம் நடிக்க, பழம்பெரும் நடிகர் பாம்பே ஸ்ரீதரன் - டாக்டர் ராமகிருஷ்ணனாக நடிக்கிறார்.

  ஜீல் நிறுவனம்

  ஜீல் நிறுவனம்

  இத்தொடர்களின் அறிமுகம் குறித்துப் பேசிய ஜீல் (ZEEL) நிறுவனத்தின், ஈ.வி.பி. மற்றும் தென் பிரிவின் தலைவர், சிஜூ பிரபாகரன் பேசுகையில், "எப்போதும் மாறிக்கொண்டே வரும் இன்றைய காலத்தில், அதற்கேற்ப மாறிவரும் உறவுகளைப் பற்றியும் பேசவேண்டும் என்கிற பொறுப்புடன், ஜீ தமிழ் உறவுகளை புதிய கோணத்தில் அணுகும் இந்த புத்தம்புதிய தொடர்களைத் துவங்கியுள்ளது. இவற்றின் மூலம், பெண்கள் எப்படி ஒருவரை ஒருவர் மேம்படுத்திக்கொள்ளலாம் என்பதையும் இக்கதைகள் முன்வைக்கும். ஒரு தொலைக்காட்சி சேனலாக நாங்கள் எங்களது நேயர்களுக்கு பொழுதுபோக்கினை மட்டும் வழங்காமல், நேயர்கள் தங்கள் வாழ்க்கையோடு பொருத்திப்பார்த்து, அதிலிருந்து ஊக்கத்தினை பெற்றுக்கொள்ளும் வகையிலான அர்த்தமுள்ள கதைகளையும் வழங்குவதே எங்களது தேடலாகும்.

  Recommended Video

  Grandma படத்தில் Vimala Raman Sonia Agarwal உடன் நடித்த அனுபவம் | Filmibeat Tamil
  தைரியமாக எதிர்கொள்ளும்

  தைரியமாக எதிர்கொள்ளும்

  இதனை மனதில் கொண்டு, ஒரு மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையிலான உறவில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்தக்காட்டும் நோக்குடன், பேரன்பு தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்வில் முன்பு நிகழ்ந்த ஒரு கசப்பான அனுபவத்தினைக் கடந்து, கடுமையான சவால்களைத் தைரியமாக எதிர்கொள்ளும் நம்பிக்கையளிக்கும் கதையாக 'தெய்வம் தந்த பூவே' உருவாகியுள்ளது. இன்று இந்த இரண்டு தொடர்களைத் துவங்கி வைக்கும் இத்தருணத்தில், எங்களது நேயர்கள் இதுபோன்ற புதிய பாதையை நோக்கி நடைபோடும் கதைகளை இனிவரும் ஆண்டுகளிலும் ஊக்குவிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்", என்று தெரிவித்தார்.டிசம்பர் 13 முதல் சுவாரஸ்யமான பேரன்பு மற்றும் தெய்வம் தந்த பூவே தொடர்களை ஜீ தமிழ் தொலைக்காட்சி மற்றும் Zee5 ஓடிடி தளத்திலும் காணமுடியும் .

  English summary
  Zee Tamil Planned to Introduce New Serials with more twist and turns
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X