ஜீ தமிழ் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி: உலகத் தமிழர்களுடன் கொண்டாட்டம்

By Mayura Akilan

பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. ஸ்ரீ தேவி நடித்த இங்கிலீஸ் விங்கிலீஸ் சிறப்பு திரைப்படம் பொங்கல் பண்டிகை தினத்தில் ஒளிபரப்பாகிறது.

உலகத் தமிழர்களுடன் பொங்கல் கொண்டாட்டம் நடிகர்கள் ஜெயம் ரவி, சந்தானம், ஆகியோரின் சிறப்பு பேட்டிகள் ஒளிபரப்பாகின்றன.

கிராமத்து மக்களுடன் ரோபோ சங்கர் கொண்டாடும் பொங்கல், சினிமா குழுவினருடன் தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் கொண்டாடும் பொங்கல் என சிறப்பு நிகழ்ச்சிகள் ஜனவரி 14,15 தேதிகளில் ஒளிபரப்பாகிறது

ஜெயம் ரவியுடன் பொங்கல்

ஜெயம் ரவியுடன் பொங்கல்

தை திருநாளில் காலை 6:30 மணிக்கு கலைமாமணி. டாக்டர். சீர்காழி சிவசிதம்பரத்தின் தெய்வீக மணம் கமழும் கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சி பக்திச் சங்கமம் ஒளிபரப்பாகிறது. காலை 7:00 மணிக்கு சிறப்பு ஒளிமயமான எதிர்காலம் ஒளிபரப்பாகிறது.

பொங்கல் பண்டிகையின் சிறப்பையும் அதனை கொண்டாட வேண்டிய காரணத்தையும் விளக்குகிறது. காலை 8:00 மணிக்கு ஜெயம்ரவியுடன் ஒரு நாள் பொங்கல் கொண்டாடுகின்றனர் ஜீ தமிழ் தொகுப்பாளர்கள். இந்த நாளில் தனது மனதுக்கு பிடித்த விஷயங்களை பகிர்வதுடன், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார் ஜெயம் ரவி.

ஸ்ரீதேவியின் இங்கிலீஸ் விங்கிலீஸ்

ஸ்ரீதேவியின் இங்கிலீஸ் விங்கிலீஸ்

நடிகை ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஷ் விங்கிலீஸ் சிறப்புத் திரைப்படம் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மதியம் 1:00 மணிக்கு சிறப்பு ஹோம் மினிஸ்டர் கிராமத்து மக்களுடன் ரோபோ ஷங்கர் நடத்தும் வேடிக்கை விளையாட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

பட்டாயா பொங்கல்

பட்டாயா பொங்கல்

துளசி சீரியலின் படப்பிடிப்பிற்காக தாய்லாந்தின் பட்டாயாவிற்கு சென்ற நட்சத்திரங்களின் கலகலப்பான கலந்துரையாடல் மதியம் 2 மணிக்கு பட்டாயா பொங்கலாக மலர்கிறது. இதைத் தொடர்ந்து பராக் பராக் வானவராயன் வல்லவராயன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வானவராயன் வல்லவராயன் படக்குவினருடன் கழுகு கிருஷ்ணா, ம.க.ப. ஆனந்த் இணைந்து கலக்கும் வேடிக்கை விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றனர்.

மச்சான் திரைப்பட நட்சத்திரங்கள்

மச்சான் திரைப்பட நட்சத்திரங்கள்

ஹலோ மச்சான்ஸ் நிகழ்ச்சி மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கருணாஸ், ஷெரில் பின்டோ இணைந்து நடிக்கும் மச்சான் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நட்சத்திரங்களுடன் ஒரு சிறப்பு சந்திப்பு இடம்பெறுகிறது. மாலை 4:00 மணிக்கு கல்லூரி காலங்கள் சிறப்புத் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

விஷால் உடன் ஒரு சந்திப்பு

விஷால் உடன் ஒரு சந்திப்பு

சமரில் நான் - விஷாலுடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பிரபல நடிகர் விஷால் தனது தோழி த்ரிஷாவுடன் இணைந்து நடித்துள்ள சமர் படம் குறித்தும், படப்பிடிப்பின் போது நடைபெற்ற சுவையான சம்பவங்கள் குறித்தும் பகிர்ந்து கொள்கிறார். நான் ராஜாவாக போகிறேன் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் பிரித்வி முதன்முறையாக இயக்குனராக களமிறங்கியுள்ள படம் நான் ராஜாவாக போகிறேன். இப்படம் உருவான விதம் குறித்து படத்தின் நாயகன் நகுல், நாயகி சாந்தினி, இயக்குனர் பிரித்வி பகிர்ந்து கொள்கின்றனர்.

ரோஜாவின் லக்கா கிக்கா

ரோஜாவின் லக்கா கிக்கா

நகைச்சுவையில் அசத்தும் ஸ்டாண்டப் அப் காமெடியன்களின் கலட்டாக்கள் நிறைந்த சிறப்பு நிகழ்ச்சி டூப் பொங்கல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நடிகை ரோஜா தொகுத்து வழங்கும் சிறப்பு லக்கா கிக்கா ஜனவரி 14, 15 ஆகிய இரண்டு தினங்களும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சிலந்தி சிறப்புத் திரைப்படம்

சிலந்தி சிறப்புத் திரைப்படம்

பொங்கல் தினத்தில் இரவு 10:30 மணிக்கு சிலந்தி சிறப்புத் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. மோனிகா கவர்ச்சியாக நடித்த இந்த திரைப்படம் த்ரில்லர் நிறைந்த கதை.

இசையோடு பொங்கல்

இசையோடு பொங்கல்

சரிகமபா நிகழ்ச்சியில் தங்களின் இனிய குரலால் பார்வையாளர்களை கவர்ந்த போட்டியாளர்கள் திரைப்பட பின்னணி பாடகர் வேல் முருகன் இணைந்து வழங்கும் சிறப்பு இசை நிகழ்ச்சி காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. காலை 10:00 மணிக்கு : காதல் சரித்திரம் - சிறப்பு திரைப்படம் ஒளிபரப்பாகிறது. இதில் வருன் சந்தேஷ், அனிதா இணைந்து நடித்துள்ளனர்.

சிறப்பு அஞ்சறைப்பெட்டி

சிறப்பு அஞ்சறைப்பெட்டி

பண்டிகை தின சிறப்பு உணவு வகைகளை தயாரிக்கும் முறையை விவரிக்கும் சிறப்பு அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சிமதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இதைத் தொடர்ந்து பிட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி தனது அடுத்த படம் குறித்து பகிர்ந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி சூது கவ்வும் ஒளிபரப்பாகிறது.

மதுரை வீரன் – திரைப்படம்

மதுரை வீரன் – திரைப்படம்

ஜித்தன் ரமேஷ், சலோனி இணைந்து நடித்த மதுரை வீரன் சிறப்புத் திரைப்படம் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மாலை 7:00 மணிக்கு கண்ணா பொங்கல் தின்ன ஆசையா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ள நடிகர் சந்தானம் இப்படம் உருவான விதம் குறித்தும், படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற சுவையான சம்பவங்களையும் காமெடியுடன் விளக்குகிறார். இரவு 10:30 மணிக்கு நடிகர் சுரேஷ் கோபி கொலை வழக்கு ஒன்றின் மர்ம முடிச்சுகளை சுவாரஸ்யமாக அவிழ்க்கும் டிடெக்டிவ் த்ரில்லர் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X