நிறைவுக்கு வரும் ஜீ தமிழின் செம்பருத்தி தொடர்.. விரைவில் க்ளைமாக்ஸ்!
சென்னை : தமிழில் 1000 எபிசோட்களை தாண்டிய தொடர்களில் ஒன்றாக ஜீ தமிழின் செம்பருத்தி தொடர் காணப்படுகிறது.
இந்தத் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் இந்தத் தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஜீ தமிழ் சேனல் பல புதிய தொடர்களை களமிறக்கி வருகிறது. ஆயினும் செம்பருத்தி தொடர் நிறைவுபெற உள்ள செய்தி ரசிகர்களை ஏமாற்றம் கொள்ள செய்துள்ளது.

சிறப்பான தொடர்கள்
தமிழ் சேனல்களில் நிகழ்ச்சிகள் மட்டுமின்றி தொடர்களும் ரசிகர்களின் சிறப்பான ஆதரவுடன் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சில தொடர்கள் 1000 எபிசோட்களை தாண்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அந்த லிஸ்ட்டில் ஜீ தமிழின் செம்பருத்தி தொடரும் ஒன்று.

செம்பருத்தி தொடர்
இந்தத் தொடர் தற்போது 1400 எபிசோட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடருக்கென்று தனிப்பட்ட ரசிகர்கள் வட்டம் காணப்படுகிறது. தொடரின் பல திருப்பங்களை கொண்ட கதை அவர்களை கவர்ந்திழுத்து வருகிறது. ஆனால் இந்தத் தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம்
நீண்ட நாட்களாக ரசிகர்களை தன்னுடைய சுக துக்கங்களில் பங்கேற்க வைத்த இந்த சீரியலின் கேரக்டர்கள் விரைவில் அவர்களிடம் இருந்து விடைபெற உள்ளது அவர்களை ஏமாற்றம் செய்ய வைத்துள்ளது. சீரியலின் க்ளைமாக்ஸ் காட்சி குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ப்ளாஷ்பேக் காட்சிகள்
தற்போது இந்தத் தொடரில் ப்ளாஷ்பேக் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. நாராயணன், தர்மலிங்கம் ஆகியோர் இந்தக் கதையை எழுதியுள்ளனர். சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த இந்தத் தொடர் கதாநாயகன் மாற்றத்திற்கு பிறகு கொஞ்சம் பின்வாங்கத்தான் செய்தது.

சிறப்பான கேரக்டர்கள்
இந்தத் தொடர் ஜீ தமிழில் சிறப்பான டிஆர்பி ரேட்டிங்கை தொடர்ந்து கொடுத்து வந்தது. ஹீரோ, ஹீரோயினாக நடித்த அக்னி மற்றும் ஷபானா, அகிலாண்டேஸ்வரியாக நடித்துவரும் பிரியா ராமன் உள்ளிட்டவர்கள் இந்த தொடரின் அட்ராக்ஷன். இவர்களை வைத்தே இந்தக் கதை சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது.

அடுத்தடுத்த புதிய தொடர்கள்
தற்போது அடுத்தடுத்த சில சீரியல்களை களமிறக்கி வருகிறது ஜீ தமிழ். அமுதாவும் அன்னலட்சுமியும், மாரி ஆகிய 2 சீரியல்களை கடந்த திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பி வருகிறது. இதேபோல மீனாட்சி பொண்ணுக என்ற புதிய தொடரை விரைவில் ஒளிபரப்ப உள்ளது. இந்தத் தொடர்கள் செம்பருத்தி தொடரை ஈடு செய்யுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











