16 திருப்பங்கள்.. 4 மணிநேரங்கள்.. செரும்பருத்தி தொடரோட க்ளைமாக்ஸ் எப்படி இருக்கப் போகுது தெரியுமா!

சென்னை : தமிழில் 1000 எபிசோட்களை தாண்டி ரசிர்களை தொடர்ந்து கவர்ந்து வந்த ஜீ தமிழின் செம்பருத்தி தொடர் நிறைவை எட்டவுள்ளது.

இந்தத் தொடரின் இறுதி எபிசோட் வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிமுதல் ஒளிபரப்பாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ல் துவங்கப்பட்ட இந்தத் தொடர் தற்போது 1420க்கும் மேற்பட்ட எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.

செம்பருத்தி தொடர்

செம்பருத்தி தொடர்

ஜீ தமிழின் முக்கியமான மற்றும் முதன்மையான தொடராக கடந்த 5 ஆண்டுகளை கடந்து ஒளிபரப்பாகி வந்தது செம்பருத்தி தொடர். இந்தத் தொடர் 1420 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது. ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தொடராகவும் தொடர்ந்து இருந்து வருகிறது.

செம்பருத்தி க்ளைமாக்ஸ்

செம்பருத்தி க்ளைமாக்ஸ்

இந்நிலையில் இந்தத் தொடர் விரைவில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. இதையடுத்து ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். ஆனாலும் தொடரை தொடர்ந்து ரசித்து வந்தனர். இந்நிலையில் இந்தத் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை தனது இறுதி எபிசோட்டை ஒளிபரப்பவுள்ளது.

க்ளைமாக்ஸ் எபிசோட்

க்ளைமாக்ஸ் எபிசோட்

பிரியா ராமன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்து வந்த இந்தத் தொடரின் இறுதி எபிசோட் வரும் ஜூலை 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது. தொடர்ந்து 4 மணிநேரம் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இதன் பிரம்மாண்ட வெற்றிக் கொண்டாட்டமும் நடைபெறவுள்ளது.

பிரம்மாண்ட இறுதி எபிசோட்

பிரம்மாண்ட இறுதி எபிசோட்

ஜீ தமிழின் எண்ணற்ற நட்சத்திரங்களும் இந்த நிகழ்சசியில் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழின் முன்னணி தொடராக இருந்து வந்த இந்தத் தொடர் தினந்தோறும் 1.7 கோடி பார்வையாளர்களை பெற்றிருந்தது. தொடர்ந்து சேனலின் முன்னணி தொடராக இருந்து வந்த செம்பருத்தி தொடர்தான் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.

1420 எபிசோட்களை கடந்த செம்பருத்தி

1420 எபிசோட்களை கடந்த செம்பருத்தி

ஜீ தமிழ் சேனல் பல புதிய தொடர்களை களமிறக்கி வரும் நிலையில், அதன் பிரதான தொடர் தற்போது நிறைவடையவுள்ளது. புதிய தொடர்கள் வந்தபோதிலும் செம்பருத்தித் தொடரை ரசிகர்கள் கண்டிப்பாக மிஸ் செய்வார்கள். தமிழின் 1000 எபிசோட்களை கடந்த சீரியல்கள் சிலவற்றில் செம்பருத்திக்கு முக்கியமான இடம் உண்டு.

Recommended Video

Bakyalakshmi | பிரபல Hero-வுடன் இணைந்து நடிக்கிறார், ஆர்வத்தில் ரசிகர்கள்! *TV | Filmibeat Tamil
ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

நீண்ட நாட்களாக ரசிகர்களை தன்னுடைய சுக துக்கங்களில் பங்கேற்க வைத்த இந்த சீரியலின் கேரக்டர்கள் விரைவில் அவர்களிடம் இருந்து விடைபெற உள்ளது அவர்களை ஏமாற்றம் செய்ய வைத்துள்ளது. ஆனாலும் இந்த க்ளைமாக்சை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். காரணம் கடந்த சில தினங்களாக இந்தத் தொடர் சிறப்பான எபிசோட்களை தந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X