சீரியல் கொடுமைகள்: கிளிப்புக்கு தாலி.. ஆப்ரேஷனுக்கு மயக்க மருந்தே வேண்டாம்.. யாரை முட்டாளாக்குறீங்க?

சென்னை: சினிமாவை விட தொலைக்காட்சி தொடர்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக இருக்கிறது. தினசரி வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் பிரபலமான படத்தின் காட்சியை காப்பி அடிப்பது, காட்சியை சற்று மாற்றி எடுப்பது என அரைச்ச மாவையே அரைத்துக்கொண்டு இருப்பார்கள். அதோடு மட்டுமில்லாமல் புதுசா எதையாவது செய்கிறேன் என பல சொதப்பல்களை செய்து மக்களை கொடுமைப்படுத்துவார்கள். அப்படி பல சீரியல்களில் நடந்த கொடுமைகளை பார்க்கலாம்.

Tamil serial Roast kodumaigal
Photo Credit:

கார்த்திகை தீபம்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் உலகையே அதிரவைத்த காட்சி ஒன்று தற்போது ரசிகர்களை சிரிப்பில் மூழ்கடித்துள்ளது. அதாவது விபத்தில் சிக்கி ICUவில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார் ரேவதி. ஒரு மணி நேரத்தில் ஆப்ரேஷன் செய்யவில்லை என்றால் ரேவதி பிழைப்பதே கஷ்டம். ஆனால், ரேவதியின் கண் இமை மூட மாட்டேங்குதே மருத்துவர் சொல்ல, அம்மா சாமுண்டீவரி அழுது பேசுறாங்க, அப்பா, அக்கா, தங்கை என ஒட்டுமொத்த குடும்பமும் கதறி அழுது பேசுறாங்க. ஆனால், இறுதியில் ஹீரோ கார்த்தி, ரேவதி... நீ கண் இமையை மூடலேன்னா நான் உயிரோட இருக்க மாட்டேன்னு dialogue விட்டதும்...ரேவதி கண் இமையை மூடிவிட்டார். இந்த சீனைப்பார்த்த 'நெட்டிசன்ஸ் ஆப்ரேஷனுக்கு மயக்க மந்தே வேண்டாம், ஹீரோ பேசினாலே போதும் இது என்னடா கொடுமை என்கின்றனர்.

அயலி: கார்த்திகை தீபம் இப்படி என்றால், அதே தொலைக்காட்சியில் வரும் அயலி சீரியலில். அயலியும் சிவாவும் கணவன் மனைவியாக நடித்து வருகின்றனர். இதற்காக அயலி தனக்கு தானே கழுத்தில் தாலிக்கட்டிக்கொள்கிறாள். இந்த விஷயம் தெரிந்த மரகதம் பாட்டி கேட்க, அயலி ஏதேதோ சொல்லி அவர்களை நம்ப வைத்துவிடுகிறாள். இதனால்,

அயலியின் எதிரிகள் அயலி தூங்கிக்கொண்டு இருக்கும் நேரத்தில் தாலியை அறுத்து விடுகின்றனர்.

Tamil serial Roast kodumaigal
Photo Credit:

கிளிப்புக்கு தாலி: அயலி கழுத்தில் தாலி இல்லாததை பார்த்த மரகதம் பாட்டி, தாலி அறுந்தது பெரிய அபசகுணம், இதனால், பரிகார பூஜை செய்ய வேண்டும் என சாமியாரை வீட்டிற்கு வர வைத்து அயலியின் கழுத்தில் சிவாவை தாலி கட்ட சொல்கின்றனர். இதில் இருந்து எப்படி தப்பிப்பது என சிவா யோசிக்க அப்போது அயலி, சிவா நீ என் கழுத்தில் தாலி செயிலை போட்டாத்தான் நமக்கு கல்யாணம் ஆனதா அர்த்தம், நீ கழுத்தில் தாலி செயினை போடாமல் என் தலையில் இருக்கும் கிளிப்பில் போடு, தான் அதை சரி செய்வது போல கழுத்தில் போட்டுக்கொள்கிறேன் அவங்க எல்லாம் நமக்கு கல்யாணம் ஆகிவிட்டதாக நினைத்து விடுவார்கள் என்று சொல்ல சிவாவும் கிளப்புக்கு தாலி கட்டுகிறார். இதைப்பார்த்தா பேன்ஸ் யாரை முட்டாளாக்குறீங்க? கழுத்துக்கு தாலி வேண்டாம்... கிளிப்புக்கே போதும் என்ற புதிய சமூகவியல் விதியை உருவாக்கியிருக்கிறது அயலி சீரியல் என ட்ரோல் செய்து வருகின்றனர்.

Tamil serial Roast kodumaigal
Photo Credit:

மூன்று முடிச்சு: லாஜிக்குக்கு "rest in peace" சொல்லி, இமெஜினேஷக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளித்துள்ள சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல். ஹீரோவின் தங்கையின் கல்யாண பத்திரிக்கை பூஜை அறையில் இருந்து எடுத்து குப்பை தொட்டியில் வீசி விடுகிறான் வில்லன். இதை பார்த்த ஒரு நல்லவர் போலீசுக்கு தகவல் கொடுக்க அந்த பத்திரிக்கை பாஸ் மீண்டும் ஹீரோவிடம் வந்து சேருகிறது. இதெல்லாம் trailer தான்... main picture இன்னும் இருக்கு என்று சொல்வது போல, பத்திரிக்கையை யார் குப்பையில் போட்டார்கள் என்பதை கண்டுபிடிக்க ஹீரோ "CID level" திட்டத்தை போடுகிறார்.

என்ன எழவுடா இது: பத்திரிக்கை பெட்டியின் மேல் ஒரு மணி (bell) வைச்சு, அதில் நூல் கட்டி, அந்த நூலை பூ4 அறையில் இருந்து வாசலில் இருக்கு காரின் கதவில் சுற்றுறார். ஐடியா என்னன்னா.. யாராவது box-ஐ எடுத்துக்கொண்டு, கார் கதவை திறந்தா... டிங் டிங் என மணி அடிக்கும். அந்த சத்தத்தை கேட்டு குற்றவாளியை பிடித்துவிடலாம் என்பது பிளான். இதை கொஞ்சம் கூட கூட்டமே இல்லாம எடுத்து வைத்து இருக்கிறார்கள். இதைப்பார்த்த ஆடியன்ஸ்.... என்ன எழவுடா இது? என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X