‘’வச்ச குறி தப்பாது டா’’… சர்வைவர் இன்றைய ப்ரோமோ!
சென்னை : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் தற்போது 68 நாட்களை கடந்துள்ளது.
தற்போது இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், புதுவிதமா பானை உடைக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகி உள்ள இந்த ப்ரோமோவால் இன்றைய எபிசோடு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரிவார்ட் சேலன்ஞ்
சர்வைவரில் ரிவார்ட் சேலன்ஞ் நேற்று முன் தினம் நடைபெற்றது, அந்த சேலன்ஞ்சிற்காக போட்டியாளர்கள் அணிகள் பிரிக்கப்பட்டது. இதில், விக்ராந்த் இனிகோ ஒரு அணியாகவும், உமாபதி, லேடிகாஷ், ஒரு அணியாகவும், நாராயணன், வனேசா ஒரு அணியாகவும் அம்ஜத், விஜி ஒரு அணியாகவும் பிரிக்கப்பட்டனர்.

உமாபதி லேடிகாஷ் வெற்றி
இதில்,போட்டியாளர்கள் இடுப்பில் கயிற்றை கட்டிக்கொண்டு கடலுக்குள் மிதந்து கொண்டு இருக்கும் பலகையில் ஒவ்வொரு சின்னம் இருக்கும் அந்த சின்னத்தை சரியாக வரிசைப்படுத்த வேண்டும் அதை, வரிசை சரியாக உள்ளதா என்பதை அணித்தோழரிடம் கேட்ட விவரங்களை வைத்து இன்னொரு போட்டியாளர், கலைந்திருக்கும் உருவங்களை சரியான வரிசையில் அடுக்க வேண்டும். யார் முதலில் சரியாக அடுக்குகிறாரோ அவரே வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். இந்த ரிவார்ட் சேலன்ஞ்சில்,உமாபதி லேடிகாஷ் கூட்டணி விரைவாக முடித்து வெற்றி பெற்றனர்.

அம்ஜித்திற்கு பிறந்தநாள்
சர்வைவர் நிகழ்ச்சியில் நேற்று அம்ஜத் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அம்ஜித்திற்கு அவரது மனைவி, அவரது அப்பா , அம்மா டேப்கிகார் பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள். குடும்பத்தின் குரலைக்கேட்ட அம்ஜ்த் ஆனந்தத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

குடும்பத்தினர் வாழ்த்து
மேலும், விக்ராந்த், உமாபாதி, நாராயணன், வனேசா, லேடிகாஸ் மற்றும் விஜியின் குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்துக்கூறினர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருவதாகவும், காட்டில் நீங்கள் கஷ்டப்படுவதை பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும் இருப்பினும் நீங்கள் வெல்ல வேண்டும்என்று ஒவ்வொரு குடும்பத்தினரும் உத்வேகம் அளித்தனர்.

மூன்றாம் உலகம்
மூன்றாம் உலகத்தில் இருக்கும் ஐஸ்வர்யா, சரண் மற்றும் நந்தா மூவரு அண்ணாச்சி பழத்தை சுற்றி விட்டு, ஒருவரை ஒருவரை மாற்றி மாற்றி கேள்வி கேட்டு விளையாடினர். இதில், சரண் அண்ணாச்சி பழத்தை சுற்றி விட அது நந்தாவிடம் நிற்கிறது. இதையடுத்து நந்தா சரணை பார்த்து உனக்கு பிடிக்காத போட்டியாளர் யார் என்று கேட்கிறார். இதற்கு சரண் விக்ராந்த்தை எனக்கு சுத்தமா பிடிக்காது என்றார்.
Recommended Video

இன்றைய ப்ரோமோ
இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், ஒவ்வொரு போட்டியாளரின் பெயரிலும் 3 பனைகள் கொடுக்கப்படுகிறது. இதை போட்டியாளர்கள் தூரத்தில் இருந்து அடித்து உடைக்க வேண்டும்.இதில் எந்த போட்டியாளரின் பனை உடையாமல் இருக்கிறதோ அவர் தான் வின்னர் என்ற ப்ரோமோ வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications