தீபா உருவத்தில் வந்த கீதா.. அடுத்து என்ன ஆகுமோ பயத்தில் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், தீபா காணாமல் போன நிலையில், கீதாவை தீபாவாக நடிக்க வைக்க கார்த்திக் திட்டம் போடுகிறான். இதை கீதாவிடம் சொல்ல அவளும், போலீசிடம் இருந்து தப்பிக்க இதுதான் சரியான ஐடியா என்று இந்த திட்டத்திற்கு ஓகே சொல்கிறாள்.
இதைத்தொடர்ந்து, அபிராமியை பார்க்க கார்த்திக், கீதாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வருகிறான், அதாவது கீதா வந்ததும் அவளை தீபாவாக நினைத்து மீனாட்சி கட்டிப்பிடித்து வரவேற்கிறாள். அதே சமயத்தில் ஐஸ்வர்யா தீபாவை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இவ எப்படி இங்கு வந்தா? உண்மை எல்லாம் வெளிய வந்து மாட்டிப்போமோ என பதறுகிறாள். இதைத்தொடர்ந்து இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில்,அபிராமியை பார்த்துவிட்டு கார்த்திக் வீட்டிற்கு காரில் தீபாவை வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அப்போது, கார்த்திக் எப்படி தீபாவாக நடிக்க ஒத்துக்கிட்டீங்க என்று கேட்க, நீங்க உங்க அம்மாவுக்காக என்று சொன்னதும் என் மனசு மாறிடுச்சு என்று சொல்லி சமாளிக்கும் கீதா இதுல என்னுடைய சுயநலமும் இருக்கு. என்னை காப்பாத்திக்கிறதுக்காகத் தான் நான் இப்படி நடிக்கிறேன் என மைண்டு வாய்ஸில் தனக்குத் தானே சொல்கிறாள்.
கண்டிஷன் போடும் தீபா: பிறகு கார்த்திக் நீங்க யாரு என்ன எது என்று விசாரிக்க கீதா கோபமாகி காரை நிறுத்த சொல்கிறாள். நான் தீபாவாக தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றால், என்னை பத்தி எந்த விஷயத்தையும் கேட்கக்கூடாது என்று கோபப்பட்டு கத்தி கண்டிஷன் போடுகிறாள். உடனே, கார்த்தி மன்னித்துவிடுங்கள் இனிமேல் நான் எந்த கேள்வியும் கேட்கமாட்டேன் என்று சொல்லி அவளை வீட்டுக்கு அழைத்து வருகிறான்,
அலப்பறை செய்யும் கீதா: வீட்டைப்பார்த்த கீதா, இதுதான் உங்க வீடா நல்ல இருக்கு என்கிறாள், பிறகு கார்த்திக் எனக்கு ரொம்ப தலைவலியா இருக்கு, எனக்கு காபி குடிக்கணும் போல இருக்கு, எனக்கு காபி போட்டு கொண்டுவாங்க என்று சொல்ல, கார்த்திக் ஷாக்காகி கீதாவை பார்க்க, என்ன பாக்குறீங்க, எனக்கு காபி போடத் தெரியாது, குடிக்க மட்டும்தான் தெரியும் நான் எங்க வீட்டுல கிச்சன் பக்கமே சென்றது இல்லை என சொல்கிறான். இதை கேட்ட கார்த்திக் வேறுவழியில்லாமல், இருங்க போட்டுத்தருகிறேன் என்று சொல்விட்டு செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











