நாம குடும்பத்தோடு சாகணுமா? வேதனையில் புலம்பிய சண்முகம்.. அண்ணா சீரியல்!

சென்னை: அண்ணா சீரியலில், சண்முகத்தின் குடும்பத்தை வேரோடு அறுக்க நினைக்கும் சௌந்தரபாண்டி, வேதாவிடம், நீ முத்துப்பாண்டியை காதலி வலையில் விழவை என்கிறார். அப்போது வேதா, நடக்குற விஷயத்தை சொல்லுங்க மாமா என்று சொல்ல, ஏன் ஆம்பளைங்கதான் விவாகரத்து ஆனதும் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க வேண்டுமா பெண்கள் பண்ணிக்க கூடாதா என்று சொல்ல, அப்போது வேதா, முத்துப்பாண்டி இசக்கியை தலையில் தூக்கி வெச்சி இருக்கான், இதெல்லாம் நடக்காது என்கிறாள். அப்போது, அது எல்லாம் நடக்கும், நீ முத்துப்பாண்டி மனசுல இடம் பிடிச்சிட்டா, நீ இந்த வீட்டு மருமகளாகி விடலாம் என்று சொல்ல வேதா அதற்கான வேலைகளை கவனிக்க செய்வதாக சொல்கிறாள்.

இன்றைய எபிசோடில், கல்வித்துறை அலுவலகத்தில் ரத்னாவை அழைத்து ஸ்கூலில் நடந்தது என்ன என்பதை குறித்து விசாரிக்கின்றனர். பின் சண்முகம் உனக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா என்று கேட்க ரத்னா கஞ்சா அடித்து சிக்கிக்கொண்ட சுரேஷின் அப்பா அம்மா இதுதான் சந்தேகம் இருப்பதாக சொல்கிறாள். பிறகு கனியை கூப்பிட்டு இதுகுறித்து விசாரிக்க கனி தினேஷின் நண்பன் ஒருவனை பற்றி சொல்கிறாள். சண்முகம் அந்த பையனிடம் விசாரிக்க எப்பவும் சுரேஷோட மாமா தான் கூட்டிட்டு வந்து விட்டுட்டு போவாரு என்று சொல்ல அந்த நபரை பிடித்து விசாரிக்க கேள்வித்தாள்களை எடுத்தது அவன்தான் என்பது தெரிய வருகிறது. பிறகு கல்வித் துறை அலுவலகத்தில் சொன்ன நேரத்தில் சண்முகம் கேள்வித்தாள்களை ஒப்படைத்து ரத்னாவின் ஸ்கூலை மீட்டெடுக்கிறான். வெளியே வந்த சண்முகத்திடம் அந்த நபர் இது எல்லாம் உங்க மாமா சௌந்தரபாண்டி தான் செய்ய சொன்னார் என்று சொல்ல சண்முகம் அதைக் கேட்டு அதிர்ச்சியும் கோபமும் அடைகிறான்.

Zee tamil Anna
Photo Credit:

மனம் வருந்திய சண்முகம்: பிறகு சண்முகம் பரணியிடம், நான் இதற்கு முன் புடவை வியாபாரம் செய்தேன், அந்த துணிகளை வாங்குவதற்காக குஜராத் சென்றேன். ஒரு முறை நான் குஜராத் சென்ற போது அங்கு கலவரமாகிவிட்டதால், அங்கிருந்த சேட் ஒருவர் என்னை அவரின் சொந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று அவரின் வீட்டிலேயே என்னை தங்க வைத்தார். நான் வெளியில் படுத்துக்கொள்கிறேன் என சொன்னேன். ஆனால், அவரோ இங்கு புலி நடமாட்டம் அதிகமாக இருக்கும். அதனால் வீட்டுக்குள் படு என சொன்னார்.

நாம சாகணுமா: இங்கு இரவில் புலி நடமாடும், ஆனால், அந்த புலி மனிதர்களை ஒருநாளும் வேட்டையாடியதே இல்லை. நாய், பூனை போன்ற மற்ற விலங்குகளை தான் வேட்டையாடும் என சொன்னார். அதைக்கேட்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு புலிக்கே மனிதர்களை வேட்டையாடக்கூடாது என்ற எண்ணம் இருக்கும்போது. உன் அப்பன் இந்த குடும்பத்தை வேட்டையாட வேண்டுமென ஏன் நினைக்கிறார். இப்படி ஒரு கொடூரமான மனப்பான்மையோடு ஏன் இருக்கிறார். நம குடும்பத்தோடு செத்தான் அவன் நிம்மதியா இருப்பானா.. அப்படி இந்த குடும்பத்தை பழி தீர்க்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறார் என வருத்தப்பட்டு சொல்கிறான். இதை கேட்டு பரணி வருத்தம் அடைகிறாள். உங்க அப்பா ஸ்கூலை எதுக்கு அழிக்கணும்னு நினைக்கணும்? இதுல ஏதோ சதி இருக்கு என சந்தேகம் கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X