நீ எல்லாம் ஆம்பளையா? சண்முகத்தை அசிங்கப்படுத்திய பாண்டியம்மா.. அண்ணா சீரியல்!
சென்னை: அண்ணா சீரியலில், பாக்கியம் சண்முகம் வீட்டிற்கு வந்து இசக்கிக்கு மருந்து கொடுப்பது பற்றி பேசுகிறாள். அதுக்காக வீட்டிற்கு கூட்டிட்டு போறேன் என்று சொல்ல மருந்து கொடுக்கிறதா இருந்தா இங்கே கொடுங்க என்று முத்துப்பாண்டி சொல்கிறான். பாக்கியம் அது முறை இல்ல... வீட்டிற்கு கூட்டிட்டு போய் தான் மருந்து கொடுக்கணும் என்று சொல்கிறாள். முத்துப்பாண்டி உன் புருஷனை நம்பி எல்லாம் இசக்கியை அனுப்ப முடியாது என்று சொல்ல இசக்கி தனக்கும் இதெல்லாம் நடக்கணும்னு ஆசையா இருப்பதாக சொல்கிறாள். இதனால் முத்துப்பாண்டி நாளைக்கு காலையில் 4 மணிக்கு நானே அவளை வீட்டிற்கு கூட்டிட்டு வரேன் என்று சொல்லி அடுத்த நாள் அழைத்து செல்ல பாக்கியம், இசக்கிக்கு தலைக்கு குளிக்க வைத்து சாம்பிராணி போட்டு மருந்து கொடுக்கிறாள்.
இன்றைய எபிசோடில், இசக்கிக்கு மருந்து கொடுக்க வந்த பாட்டி, பரணிக்கு எப்போது நான் மருந்து கொடுப்பது என்று கேட்கிறார். இசக்கிக்கு முன்னாடி, பரணிக்குத்தான் கல்யாணம் ஆச்சு முதல்ல உனக்கு தான் மருந்து கொடுத்து இருக்கணும் என்று பரணியிடம் பேச, சௌந்தரபாண்டியன் அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்று சொல்லி சிரிக்கிறான். மேலும், பொண்டாட்டிக்கு தாலி கட்டிவிட்டால் போதுமா, காலா காலத்தில் நடக்க வேண்டியது நடக்க வேண்டாமா? அப்போது,பாண்டியம்மா ஆம்பிளைனா, சண்டை போட்டு மண்டைய உடைக்கிறவன் இல்ல, ஆம்பிளைனா கல்யாணமானதும் பத்து மாசத்துல பொண்டாட்டிக்கு புள்ளை கொடுப்பவன் தான் ஆம்பிளை என சொல்லி , சண்முகத்தை அசிங்கப்படுத்துகிறாள். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த பரணி, எப்போ குழந்தை பெத்துக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும், நீங்க உங்க வேலைய மட்டும் பார்த்தா போதும் என்று, சண்முகத்தை சமாதானப்படுத்துகிறாள்.

இன்றைய எபிசோட்: பின் மருந்து கொடுக்க வந்த பாட்டி சௌந்தரபாண்டியை தனியாக அழைத்துச் சென்று, உனக்கும் சண்முகத்துக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம். ஆனால், பரணி கல்யாணமாக இத்தனை வருஷமாகியும் கர்ப்பமாகாமல் இருப்பது சரியில்லை. முதலில் உன் மகள் பொண்ணு கர்ப்பமாகணும், நம்ம வீட்டுக்கு அடுத்த வாரிசு வரணும் என்று சொல்ல தூரத்திலிருந்து இதை பார்த்த சண்முகம் தவறாக புரிந்து கொள்கிறான். கொஞ்ச நேரத்தில் இசக்கிக்கு பாட்டி மருந்து கொடுக்க, அவள் வாந்தி எடுக்கிறாள். சௌந்தரபாண்டி தான் ஏதோ செய்து விட்டான் என குற்றம் சாட்ட கடைசியில் இது அவனுடைய கற்பனை என தெரியவருகிறது. பிறகு இசக்கிக்கு ஒரு வழியாக நல்லபடியாக மருந்து கொடுக்கப்படுகிறது.

நடக்கப்போவது என்ன: இன்னொரு பக்கம் வீரா, போலீசாக வேலையில் சேர தம்முடைய அப்பா வைகுண்டத்தை அழைத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு கிளம்புகிறாள். வைஜெயந்தி மாலா இரண்டு ரவுடிகளை ஏற்பாடு செய்து வீரா மீது FIR போடுவதற்காக ஏற்பாடு செய்கிறார். இங்கே வைஜெயந்தி மாலா ரவுடிகளிடம் ஒரு நகையை கொடுத்து வீரா, வைகுண்டம் ஏறும் பஸ்ஸில் ஏறி ஒரு திட்டத்தை சொல்லி வீராவின் பையில் நகையை வைத்து அவளை திருட்டு கேசில் உள்ளே தள்ள திட்டம் போடுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











