வீரா மீது பொய் கேஸ் போடும் வைஜெயந்தி.. பேயாட்டம் ஆடிய சண்முகம்.. அண்ணா சீரியல்!

சென்னை: வைஜெயந்தி திட்டத்தின் படி ரவுடிகள் நகையை வீராவின் பையில் போட்டு விடுகின்றனர். அடுத்து அந்த பெண் நகையை காணவில்லை என சத்தம் போடுகிறாள். இப்போது தான் நகையை கடையில் இருந்து வாங்கிக் கொண்டு வந்தேன் என்று அந்த பெண் அழுது கூப்பாடுபோடுகிறாள். இதையடுத்து, பேருந்தில் இருந்த வீரா, அந்த பெண்ணை சமாதானப்படுத்தி வண்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு விட சொல்கிறாள். ஸ்டேஷனுக்கு வந்ததும் ஒவ்வொருத்தரையும் பரிசோதனை செய்கிறார் வைஜெயந்தி.

அப்போது யாரிடமும் நகை இல்ல, பேருந்தில் யாரிடமும் நகை இல்லை, நீங்கள் வழியில் எங்காவது தவறவிட்டு இருப்பீர்கள் என்று சொல்ல, அந்த ரௌடி, வீராவின் பையை மட்டும் சோதனை போடவில்லை என சொல்ல, அப்போது, கான்ஸ்டபில், இது யார் தெரியுமா, இவங்களையே சோதனைபோடவேண்டுமா என்று கேட்க. வைஜெயந்தி வீராவின் பையை சோதனை போடுகிறாள். அதில், நகை இருக்கிறது. இதைப்பார்த்து, வீரா அதிர்ச்சி அடைந்து, இந்த நகை என் பையில் எப்படி வந்தது என்றே எனக்கு தெரியாது என சொல்கிறாள். இதையடுத்து இன்று நடக்கபோவதை பார்க்கலாம்.

Zee tamil Anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், ஓ நீ திருடியா... உனக்கு போலீஸ் வேலை கேக்குதா... என வீராவை கைது செய்யும் வைஜெயந்தி அவளை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து உட்கார வைக்கிறாள். முத்துப்பாண்டி எவ்வளவோ எடுத்து சொல்லியும், கேட்காத வைஜெயந்தி, நீ என்ன ஒரு திருடிக்கு சப்போர்ட் பண்ற என்று கேட்க, முத்துப்பாண்டி என்ன சொல்வது என்றே தெரியாமல் இருக்கிறான். இந்த விஷயம் அறிந்த கான்ஸ்டபில் சண்முகத்துக்கு போன் செய்து தகவல் சொல்ல சண்முகம் பேரதிர்ச்சி அடைகிறான். உடனே ஸ்டேஷனுக்கு கிளம்ப, இதெல்லாம் வைஜெயந்தியோட பிளானாத்தான் இருக்கும் என சந்தேகப்படுகிறான்.

யோசி யோசி நல்லா யோசி: இதையடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு ஷண்முகமும் பரணியும் வர, அப்போது ஷண்முகத்தை பார்த்த வீரா கதறி அழுது, அண்ணா எனக்கு எதுவுமே தெரியாது. யாரோ வேண்டுமென்றே என்னை இதில் மாட்டி விட்டார்கள் என்று கதறி அழுகிறாள். அப்போது பரணி, உனக்கு போலீஸ் மூளை.. அங்க கண்டிப்பா ஏதாவது தப்பா நடந்திருக்கும், சந்தேகப்படுற மாதிரி எதாவது நடந்துச்சா யோசி யோசி என யோசிக்க சொல்கிறான். வீராவும் சம்பவ இடத்தில நடந்தது என்ன என்று யோசிக்கிறாள். அப்போது, வீரா பஸ்சில் என் பக்கத்துல ஒருவன் இருந்தான் அவன் மேலத்தான் எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்று சொல்கிறாள். உடனே, முத்துப்பாண்டி, ஒரு ஓவியரை வரவைத்து, வீரா சொல்ல சொல்ல அந்த ஓவியரும் வரைந்து கொடுக்கிறார். அதைப்பார்த்த வீரா, அண்ணா, இவன் தான் பஸ்ஸில் என் பக்கத்தில் நின்று கொண்டு இருந்தான் என்று சொல்ல, சண்முகமும், முத்துப்பாண்டியும் அவனை தேடி செல்கின்றனர்.

Zee tamil Anna

வைஜெயந்தியின் வேலை: வீரா மேல கேஸ் எழுதிட்டா அவளுடைய கனவு மொத்தமா இல்லாமல் போய்டும், அதுக்கு முன்னாடி உண்மையை கண்டு பிடிக்கணும் என சொல்கிறான். பல இடத்தில் அந்த ரவுடியை தேடி அலைய ஒரு இடத்தில் சண்முக கண்ணில் அந்த ரவுடி பட்டுவிடுகிறான். அவனை பிடித்து அடி அடியென அடுத்து வருகிறான். அப்போது, என் தங்கச்சி மேல நீ திருட்டு பழி போட்டு இருக்க, உன்னை நான் சும்மாவே விடமாட்டேன். உண்மைய சொல்லு உன்னை இந்த வேலையை செய்ய சொன்னது யார் என்று கேட்டு, ரவுடி வலி தாங்க முடியாமல், வைஜெயந்தி மேடம் தான். நகையை கொடுத்து, வீராவின் பையில் போட சொன்னார்கள் என்ற உண்மையை சொல்லி விடுகிறான்.

உடனே சண்முகம், பார்த்தியா முத்துப்பாண்டி, ஏற்கனவே எனக்கு அந்த மேடம் மேல சந்தேகம் இருந்துச்சு. அவங்க வீராவை போலீசாகக் கூடாதுன்னு நினைக்கிறாங்க, அவங்க பையனை வீரா அசிங்கப்படுத்தியதால், அவங்க, என்ன வேணாலும் செய்வாங்கன்னு நான் நினைச்சேன். அதான், இப்படி ஒரு அசிங்கமான வேலைய செஞ்சிருக்காங்க என்கிறார். அப்போது, முத்துப்பாண்டி, நான் தான் ஏற்கனவே சொன்னேனே அந்த அம்மா லேசு பட்ட ஆளு கிடையாது. அவங்க, டிபார்ட்மெண்ட்லயே ரொம்ப மோசமானவங்கன்னு எல்லாருக்குமே தெரியும் அவங்ககிட்ட நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும் என்கிறான்.

சண்முகம் எடுத்த முடிவு: ஏலே முத்துப்பாண்டியன், இனிமே நாம ஜாக்கிரதையா இருக்க வேண்டியது இல்ல, அந்த மேடம் தான் ஜாக்கிரதையா இருக்கணும். என்னோட தங்கச்சிக்கு போலீஸ் வேலை கிடைக்கக்கூடாதுனு என்னென்ன வேலை பார்த்து இருக்காங்க. அவங்க செய்த இந்த அசிங்கமான வேலையை நாம அப்படியே பத்திரிக்கையாளர்கள் கிட்ட சொன்னா. அவங்க வேலைக்கு நம்ம ஆப்பு வச்ச மாதிரி ஆயிடும் என்று சொல்கிறான். இதைக்கேட்டு பதறிப்போன, பரணி, நீ அப்படியெல்லாம் எதுவும் செய்யாதே, வீராக்கு நல்லபடியா, அவ ஆசைப்பட்டபடி வேலை கிடைக்கணும். நீ ஏதாவது ஏடாகூடமா செய்து, அது பிரச்சனை ஆகிடப்போகுது என்று சொல்கிறாள். இல்ல பரணி இந்த விஷயத்தை நாம இப்படியே விட்டு விட்டால், பின்னாடி அது வீராக்கு பிரச்சனையாத்தான் இருக்கும். இதனால், இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும் என்கிறான்.

Zee tamil Anna

ஆப்பு வைத்த சண்முகம்: இதையடுத்து, சண்முகம் பத்திரிக்கையாளர்களிடம் ரவுடியை அழைத்து வந்து அனைத்து விஷயத்தையும் சொல்ல சொல்கிறான். ரவுடியும் பயத்தில் வைஜெயந்தி மேடம் தான் வீராவின் பையில் நகையை போட சொன்னார்கள் என்கிற உண்மையை சொல்லிவிடுகிறான். இந்த விஷயம் டிவியில் வர, அதைப்பார்த்து வைஜெயந்தி அதிர்ச்சி அடைகிறாள். அப்போது, வைஜெயந்திக்கு உயர் அதிகாரியிடம் இருந்து போன் வர, உடனடியாக வீரா மற்றும் சண்முகத்திடம் நீங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், உங்களை வேலையில் இருந்து தூக்கிவிடுவேன் என்கிறார். இதையடுத்து, வைஜெயந்தி, என் மகனை வீரா, ஒரு இடத்தில் அவமானப்படுத்தினால், அந்த ஆத்திரத்தில் வீராவிற்கு வேலை கிடைக்கக்கூடாது என்ற கோவத்தில் நான் இப்படி செய்து விட்டேன். வீரா மேல எந்த தப்பும் இல்லை, நான் செய்த தவறுக்காக இரண்டு பேரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்கிறாள்.

என்னதான் வைஜெயந்தி, இப்போது வீரா மற்றும் சண்முகத்திடம் மன்னிப்பு கேட்டு இருந்தாலும், இவர்களின் மேல் அளவுக்கு அதிகமாக இருந்த கோவம் தற்போது பகையாக மாறி இருக்கிறது. இனிவரும் காலங்களில் வைஜெயந்தி, சண்முகத்தை பழி தீர்க்க என்ன செய்யப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X