சிறையில் இருக்கும் தங்கை.. சண்முகத்தின் தரமான திட்டம்.. அண்ணா சீரியல்!

சென்னை: வைஜெயந்தியின் சதியால் வீரா கைது செய்யப்பட்ட நிலையில், போலீஸ் ஸ்டேஷனுக்கு ஷண்முகமும் பரணியும் வர, அப்போது ஷண்முகத்தை பார்த்த வீரா கதறி அழுது, அண்ணா எனக்கு எதுவுமே தெரியாது. யாரோ வேண்டுமென்றே என்னை இதில் மாட்டி விட்டார்கள் என்கிறாள். அப்போது பரணி, உனக்கு போலீஸ் மூளை.. அங்க கண்டிப்பா ஏதாவது தப்பா நடந்திருக்கும், சந்தேகப்படுற மாதிரி ஏதாவது நடந்துச்சா என்று யோசித்து சொல் என்கிறான். அப்போது, வீரா பஸ்சில் என் பக்கத்துல ஒருவன் இருந்தான் அவன் மேலத்தான் எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்று சொல்கிறாள். அவன் முகம் உனக்கு நியாபகம் இருக்கா என்று கேட்க நல்லாவே இருக்கு என்று சொல்கிறாள்.

இதையடுத்து, கனிக்கு நன்றாக ஒவியம் வரைய தெரியும் என்பதால், கனியை ஒவியம் வரை ஸ்டேனுக்கு அழைத்து வருகின்றனர். அப்போது கனி பதற்றமாக இருக்கிறாள் இதை பார்த்த பரணி, கனி நீ எதைப்பத்தியுமே கவலைப்படாதே, அக்கா சொல்றத அப்படியே மனசில கேட்டுக்கிட்டு வரை. இதன் மூலமாக தான் உன்னுடைய அக்காவை காப்பாத்த முடியும். அதனால பதட்டமே படாதே என்கிறாள். மேலும் அனைவரும் இங்கே இருந்தே,கனியால் சரியாக வரைய முடியாது. இதனால் அனைவரும் வெளியே செல்லுங்கள் என்று அனைவரையும் அனுப்பி வைக்கிறாள் பரணி.

Zee tamil Anna

வைஜெயந்தியின் வேலை: வீரா மேல கேஸ் எழுதிட்டா அவளுடைய கனவு மொத்தமா இல்லாமல் போய்டும்,
வீரா வேலைக்கு சேர இன்னும் சரியா 12 மணி நேரம் தான் இருக்கு. அதுக்கு முன்னாடி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என சொல்கிறான் முத்துப்பாண்டி. மேலும், நகையை காணவில்லை என்று வந்த பெண் மீது, சந்தேகமாக இருக்கிறது. அந்தப் பெண் மாற்றி மாற்றி பேசினார் என்று சொல்ல அந்த பெண்ணை கண்டுபிடித்தால் உண்மை தெரிந்து விடும் என்கிறான். இதையடுத்து, சண்முகம் அந்த பேருந்து டிரைவருக்கு போன் செய்து அந்த பெண் எந்த இடத்தில் இறங்கினாள். என்று தெரிந்தால் அந்த இடத்தில் போய் நாம் விசாரித்து விடலாம் என்று சொல்கிறான். இதையடுத்து முத்துப்பாண்டி டிரைவருக்கு போன் செய்து விசாரிக்க டிரைவர் அந்த பெண் இறங்கிய இடத்தை சொல்லி விடுகிறார்.

Zee tamil Anna

மொட்டையன் குறித்து சொல்ல சொல்ல கனி வரைந்து முடித்த நிலையில், கனி அப்படியே வரைந்து முடிந்துவிடுகிறாள். உடனே சண்முகம் எத பத்தியும் கவலைப்படாத வீரா, நீ நினைச்சபடி உன்னுடைய வேலையை கண்டிப்ப கிடைக்கும். விடிவதற்குள் அவனை எப்படியாவது கண்டுபிடித்து விடுவேன் நீ கவலைப்படாத என்கிறாள். இதையடுத்து, அந்த பெண்ணை தேடி மூன்று பேரும் செல்கின்றனர். அப்போது அந்த பெண் இருக்கும் வீடு தெரிந்து வீட்டுக்கு சென்று அந்த பெண் கையும் களவுமாக பிடிக்கின்றனர். அந்த பெண்ணும், இதை செய்ய சொன்னது, வைஜெயந்தி என்கிற உண்மையை சொல்லி விடுகிறாள். பின் அந்த ரௌடி மொட்டையை எப்படி கண்டுபிடிப்பது என்று யோசிக்க. உடனே சண்முகம் அதை நான் பார்த்துகிறேன், அதுக்கு என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு என்று சொல்கிறான். அடுத்ததாக மொட்டையன் இறந்து விட்டதாக சொல்லி கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ரெடி செய்கிறான். மேலும் அந்த போஸ்டரில் மேலும் தகவல்களுக்கு என்று சொல்லி தனது போன் நம்பரையும் கொடுக்கிறான். அந்த மொட்டையனை யாராவது பார்த்தால் உடனே போன் செய்து அவன் இருக்கும் இடத்தை சொல்லி விடுவார்கள் என கணக்கு போடுகிறான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X