மகிழ்ச்சியில் பரணி.. வீராவை பழிவாங்க துடிக்கும் வைஜெயந்தி.. அண்ணா சீரியல்!

சென்னை: ரௌடி இறந்துவிட்டதாக போஸ்டர் ஓட்டிய நிலையில், அதில், தகவல்களுக்கு என்று சொல்லி தனது போன் நம்பரையும் கொடுக்கிறான். இந்த போஸ்டரை யாராவது பார்த்தால், இவனுக்கு என்ன ஆனாது என்று போன் போட்டு விசாரிப்பாளர்கள் என கணக்கு போடுகிறான். போஸ்டரை பார்த்த திருடனின் மனைவி சண்முகத்திற்கு போன் செய்து உயிரோட இருக்க என் புருஷனுக்கு யாருடா போஸ்டர் ஒட்டியது என சத்தம் போடுகிறாள். சண்முகம் யாரோ தப்பா என் நம்பரை கொடுத்து போஸ்டர் அடிச்சிருக்காங்க என்று சொல்லும் சண்முகம் அந்த பெண்ணிடம் நீங்க எந்த ஊரு, எங்க இருக்கீங்க? உங்க புருஷன் எங்க இருக்காரு என்று கேட்டு தெரிந்து கொண்டு அந்த இடத்திற்கு கிளம்பி செல்கிறான்.

வைஜெயந்தி இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து மொட்டை ரவுடி இறந்து விட்டானா.. எல்லா இடத்தையும் போஸ்டர் ஒட்டி இருக்கே என்று கேட்க அவன் இறக்கவில்லை மேடம், யாரோ வேண்டுமென்றே இப்படி செய்திருக்கிறார்கள் என்று சொல்கிறான். இது சண்முகத்தினுடைய வேலையாக தான் இருக்கும். அந்த மொட்டை மட்டும் கிடைச்சிட்டா அவ்வளவு தான்.. நம்ப திட்டம் எல்லாம் வேஸ்ட்டா போய்டும் என சண்முகத்தை மடக்க கிளம்பி வருகிறாள்.

அதற்குள், ரௌடி வீட்டிற்கு வந்த சண்முகம் அந்த ரவுடியை பிடித்து விடுகிறான், முத்துப்பாண்டி உண்மையை ஒத்துக்கிட்டா உனக்கு தண்டனை குறையும் என சொல்லி மிரட்ட அவன் நான் தான் நகையை திருடுனேன்.. தப்பிக்க வழியில்லாமல் அந்த பொண்ணோட பேக்கில் போட்டுட்டேன் என்று சொல்லி ஆஜர் ஆகி விடுகிறான்.
உடனே இந்த விஷயம் அறிந்த வைஜெயந்தி ஸ்டேஷனுக்கு வந்து எனக்கு அப்பவே இந்த பொண்ணு இப்படி பண்ண வாய்ப்பு இல்லனு ஒரு சந்தேகம் இருந்தது.. FIR போடலல.. அதுவரைக்கும் நல்லது என்று நல்லவள் போல வேஷம் போடுகிறாள். இந்த விஷயம் அறிந்து கௌதம் கோபம் அடைகிறான், வீட்டில் பொருட்களை தூக்கி போட்டு உடைக்கிறான். வைஜெயந்தி அடுத்து என்ன பண்ணுவது என யோசிக்கிறாள்.

Zee tamil Anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில் வீரா, வீட்டுக்கு வர வீட்டில் இருக்கும் அனைவரும் வீராவை வரவேற்கின்றனர். இது எல்லாத்துக்குமே காரணம் கனிதான். அந்த ரௌடியை கனி மட்டும் சரியா வரையவில்லை என்றால், வீராவை காப்பாத்திருக்கவே முடியாதுனு என சொல்லிட்டு கனியை பாராட்டுகின்றனர். இப்படி அனைவரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கும்போது போஸ்ட்மேன் வந்து ஒரு கடிதத்தை தருகிறான். அந்த கடிதத்தை பிரிந்து படித்த முத்துப்பாண்டி. ஒரு நல்ல விஷயம் நடந்து இருக்கு, பரணி உனக்கு அமெரிக்காவுக்கு போய் படிக்க விசா கிடைத்துவிட்டது அதற்கான லெட்டர் தான் வந்து இருக்கு என்று சொன்னதும் பரணி சந்தோஷப்படுகிறாள். ஆனால், இந்த செய்தியை கேட்ட ஒட்டுமொத்த குடும்பமும் திடீரென அமைதியாகி விடுகின்றனர்.

யாருக்கும் பிடிக்கவில்லை: இதைப் பார்த்த பரணி, எவ்வளவு ஒரு நல்ல விஷயம் நடந்து இருக்கு ஏன் எல்லாரும் திடீர்னு அமைதியாகிவிட்டீர்கள் என்று கேட்கிறாள். அப்போது வைகுண்டம் அமெரிக்கா போவதற்கு முன், உனக்கு ஏதாவது வாங்கி தர வேண்டும் என நினைக்கிறேன். உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறான். அப்போது, பரணி உங்கள் சக்திக்கு உட்பட்டு நீங்க என்ன வாங்கி தர விரும்புகிறீர்களோ அதை வாங்கி கொடுத்தா போதும் என்கிறாள். சண்முகம் அமைதியா இருக்கிறதை பார்த்த பரணி, நீ என்ன வாங்கித்தர போற என்று கேட்க, ஒருவேளை நீ அமெரிக்கா போனா, என்ன வாங்கித்தர வேண்டுமோ, என்ன சொல்லனுமோ எல்லாத்தையும் நீ அமெரிக்கா போறதுக்கு முன்னாடி நான் கரெக்டா சொல்லிடுவேன் இப்போ போயி நான், என் வண்டியை துடைக்கிறேன் வண்டிய தொடச்சு பத்து நாளா ஆச்சு என்று அங்கு இருந்து எழுந்து செல்கிறான் சண்முகம்.

Zee tamil Anna

பரணி வெளிநாடு போகக்கூடாது: இதைப்பார்த்த பரணி, நான் அமெரிக்கா போவது சண்முகத்திற்கு சுத்தமா பிடிக்கவே இல்லை. உங்க அண்ணன் ஏன், என் விஷயத்துல மட்டும் இப்படி இருக்கானே தெரியவில்லை என்கிறாள். அப்போது, வைகுண்டம் விடு பரணி, சண்முகத்தை பற்றி தான் உனக்கு எல்லாமே தெரியும்ல. அவன் அப்படித்தான் நீ அந்த விசாவை பத்திரமா எடுத்து, அத்தை படத்துக்கு முன்னாடி வச்சு சாமி கும்பிடு என்று சொல்கிறான். ஆனால் வீட்டில் இருக்கும் ரத்னா, பரணி, கனி என யாருக்குமே பரணி வெளிநாட்டுக்கு சென்று படிப்பதில் விருப்பமே இல்லை எப்படியாவது பரணி வெளிநாட்டிற்கு போக வைக்க கூடாது என்று அனைவரும் யோசித்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் பரணியோ வெளிநாட்டுக்கு சென்று படித்தே என்று ஒன்றை காலில் நின்கிறாள்.

சௌந்தரபாண்டி போடும் திட்டம்: இந்த விஷயத்தை பரணி, பாக்யாவிற்கு ஃபோன் போட்டு சொல்ல பாக்யா ஒரு பக்கம் மகிழ்ச்சியடைந்தாலும், நாலு வருஷம் உன்ன விட்டுட்டு நாங்க எல்லாரும் எப்படி இருப்போம். நீயும் அந்த ஊர்ல போய் எப்படி இருப்பாய் என்று கேட்கிறாள். அப்போது பரணி, இது என்னோட கனவு, இதற்காகத்தான் நான் அத்தனை நாள் காத்துக்கிட்டு இருந்தேன். யார் தடுத்தாலும், நான் நிச்சயமா அமெரிக்கா போய் படிப்பேன் என்று சொல்கிறான். இதை பாக்யா, சௌந்தரபாண்டியிடம் சொல்ல, ஓ பரணிக்கு விசா கிடைச்சுடுச்சா, இதுக்காகத்தான் நான் காத்துக்கிட்டு இருந்தேன். சரியான நேரம் வந்துடுச்சு இந்த விஷயத்தை வச்சு,பரணியும் சண்முகத்தையும் நான் எப்படி பிரிக்கிறேன் பார் என்று மனதுக்குள் திட்டம் போடுகிறான்.

Zee tamil Anna

வீராவை சும்மாவிடமாட்டேன்: மறுபக்கம், வைஜெயந்தியின் மகன் கௌதம் அந்த வீரா என்ன அவமானப்படுத்துனது மட்டுமில்லாமல் போலீஸ்சாவும் ஆயிட்டா. நீ இந்த விஷயத்தில் கோட்டை விடுவேன் என்று நினைக்கவே இல்லமா.. என்று சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறான். அப்போது வைஜெயந்தி, நான் அந்த குடும்பத்தை சரியா எடை போடல, பரணியும் சண்முகமும் ரொம்ப புத்திசாலியாக இருக்காங்க' நான் அவங்கள குறைச்சி எடை போட்டுவிட்டேன் என்கிறாள். அப்போது, கௌதம் உங்களால் முடியவில்லை என்றால், என்னிடம் சொல்லிடுங்க நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறான். உடனே வைஜெயந்தி, கொஞ்சம் பெருமையா இரு, என்னதான் ஆவ போலீசா ஆனாலும் அவளை நான் நிச்சயமா நிம்மதியாவே இருக்க விடமாட்டடேன் என்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X