வீராவை மனைவியாக்க துடிக்கும் வெங்கடேஷ்.. எதிர்பாராத திருப்பங்களுடன் அண்ணா சீரியல்!
சென்னை: ரத்னா தாலியை கழட்டி வெங்கடேசனின் மூஞ்சிலேயே வீசிவிட்டு, இனிமேல உனக்கும் எனக்கும் சம்பந்தமே இல்ல. எந்த ஒரு புருஷனும் இன்னொருத்தன் கூட தன்னுடைய மனைவியை சேர்த்து வைத்து அசிங்கப்படுத்த நினைக்கக்க மாட்டான். ஆனா, அப்பேர்பட்ட காரியத்தையே செஞ்சிட்ட இனிமேல உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தாலியை தூக்கி வெங்கடேசனின் முகத்திலேயே வீசுகிறாள். இதையடுத்து அறிவழகன் ரத்னாவை வீட்டுக்கு அழைத்து செல்கிறான்.
பின் அறிவழகனை பார்த்து, என்னுடைய தங்கச்சிக்காக பெரிய அவமானத்தை எல்லாம் தாங்கிக்கிட்ட உனக்கு ரொம்ப நன்றி. என்னுடைய தங்கைக்கு நீ தான் நல்ல வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று கேட்கிறான். ஆனால், அதற்கு கொஞ்சம் நேரம் ஆகும். ரத்னா இப்போது, இந்த மனநிலையில் இருந்து வெளியே வரவேண்டும் அதுவரைக்கும் நீங்கள் தான் காத்திருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான். இதைகேட்ட அறிவழகன், சிறுவயதில் நான் காதலித்த பெண்ணையே கல்யாணம் செய்து கொள்ள வாய்ப்பு வந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறான். இதையடுத்து இன்று நடப்பதைபார்க்கலாம்.

அண்ணா சீரியல்: ரத்னா கழட்டி எறிந்த தாலியை கையில் வைத்துக்கொண்டு, கோவத்தின் உச்சத்தில் இருக்கிறான் வெங்கடேசன். அப்போது, அவரின் அப்பா அம்மா இருவரும், இந்த பொண்ணு வேண்டாம்னு எத்தனையோ முறை சொன்னோம். ஆனா, நீ தான் கட்டுனா அவளை தான் கட்டுவேனு ஒத்த கால்ல நின்னே. நீ ஆசைப்பட்டதுனால தான் நாங்களும் உனக்கு ரத்னாவ கல்யாணம் பண்ணி வச்சோம், கடைசியில இப்போ என்ன ஆச்சுன்னு பாத்தியா? தாலியை கழட்டி எறிஞ்சிட்டா, அவளே போகும்போது அந்த தாலிய கையில வச்சிக்கிட்டு நீ ஏன் வருத்தப்படுற. அவளுக்கே வேற ஒருத்தன் மாப்பிள்ளையா கிடைக்கும்போது உனக்கு வேற ஒரு பொண்ணு கிடைக்க மாட்டாளா? இதுக்கு மேல இதை பத்தி நீ யோசிக்காத, இந்த தாலியை, கோவில் உண்டியலில் போட்டுவிட்டு, ரத்னாவை தலை முழுகிவிட்டு அடுத்த வேலையா பாக்கலாம் என்று அனைவரும் கோயிலுக்கு கிளம்புகின்றனர்.

விளக்குமாத்தால அடிப்பேன்: கோவிலில் இசக்கியும் வீராவும், ரத்னாவிற்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக சில பரிகாரங்களை செய்து கொண்டு இருக்கின்றனர். அப்போது வீரா, எனக்கு மட்டும் இப்படி ஒரு புருஷன் கிடைச்சிருந்தா விளக்குமாத்தால அவனை அடித்து மூஞ்சிலேயே காரி துப்பியிருப்பேன் என்று சொல்கிறாள். கோவிலில் வெங்கடேசன் இருப்பது தெரியாமல் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதைக் கேட்ட வெங்கடேசனுக்கு ஆத்திரம் தலைக்கு ஏறுகிறது.
வீராவிற்கு சரியான தண்டனை: பின் வெங்கடேசனின் பெற்றோர் தாலியை உண்டியலில் போட்டுவிட்டு வா வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல. வெங்கடேசன் தாலியை கையில் வைத்துக்கொண்டு, கோவிலில் இசக்கியும் வீராவும் என்ன பேசிக்கிட்டு இருந்தாங்கனு தெரியுமா? இதுபோல ஒரு புருஷன் கூட வாழறதுக்கு ரத்னா வாழாமலே இருக்கலாம்னு சொல்றா, அது மட்டும் இல்லாம என் மூஞ்சில காரி துப்பி விளக்குமாத்தால அடிப்பாளாம். இனிமேல்தான் ரத்னாவோட வாழ்க்கை நல்லா இருக்கப் போகுதுன்னு பேசிகிட்டு இருக்காங்க. இவங்களோட வாழ்க்கைய நல்லா இருக்க, நான் விடவே மாட்டேன். ரத்னா செய்ததுக்கு அவ தங்கச்சி வீராவிற்கு நான் சரியான தண்டனை தரப்போகிறேன்.
ரத்னா என் மூஞ்சில கழட்டி எறிஞ்ச தாலிய அவளுடைய தங்கச்சி வீரா கழுத்துல, கட்ட போகிறேன் என்று கோபத்துடன் கோயிலுக்குள் செல்கிறான். அப்போது வெங்கடேசனின் பெற்றோர் அவனை தடுத்து நிறுத்தி, இப்பதான் ஒரு பிரச்சனையிலிருந்து வந்திருக்க மேலும் நீ பிரச்சனை பண்ணிக்கிட்டே இருந்தா சரிப்பட்டு வராது. இது சண்முகத்திற்கு தெரிஞ்சா அவ்வளவு தான், வா வெங்கடேஷ் வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல, அவன் பேச்சைக் கேட்காமல் கோபத்தோடு கோவிலுக்குள் செல்கிறான்.

தப்பி ஓடிய வீரா: கையில் தாலியோடு வெங்கடேசனை பார்த்த வீரா, இசக்கி இருவருமே பயந்து விடுகின்றனர். அப்போது கோவத்தோடு வரும் வெங்கடேசன் என்னை, விளக்கமாத்தால அடிப்பியா.... காரி துப்புவியா... அதுக்கு முன்னாடி நான் என்ன பண்ண போறேன்னு தெரிஞ்சுக்கோ. இந்த தாலிய உன் கழுத்துல கட்டி. நான் உன்னை என்னோட பொண்டாட்டியா ஆக்கப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு வீரா அருகில் வருகிறான். அப்போது இசக்கி, வெங்கடேசனை தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறாள். ஆனால்,வெங்கடேசன் இசக்கியை தள்ளி விடுகிறான். இதனால் பயந்து போன வீரா, கோவிலில் ஓடுகிறாள்.
பின் இசக்கி, சண்முகத்திற்கு போன் போட்டு இந்த தகவலை சொல்ல சண்முகம் ஆத்திரத்தோடு வீட்டிலிருந்து அருவாளை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான். அப்போது பரணி அவனை தடுத்து நிறுத்தி என்ன விஷயம் என்று கேட்க இந்த வெங்கடேசன், வீரா கழுத்தில் தாலி கட்ட போறானாம். அவன் கதையை பஞ்சாயத்துலேயே முடிச்சி இருக்கனும், உன் பேச்சை கேட்டுவிட்டுவிட்டேன். இன்னைக்கு அவன் உயிரோட இருக்கணும், இல்ல நான் உயிரோட இருக்கணும் என்று ஆத்திரத்தோடு கிளம்புகிறான். உடனே பரணி முத்துப்பாண்டிக்கு ஃபோன் போட்டு விஷயத்தை சொல்ல முத்துப்பாண்டியும் கோயிலுக்கு கிளம்புகிறான்.பின் இசக்கிக்கு போன் போட்டு கோவிலில் எந்த பக்கத்தில் இருக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு சரியான நேரத்தில் முத்துப்பாண்டி வந்து அவனிடம் இருந்து வீராவை காப்பாற்றுகிறான்.
உங்க அப்பா தான் காரணம்: பிறகு முத்துப்பாண்டி, வெங்கடேசனை போட்டு அடிக்க வெங்கடேசனின் பெற்றோர் இவனை ஏத்தி விடுவதை உங்க அப்பா தான். அந்த ஆள் பேச்சு கேட்டுத்தான் என் மகன் இப்படி நடந்து கொள்கிறான். ரத்னாவையும் அறிவழகனையும் ஸ்கூல்ல வெச்சி பூட்ட ஐடியா கொடுத்ததே அவர் தான் என்ற உண்மையை போட்டு உடைக்க முத்து பாண்டி அதிர்ச்சி அடைகிறான். இதுவரை அப்பாவின் மீது கோபப்படாத முத்துப்பாண்டி இம்முறை ஆவேசம் கொள்கிறான். பின், அவர்களை அழைத்துக் கொண்டு நேராக வீட்டுக்கு வரும் முத்துப்பாண்டி சௌந்தரபாண்டியை எதிர்த்து சத்தம் போடுகிறான். நீ பண்ண வேலை மட்டும் சண்முகத்துக்கு தெரிஞ்சா அவ்வளவு தான், இதுக்கு மேலயும் ஏதாவது பண்ணீங்க என்றால் அவ்வளவு தான் என வார்னிங் கொடுத்து அங்கிருந்து கிளம்பி வருகிறான்.
இதனைத் தொடர்ந்து சௌந்தரபாண்டி, இனிமேலும் இவனை அந்த வீட்ல இருக்க விடக்கூடாது. எப்படியாவது அந்த குடும்பத்தை பிரிச்சு முத்துபாண்டியை இங்க கூட்டிட்டு வந்துடனும் என கணக்கு போடுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











