வழுக்கி விழுந்த இசக்கி.. ஒரு உயிரைத் தான் காப்பாற்ற முடியாது.. கைவிரித்த மருத்துவர்.. அண்ணா சீரியல்!
சென்னை: பிரச்சனை எல்லாம் முடிந்து வீரா, வீட்டுக்கு வர வீட்டில் இருக்கும் அனைவரும் வீராவை வரவேற்கின்றனர். இது எல்லாத்துக்குமே காரணம் கனிதான். அந்த ரௌடியின் போட்டோவை மட்டும் கனி சரியா வரையவில்லை என்றால், வீராவை காப்பாத்திருக்கவே முடியாது என சொல்லிட்டு கனியை பாராட்டுகின்றனர். இப்படி அனைவரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கும்போது, பரணி அமெரிக்கா சென்று படிக்க விசா வருகிறது. இந்த செய்தியை கேட்ட ஒட்டுமொத்த குடும்பமும் வருத்தப்படுகின்றனர். அப்போது பரணி நான் அமெரிக்கா போய் படிப்பது இந்த வீட்டில் யாருக்குமே பிடிக்கவில்லையா என கேட்க, அப்போது வைகுண்டம் அதெல்லாம் இல்லமா நீ போய்படி என்கிறார்.
மறுபக்கம், வைஜெயந்தியின் மகன் கௌதம், வீரா என்ன அவமானப்படுத்திடா, நீ இந்த விஷயத்தில் கோட்டை விடுவேனு நான் நினைக்கவே இல்லமா..வைஜெயந்தியிடம் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறான். அப்போது, வைஜெயந்தி, நான் அந்த குடும்பத்தை சரியாக எடை போடவில்லை, பரணியும் சண்முகமும் ரொம்ப புத்திசாலியாக இருக்காங்க, கொஞ்சம் பெருமையா இரு, என்னதான் ஆவ போலீசாக ஆனாலும், அவளை நான் நிச்சயமா நிம்மதியாவே இருக்க விடமாட்டடேன் என்கிறாள். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

வைஜெயந்தியின் சதி: அண்ணா சீரியல் இன்றைய எபிசோடு, போலீஸ் வேலைக்கு சென்ற வீரா, ஸ்டேஷனில் ஆர்டரை கொடுக்கிறாள். அதை வாங்கி பார்த்த அதிகாரி, சார், இப்போ கொஞ்சம் வேலையா இருக்கார். நான், இதை அவரிடம் கொடுத்துவிடுறேன். நீங்க இங்கே வெயிட் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு செல்கிறார். வீரா, வெளியில் இன்ஸ்பெக்டருக்காக காத்துக்கொண்டு இருக்கிறாள். இதை தெரிந்து கொண்ட வைஜெயந்தி, அந்த இன்ஸ்பெக்டருக்கு ஃபோன் போட்டு, அவ அங்கே வந்துட்டா, நீ, அவளை கண்டுக்காதே, அவ அப்படியே காத்துக்கிட்டு இருக்கட்டும் என சொல்ல, இன்ஸ்பெக்டரும் சரி மேடம் அப்படியே செய்கிறேன் என்கிறான்.

இசக்கியின் உயிருக்கு ஆபத்து: மறுபக்கம், பாக்கியம் இசக்கி கீழே விழுந்து வயிற்றில் அடிபடுவது போல கனவு கண்டு பயந்து எழுந்திருக்கிறாள். அந்த நேரம் பார்த்து, தூங்கி எழுந்து வந்த சௌந்தரபாண்டி, பாக்கியவை காபி போட்டு கொடுக்க சொல்ல, பாக்கியம் காஃபி எல்லாம் ஒன்னும் கிடையாது நான் போய் இசக்கியை பாத்துட்டு வருகிறேன் என்று கிளம்ப, சௌந்தரபாண்டி இப்போ, எதுக்கு அங்கே போக வேண்டும் என்று கேட்கிறான். உடனே பாக்கியா, கண்ட கெட்ட கனவு பற்றி சொல்கிறாள். இதைக்கேட்ட சௌந்தரபாண்டி, அவ அந்த வீட்டில் இருந்தா, எப்படி நல்லா இருப்பா என ஏற்றி விடுகிறான். பாக்கியத்தின் மூலமாக இசக்கியை வீட்டுக்கு வரவைத்து விட வேண்டும் என திட்டம் தீட்டுகிறான். பிறகு பாக்கியம் மற்றும் சிவபாலன் என இருவரும் கிளம்பி சண்முகம் வீட்டிற்கு வருகின்றனர்.

பாக்கியம் கனவு கண்டது போல, இசக்கி ஷேர் மீது ஏறி, துணியை காயப்பட்டுக் கொண்டு இருக்க, கால் வழுக்கி கீழே விழுந்து வயிற்றில் அடிபடுகிறது. அந்த நேரம் பார்த்து சரியாக பாக்கியம் மற்றும் சிவபாலன் இருவரும் வீட்டுக்கு வர, இசக்கி அடிபட்டு துடித்துக்கொண்டு இருப்பதை பார்த்து பதறிப்போய், இசக்கியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கின்றனர். தாய் அல்லது குழந்தை இரண்டில் ஒரு உயிரை தான் காப்பாற்ற முடியும் என்று டாக்டர் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











