பாவம்ப்பா பரணி.. குடும்பத்தை பிரிக்க பிளான் போடும் சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல்!

சென்னை: பரணிக்கு பிறந்த நாள் வர, தங்கைகள் கொடுத்த ஐடியா படி, செயினில் சண்முகம் போட்டோ, இன்னொரு பக்கம் பரணி போட்டோவைத்து இருக்கிறான்.இதை தெரிந்து கொண்ட சௌந்தரப்பாண்டி இதுதான் சரியான நேரம், அவன் செயினுடன் வீட்டுக்கு வரக்கூடாது என்று திட்டம் போட்டு ரவுடிகளை வைத்து செயினை திருடச்சொல்லிவிடுகிறான். வரும் வழியில் ரவுடிகள் சண்முகத்திடம் சண்டையிட்டு செயினை பறிக்க முயற்சிக்கின்றனர். வீட்டில் எல்லாரும் பிறந்த நாள் கொண்டாட, காத்துக்கொண்டிருக்கின்றனர். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

இன்றைய எபிசோடில், பிறந்தநாளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, வீட்டில் உள்ள அனைவரும் இருக்கின்றனர். ஆனால் சண்முகம் மட்டும் வரவில்லையே என பரணி வருத்தப்படுகிறாள். அவன் எதுவும் வாங்கித்தர தேவையில்லை என்கூட இருந்தால், நன்றாக இருந்து இருக்கும். இதுவே அவன் தங்கச்சிங்க பிறந்த நாளாக இருந்தா இப்படி பண்ணுவானா என கலங்குகிறாள். பரணி, கண் கலங்குவதைப்பார்த்த, சௌந்தரபாண்டி, என்ன பரணி, இந்த சண்முகம் இல்லனு வருத்தப்படுறியா, எப்பவும் பெத்தவங்க தான் கூட இருப்பாங்க என ஏற்றி விடுகிறார்.

Zee tamil Anna

இன்றைய எபிசோட்: அப்போது, அங்குவரும் வெட்டுக்கிளி சண்முகம் யார்கூடயோ சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார் என்று சொல்ல, மேலும் ஆத்திரம் அடையும் பரணி. இந்த சண்முகத்திற்கு இதே வேலைத்தான் எப்போதும், என்னபத்தி நினைக்கவே மாட்டான் என்று சொல்லிக் கொண்டு
இருக்க, அப்போது சண்முகம் கிழிந்த சட்டையோடு வருகிறான். அதாவது சண்முகம் வாங்கிய செயினை யாரோ கொள்ளையடித்து விட்டதாக சொல்ல சௌந்தரபாண்டி சந்தோசப்படுகிறார். ஆனால் பரணி நீ யார் கூடவோ சண்டை போட்டுட்டு வந்திருக்க, உனக்கு எப்பவும் யாரையாவது அடிக்கனும் சண்டைப்போடனும், அந்த வீட்டில் இருக்கும் உயிர் இல்லாத பொருளுக்குகூட என்னை பத்தி தெரியும், ஆனால், நீ... ச்சி என சண்முகம் சொல்வதை ஏற்க மறுத்துவிட்டு, எனக்கு பிறந்த நாளும் தேவையில்ல ஒன்னும் தேவையில்லை என்று சொல்லிவிட்டு ரூமுக்குள் செல்கிறாள்.

Zee tamil Anna

நடந்தது என்ன: அப்போது, சண்முகத்தின் தங்கைகள், பரணி சொல்வதும் சரி, எப்போதும் அண்ணன் தங்கச்சிகளுக்குத்தான் முக்கியம் கொடுக்கிற என்று சொல்கிறாள். அப்போது, சண்முகம், செயினை வாங்கிக்கொண்டு வரும் போது ரவுடிகள் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாக சொல்கிறான். இதைக்கேட்டு பாக்கியம், சரி சண்முகம், இந்த விஷயத்தை நான் பரணியிடம் எடுத்து சொல்கிறேன் நீ கவலைப்படாதே என்கிறாள். செயின் திருடுபோனதை கேட்டு பரணி சற்று மனம் இறங்கி வருகிறாள். இதையடுத்து, சண்முகம் இந்த செயின் போனா என்ன நான், உனக்கு வேற செயின் வாங்கி தருவதாக சொல்ல பரணி சண்முகத்தை பார்த்து முறைக்கிறாள்.

அடுத்து சண்முகமும் முத்துபாண்டியும் செயின் எடுக்க கடைக்கு வர அதே ரவுடிகள் அதே கடைக்கு வருகின்றனர். சண்முகம் இதை பார்த்துவிட்டு, முத்துப்பாண்டியிடம் சொல்ல, நீ அவங்க மேல கையை வைக்காதே.. நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி அவர்களை கையும் களவுமாக பிடித்து, அவர்களிடம் செயினை வாங்குகிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X