சௌந்தரபாண்டியை ஓங்கி அறைந்த சண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், சனியனின் பேரனை, சண்முகமே ஆட்களை வைத்து கடத்திக்கொண்டு நாடகமாடுகிறான். பேரனை காணாததால், பதறிப்போன சனியன் சண்முகத்தை தேடி வர, சண்முகம் என் அம்மா உத்தமினு இந்த ஊர் பஞ்சாயத்துல எல்லார் முன்னாடியும் சொன்னா நான், உன் பேரனை காப்பாத்துவேன் என்று சொல்கிறான். இதையடுத்து, எனக்கு என் பேரன் தான் முக்கியம் நான் பஞ்சாயத்தில் உண்மையை சொல்லுகிறேன் என்கிறான்.
மறுபக்கம், சௌந்தரபாண்டி மண்ணெண்ணெய் கேனுடன் பஞ்சாயத்துக்கு வருகிறான். உண்மையை நிரூபிக்கலனா சூடாமணி கொளுத்திப்பேனு சொன்னாளே அதுக்குத்தான் மண்ணெண்ணெய் கேனுடன் வந்திருப்பதாக சொல்லி கிண்டல் அடிக்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், பஞ்சாயத்திற்கு அனைவரும் கூடி விட, சௌந்தர பாண்டி எல்லாரும் சும்மாவே இருந்தா எப்படி என்று சொல்ல, சண்முகம் சனியனுக்கு போன் போட, போன் சுவிட்ச் ஆப் என்று வந்ததால், பதற்றம் அடைகிறான். இதையடுத்து, மீண்டும் மீண்டும் போன் செய்து கொண்டே இருக்க, என்னடா சண்முகம், சனியன் போனை எடுக்கலையா என்று கேட்க, பரணியும், சண்முகமும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அதிர்ச்சியில் குடும்பம்: டேய், சண்முகம் நான் பஞ்சாயத்திற்கு கிளம்பும் போது, சனியன் வந்தான், அவன் மூஞ்சே சரியில்லை. அவன் பேரன் மீது ரொம்ப பாசக்காரன், என்னடானு விசாரித்தேன் அப்போத்தான் அவன் எல்லா உண்மையையும் சொன்னான். அதுக்கு அப்புறம் தான் யோசித்தேன். எல்லாரும் இங்கே இருக்கும் போது, வெட்டுக்கிளி கிட்டத்தான் பேரன் இருப்பான் என்று தேடிப்போய், சனியனின் பேரனை மீட்டாச்சு என்று சொல்ல அதிர்ச்சி கொடுக்கிறான். சௌந்தரபாண்டி சொன்னதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
ஓங்கி அறைந்த சண்முகம்: என்னடா, சண்முகம் இப்போ யார் இங்கே வந்து உன் அம்மாவை உத்தமி என்று நிரூபிக்க போகிறார்கள். சீக்கிரம் வா சூடாமணி இந்தா இந்த மண்ணெண்ணை ஊத்தி கொளுத்திக்கோ, எனக்கு என்ன வேலை வெட்டி இல்லையா இங்கே வந்து உன் கதையை பார்ப்பது தான் வேலையா என்று பேசிக்கொண்டு இருக்கிறான். அங்கிருந்த பஞ்சாயத்து தலைவர்கள், என்ன சண்முகம் அமைதியா இருந்தா என்ன அர்த்தம் என்று ஆள் ஆளுக்கு கேள்வி கேட்கின்றனர்.
இதையடுத்து, சண்முகம் வெட்டுக்கிளிக்கு போன் போட, முதலில் அவன் போனை எடுக்கவில்லை இதையடுத்து, மீண்டும் போன் போட, அவன் போனை எடுத்து, அங்கு நடந்த விஷயத்தை சொல்கிறான். இதனால் ஆத்திரமடைந்த சண்முகம், சௌந்தரபாண்டிக்கு ஓங்கி ஒரு அறைவிடுகிறான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











