தீ குளிக்க தயாரான சூடாமணி.. ஷண்முகம் செய்ய போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், அதாவது, சௌந்தரபாண்டி சூடாமணி உத்தமினு நிரூபணம் ஆகலைனா தற்கொலை செய்துப்பேனு சொன்னாளே அதுக்கு தான் மண்ணெண்ணெய் என்று சொல்கிறார். இதையடுத்து, சண்முகம் சனியனுக்கு போன் செய்ய அவனது போன் ஸ்விட்ச் ஆப் என வருகிறது. இதனால் ஷண்முகம் அதிர்ச்சி அடைகிறான்.
சௌந்தரபாண்டி சிரித்து விட்டு என்ன போன் சுவிட்ச் ஆப்னு வருதா? என்று கேட்க பிளாஷ்கட் ஓப்பனாகிறது. இந்த பிளாஷ்கட்டில் சௌந்தரபாண்டி சனியனை பார்க்க அவனது கண்கள் கலங்கி போய் இருக்க என்னாச்சு? உன் பேரனுக்கு ஒன்னுனா மட்டும் தான் உன் கண்ணு கலங்கும் என்று கேட்க சனியன் நடந்த விஷயத்தை சொல்கிறான். அடுத்து சூடாமணியை தீ குளிக்க வைக்க தூண்டுவது போல் சௌந்தரபாண்டி பேச சூடாமணி நான் செத்து போயிட்டா என் குடும்பத்தை விட்டுடுவல நான் செத்து போறேன் என்று எண்ணெய்யை மேலே ஊற்றி கொள்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய சீரியல், கடைசி நொடியில் ஷண்முகம் தடுத்து நிறுத்தி ஒரே ஒரு நாள் மட்டும் டைம் கேட்க ஒரு நாள்ல என்ன கிழிக்க போறனு பார்க்கலாம் என்று சௌந்தரபாண்டி ஓகே சொல்கிறார். இதையடுத்து சூடாமணியை வீட்டிற்கு அழைத்து வந்து அவளை குளிக்க வைக்கின்றனர். அவள் ஊர் முன்னாடி இப்படி ஆகிவிட்டதே என நினைத்து வருத்தப்பட்டு அழுதுக்கொண்டு இருக்கிறாள்.
ஊருக்கு போகும் முத்துப்பாண்டி: மறுபக்கம், சௌந்தரபாண்டி வீட்டில், இசக்கி, பாக்கியம், சிவபாலன் மூன்று பேரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது சிவபாலன்,அம்மா சாப்பாட்டில் அப்பாவிற்கு எதாவது மருத்து கலந்து கொடுத்துவிட வேண்டியது தானே, எப்படி நம்ம மாமா குடும்பத்தை கொடுமைபடுத்துகிறார். இதெல்லாம் பாக்கும் போது என் மனசே சரி இல்லை என்று சொல்கிறான். அப்போது, இசக்கி, நாங்க அதை செய்தா அந்த மனுஷன் நிம்மதியா போய்டுவான், என் அம்மா எங்களை பிரிஞ்சி இத்தனை கெட்ட பெயரோட இருக்குறாங்க, அவங்களை இந்த ஊர் முன்னாடி நல்லவள் என்று சொல்ல வைக்க வேண்டும் என்று சொல்கிறாள்.
வீட்டை விட்டு துரத்தப்படும் இசக்கி: அப்போது, அங்கு வரும், முத்துப்பாண்டி இரண்டு நாள் கேம்ப் என்று வெளியூருக்கு செல்வதாக சொல்ல, பாக்கியமும் இசக்கியும் வீட்டில் என்ன பிரச்சனை நடந்துகொண்டு இருக்கு இப்போ நீ ஊருக்கு போகணுமா என்று கேட்க, அம்மா, நானா ஒன்ணும் ஆசைப்பட்டு போகல, வேலை விஷயமா போகிறேன் இரண்டு நாள்ல வந்துடுவேன் என்று சொல்ல, சரி சரி அது வரைக்கும் உங்க அப்பாவ ஒழுங்க இருக்க சொல்லு என்கிறாள் பாக்கியம். இதையடுத்து, விடியற்காலையில் எழுந்து ஷண்முகம் ஜெயிக்கணும் என்று பூஜை செய்ய சௌந்தரபாண்டி நக்கல் அடித்து விட்டு செல்கிறார்.
ஷண்முகம் போட்ட பிளான்: சௌந்தரபாண்டி பசிக்கிது என்ன செய்றீங்க என்று கேட்க, வீட்டில் சாப்பாடு செய்யவில்லை என்று இசக்கி சொல்ல சௌந்தரபாண்டி அவளை திட்டி வீட்டை விட்டு வெளியே துரத்துகிறார். கூடவே பாக்கியமும் வெளியே வர நேராக இருவரும் ஷண்முகம் வீட்டிற்கு வந்து விடுகின்றனர், சும்மா இரண்டு நாள் தங்க வந்ததாக சொல்ல ஷண்முகம் சந்தேகப்பட்டு உண்மையை சொல்ல சொன்னதும் இவர்களும் உண்மையை சொல்லி விடுகின்றனர்.
பிறகு வைகுண்டம் உண்மையை மட்டும் நிரூபிக்கலைனா உன் அம்மாவை வீட்டை விட்டு அனுப்பிட வேண்டியது தான் என்று வருத்தப்பட ஷண்முகம் முத்துப்பாண்டி கேம்ப் போக காரணமே நான் தான், அவன் எப்போ ஊருக்குள்ள வரணும் என்பதையும் நான் தான் முடிவு பண்ணுவேன் என்கிறான். சௌந்தரபாண்டியை சிக்க வைக்க ஒரு திட்டம் இருப்பதாக சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











