தாய் உத்தமி என நிரூபிக்க போராடும் சண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், சண்முகம், என் அம்மாவை உத்தமி என்று நான் நிரூபிக்கிறேன் அதற்கு எனக்கு ஒருநாள் அவகாசம் வேண்டும் என்று கேட்ட நிலையில், சௌந்தரபாண்டி வீட்டில், இனி யாரும் அவருக்கு சமைத்துப்போடக்கூடாது என முடிவு செய்து, சமைக்காமல் இருக்கின்றனர். இதனால், சமைக்கவில்லையா என்று சண்டை போட்டு இசக்கியை, திட்டி வீட்டை விட்டு வெளியே துரத்திவிட கூடவே பாக்கியமும் வெளியே வந்துவிடுகிறாள்.
மறுபக்கம் வீட்டில், வைகுண்டம், சூடாமணி உத்தமி என்று நிரூபிக்கலைனா உன் அம்மாவை வீட்டை விட்டு அனுப்பிட வேண்டியது தான் என்று வருத்தப்பட ஷண்முகம், முத்துப்பாண்டி கேம்ப் போக காரணமே நான் தான், அவன் எப்போ ஊருக்குள்ள வரணும் என்பதையும் நான் தான் முடிவு பண்ணுவேன்.சௌந்தரபாண்டியை சிக்க வைக்க ஒரு திட்டம் இருப்பதாக சொல்கிறான். இதையடுத்து இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், சௌந்தரபாண்டி வீட்டில் எதுவும் சமைக்காததால், அவன் சனியனை ஓட்டலுக்கு அனுப்பி சாப்பாடு வாங்கிவர சொல்லுகிறான். இதையடுத்து சனியன் ஓட்டலுக்கு வர, அங்கு ரவுடிகள் ரெண்டு பேர் அவனை முறைத்தபடி இருக்க அவர்களிடம் இருந்த கத்தி கீழே விழ, அதை எடுத்துக்கொண்டு ஷண்முகம் அரிவாளுடன் ஓடி வருவதை பார்த்த, சனியன் பதறியடித்து ஓடி சௌந்தரபாண்டி வீட்டிற்கு வந்து, நடந்த விஷயத்தை சொல்லுகிறான்.
பயந்து போன சனியன்: இதையடுத்து, சௌந்தரபாண்டி, அவன் உன்னை ஒன்னும் பண்ண மாட்டான். சும்மா உன்னை பயமுறுத்தி பார்த்து இருக்கான் என்று சொல்கிறான். உடனே சனியன், என்னது அரிவாள தூக்கிட்டு ஓடிவந்தானு சொல்லுறேன், நீங்க ஒன்னும் பண்ண மாட்டானு சொல்றீங்களா... உசுர கையில புடிச்சிட்டு ஓடிவந்தேன் என்று சொல்கிறான். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்க, சனியனின் மனைவியிடம் இருந்து போன் வருகிறது. அதில், அவர், சண்முகமும் அவரோட மனைவி பரணியும் உங்களை தேடி வந்திருப்பதாக சொல்கிறாள்.
ஊரை விட்டு போ: இதைக்கேட்டு பயந்து போன சனியன், நீ என்னடி சொன்ன நான், வீட்ல இல்ல, சௌந்தரபாண்டி ஐய்யா வீட்டில் இருப்பார்னு சொன்னேன் என்று சொன்னதும், சனியன் பதறிக்கொண்டு போனை வைத்து, எல்லாம் நாசமா போச்சு, சண்முகம் இங்க வந்து என்னை கொல்லப்போகிறான் என்று பயப்படுகிறான். ஆமாம், சனியன் சண்முகத்திற்கு வெறிப்புடிச்சிப் போச்சு அவன் செய்தாலும் செய்வான், இதனால் நீ, இந்த ஊரில் இருக்க வேண்டாம், கொஞ்ச நாளைக்கு நீ ஊரை விட்டு போயிடு, உன் பொண்டாட்டியை நான் பார்த்துக்கறேன் என்று சொல்கிறான்.
வீட்டுக்கு அழைக்கும் சனியனின் மனைவி: இதையடுத்து, ஊரைவிட்டு போக முடிவு எடுத்த சனியன் பாருக்கு வந்து சரக்கு அடித்து கொண்டிருக்கிறான். அங்கே சனியன் வீட்டில், ஷண்முகம் அவரின் மனைவியிடம் கஷ்டத்தை சொல்லி உதவி செய்யுமாறு கேட்க, சனியன் மனைவி உதவி செய்வதாக சொல்லுகிறாள். இதையடுத்து, சண்முகம் ஒரு திட்டம் போடுகிறான். இதையடுத்து, சனியனின் மனைவி, சௌந்தரபாண்டிக்கு போன் செய்து, ஷண்முகம் உங்களை பத்தி ஒரு விஷயம் சொல்லி இருக்கான் அதை நேரில் வந்தா தான் சொல்லணும் என்று சொல்லி வீட்டிற்கு வர சொல்கிறாள்.
ஷண்முகத்தின் பிளான்: மறுபக்கம் பாரில் சனியன், தலையில் முக்காடு போட்டுக்கொண்டு சரக்கு அடிப்பதை பார்த்துவிட்டு அங்கு வரும் வெட்டுக்கிளி, சண்முகம் போட்ட பிளான் படி, சனியன் காதில் விழும்படி, சௌந்தரபாண்டி ரொம்ப மோசமான ஆளு, சனியன் தான் பாவம், எப்போதும் சனியனை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு சௌந்தரபாண்டி, சனியன் பொண்டாட்டியை பார்க்க போய்விடுவான் என்று சொல்கிறான். இதை கேட்டு ஆத்திரமடைந்த சனியன் வீட்டிற்கு ஓடி வர, ஒரு பக்கம் சௌந்தரபாண்டி சனியன் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











