சனியன் மனைவியுடன் கையும் களவுமாக சிக்கிய சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், சௌந்தர பாண்டிய சனியை ஊரைவிட்டு போக சொல்ல, சனியன் பாருக்கு வந்து சரக்கு அடித்து கொண்டிருக்கிறான். அங்கே சனியன் வீட்டில், ஷண்முகம் அவரின் மனைவியிடம் கஷ்டத்தை சொல்லி உதவி செய்யுமாறு கேட்க, சனியன் மனைவி உதவி செய்வதாக சொல்லுகிறாள். இதையடுத்து, சனியனின் மனைவி, சௌந்தரபாண்டிக்கு போன் செய்து, ஷண்முகம் உங்களை பத்தி ஒரு விஷயம் சொல்லி இருக்கான் அதை நேரில் வந்தால் சொல்லணும் என்று சொல்லி வீட்டிற்கு வர சொல்கிறாள்.
மறுபக்கம் பாரில் சனியன், தலையில் முக்காடு போட்டுக்கொண்டு சரக்கு அடிப்பதை பார்த்துவிட்டு அங்கு வரும் வெட்டுக்கிளி, சண்முகம் போட்ட பிளான் படி, சனியன் காதில் விழும்படி, சௌந்தர பாண்டியன் ரொம்ப மோசமான ஆளு, சனியன் தான் பாவம், எப்போதும் சனியனை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு சௌந்தரபாண்டியன், சனியன் பொண்டாட்டியை பார்க்க போய்விடுவான் என்று சொல்கிறான். இதை கேட்டு ஆத்திரமடைந்த சனியன் வீட்டிற்கு ஓடி வர, ஒரு பக்கம் சௌந்தரபாண்டி சனியன் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறான். இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், சனியன் அவனது வீட்டிற்கு கிளம்பி வருகிறான், மறுபக்கம் சௌந்தரபாண்டி சனியன் வீட்டிற்கு வந்து அவன் பொண்டாட்டியிடம் என்ன விஷயம் என்று கேட்க பசியில் இருக்கும் போது எப்படி சொல்ல முடியும்? உலை கொதிக்குது உட்காருங்க என்று உட்கார வைத்து ஐஸ் கிரீமை கொண்டு வந்து சாப்பிட கொடுக்கிறாள். சௌந்தரபாண்டி ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டிருக்க சனியன் வீட்டிற்கு வர சௌந்தரபாண்டி காரை பார்த்து பாரில் வெட்டுக்கிளி பேசியது உண்மை தான் என்று நம்புகிறான், ஜன்னல் வழியாக உள்ளே பார்க்க அப்போது சனியனின் மனைவி சௌந்தரபாண்டி மீது ஐஸ் கிரீம் கொட்டி விட, அதை தனது புடவையால் துடைத்து விட சனியன் இன்னும் அதிர்ச்சி அடைகிறான்.
சூடாமணி உத்தமி தான்: உடனே வீட்டிற்குள் நுழைந்து இதனை வருஷமாக உங்களை நம்பி இருந்த எனக்கே இப்படி துரோகம் பண்றீங்க என்று கோபப்படுகிறான். நல்லவள் சூடாமணியை கெட்டவளாக்கிட்டீங்க என்று சொல்ல சௌந்தரபாண்டி ஆமாம் சூடாமணி உத்தமி தான், அவ மேல பழியை போட்டு நான் ஜெயிலுக்கு அனுப்பினேன், அதுக்கு என்ன இப்போ என்று சொல்கிறான்.
மாட்டிக்கொண்ட சௌந்தரபாண்டி: மேலும் இந்த விஷயத்தை வெளியே சொல்லி இருந்தா நீயும் நானும் ஜெயிலுக்கு தான் போகணும் என்று சொல்ல ஷண்முகம் அதான் மாட்டிக்கிட்டிங்களே என்று கை தட்டியபடி உள்ளே என்ட்ரி கொடுக்க சௌந்தரபாண்டி ஷாக் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











