வெளிச்சத்திற்கு வந்த உண்மை.. கைதான சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில். சௌந்தர பாண்டியன் தனது மனைவியுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்து சனியன் சந்தேகம் அடைகிறான். வீட்டிற்குள் நுழைந்த சனியன் இதனை வருஷமாக உங்களை நம்பி இருந்த எனக்கே இப்படி துரோகம் பண்றீங்க என்று கோபப்படுகிறான். நல்லவள் சூடாமணியை கெட்டவளாக்கிட்டீங்க என்று சொல்ல சௌந்தரபாண்டி ஆமாம் சூடாமணி உத்தமி தான், அவ மேல பழியை போட்டு நான் ஜெயிலுக்கு அனுப்பினேன், அதுக்கு என்ன இப்போ என்று சொல்கிறான்.
இந்த விஷயத்தை வெளியே சொல்லி இருந்தா நீயும் நானும் ஜெயிலுக்கு தான் போகணும் என்று சொல்ல ஷண்முகம் அதான் மாட்டிக்கிட்டிங்களே என்று கை தட்டியபடி உள்ளே சண்முகம் என்ட்ரி கொடுக்க சௌந்தரபாண்டி ஷாக் ஆகிறான். இதையடுத்து அடுத்து இன்று என்ன ஆகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்; இன்றைய சீரியலில், உள்ளே வந்த சூடாமணி என் பையன் சொன்ன மாதிரியே நான் உத்தமினு என்பதை நிரூபிச்சிட்டான் என்று சௌந்தரபாண்டி கன்னத்தில் பளாரென அறைகிறாள். அடுத்து சௌந்தரபாண்டி இந்த விஷயம் தெரிந்தா என்ன? என்ன ஜெயிலுக்கா அனுப்ப போற, என்னை உன்னால ஒன்றும் பண்ண முடியாது என்று நக்கலாக பேசுகிறார். அப்போது போலீஸ் உள்ளே என்ட்ரி கொடுக்கிறது. முதல் ஆளாக போலீஸ் வந்து, நிற்க சௌந்தரபாண்டி போலீஸ் வந்தா என்னை கைது பண்ணிட முடியுமா? எங்க, உன் உயர் அதிகாரி என்று கேட்க முத்துப்பாண்டி உள்ளே என்ட்ரி கொடுக்கிறான்.
முத்துப்பாண்டி என்ட்ரி; சௌந்தரபாண்டி அவனை பார்த்ததும் என் புள்ள வந்துட்டான் டா, உங்களால என்ன ஒன்னும் பண்ண முடியும் என்று சந்தோசமாக பேச, முத்துப்பாண்டி அவனது கையால் சௌந்திரபாண்டிக்கு விலங்கு மாட்ட சௌந்தரபாண்டி ஷாக் அடைகிறார். டேய் நான் உன் அப்பா டா, நீ இன்னைக்கு இன்ஸ்பெக்டர் ஆக இருக்க நான் தான் காரணம் என்று சொல்ல முத்துப்பாண்டி அதெல்லாம் தேவையில்லை என்று அப்பாவை கைது செய்து அழைத்து செல்கிறான். பாக்கியம், பரணி, ஷண்முகம் என ஆள் ஆளாளுக்கு சௌந்தரபாண்டியை பார்த்து நீங்க பண்ண பாவத்துக்கு தண்டனை கிடைத்து விட்டது என்று சொல்ல அவர் இது இதோட முடிய போறது இல்ல, இனிமே தான் ஆட்டமே இருக்கு என்று சொல்லி விட்டு செல்கிறார்.
ஜெயிலில் சௌந்தர பாண்டி; அப்பாவை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த முத்துப்பாண்டி ஜெயிலுக்குள் தள்ள சொல்ல சௌந்தரபாண்டி மீண்டும் டேய் நான் உன் அப்பாடா என்று பேச முயற்சி செய்து முத்துப்பாண்டி மன வருத்தத்துடன் கடமையை செய்கிறான். சனியன் அய்யா போதையில் தெரியாமல் பண்ணிட்டேன் என்று மன்னிப்பு கேட்கிறான். அதைத் தொடர்ந்து சௌந்தரபாண்டி நீ என்னை வேற எதாவது விஷயத்தில் சந்தேகப்பட்டு இருந்தா கூட பரவாயில்ல, ஆனால் நான் உன் பொண்டாட்டிய தேடி வருவனா? நான் என் பொண்டாட்டிக்கு துரோகம் பண்ண மாட்டேன்ல என்று சனியனை அடி வெளுத்து எடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











