சௌந்தரபாண்டிக்கு ஷாக் கொடுத்த பாக்கியம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், முத்துப்பாண்டி, சௌந்தர பாண்டியை கைது செய்து, ஜெயிலுக்குள் தள்ளுகிறான். அப்போது, டேய் முத்துப்பாண்டி நான் உன் அப்பாடா என்று பேச முயற்சி செய்கிறான்.இதை காதில் வாங்கிக்கொள்ளாதவன் போல இருக்கும் முத்துப்பாண்டி, மன வருத்தத்துடன் கடமையை செய்கிறான்.
சிறையில் இருக்கும் சனியன், அய்யா போதையில் தெரியாமல் பண்ணிட்டேன் என்று மன்னிப்பு கேட்க, சௌந்தரபாண்டி நீ என்னை வேற எதாவது விஷயத்தில் சந்தேகப்பட்டு இருந்தா கூட பரவாயில்ல, ஆனால் நான் உன் பொண்டாட்டிய தேடி வருவேனா? நான் திருடன் தான், கொலைகாரன்தான். ஆனால், என் பொண்டாட்டிக்கு துரோகம் பண்ண மாட்டேன்ல என்று சனியனை அடி வெளுத்து எடுக்கிறார். இதையடுத்து இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.

அண்ணா: இன்றைய சீரியலில், முத்துப்பாண்டி அப்பாவையே கைது செய்த வருத்தத்தில் சாப்பிடாமல் உட்கார்ந்திருக்க முப்பிடாதி, ஐயா உங்க வருத்தம் புரியுது, ஆனால் நீங்க ஒரு அதிகாரியாக செய்ய வேண்டியதை தான் செய்திருக்கீங்க என்று சாப்பிட சொல்ல முத்துப்பாண்டி தனது அப்பாவை பற்றி பெருமையாக பேசுகிறான். இன்னொரு பக்கம் ஷண்முகம் வீட்டில் எல்லாரும் சாப்பிட உட்கார்ந்திருக்க பாக்கியம் சாப்பிடாமல் வருத்தத்துடன் இருக்கிறாள். முத்துப்பாண்டி கண்டிப்பா சாப்பிட்டு இருக்க மாட்டான் என்று வருத்தப்பட ஷண்முகம் சரி சாப்பிடுங்க நாம சாப்பாடு கொண்டு போய் கொடுத்து சாப்பிட வைக்கலாம் என்று சொல்கிறான்.
வருத்தத்தில் முத்துப்பாண்டி: அடுத்து இசக்கி மற்றும் பாக்கியம் என இருவரும் முத்துபாண்டிக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்து சாப்பிட வைக்கின்றனர், சாப்பிட்டு முடித்து முத்துப்பாண்டி வெளியே வந்து கை கழுவ ஷண்முகம் உட்கார்ந்து இருக்க அதை பார்த்து இவன் எதுக்கு இங்க வந்தான் என்று கேட்க அண்ணன் தான் சாப்பாடு கொண்டு போய் கொடுக்க சொன்னதாக சொல்கிறாள்.
பாக்யம் கொடுத்த ஷாக்: அடுத்து சனியன் சௌந்தரபாண்டியிடம் ஐயா அம்மா வந்திருக்காங்க என்று சொல்ல எனக்கு அவ வருவான்னு தெரியும் டா.. அவளால் நான் இல்லாமல் இருக்க முடியாது, மன்னிப்பு கேட்க வந்திருப்பா என்று பில்டப்பாக பேச முத்துப்பாண்டி அப்பாவை பார்த்துட்டு போறீங்களா என்று கேட்க அவரை நான் எதுக்கு பார்க்கணும்? அவர் பண்ண தப்புக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்று பல்பு கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











