சண்முகத்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்துப்பாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், இசக்கி மற்றும் பாக்கியம் என இருவரும் முத்துபாண்டிக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்து சாப்பிட வைக்கின்றனர். அடுத்து சனியன் சௌந்தரபாண்டியிடம் ஐயா அம்மா வந்திருக்காங்க என்று சொல்ல எனக்கு அவ வருவான்னு தெரியும் டா.. அவளால் நான் இல்லாமல் இருக்க முடியாது, மன்னிப்பு கேட்க வந்திருப்பா என்று பில்டப்பாக பேசுகிறான்.

இதைத் தொடர்ந்து முத்துப்பாண்டி, பாக்கியத்திடம் அப்பாவை பார்த்துட்டு போறீங்களா என்று கேட்க அவரை நான் எதுக்கு பார்க்கணும்? அவர் பண்ண தப்புக்கு இதுவும் வேனும் இன்னமும் வேணும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கக்போகிறது என்றுபார்க்கலாம்.

Zee tamil Anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், சண்முகம் குடும்பத்தினர் எல்லோரும் கோவிலுக்கு வந்து ஒன்றாக வீட்டுக்கு கிளம்ப கனி இன்னும் எதுக்கு முக்காடு என சூடாமணி தலையிலிருந்து முக்காட்டை எடுத்து விடுகிறாள். சூடாமணி குற்றம் அற்றவள் என்பது நிரூபணமானதால் தலை நிமிர்ந்து நடக்கிறாள். அப்போது, எங்கு இருக்கும் ஊர்காரர்கள் ஒவ்வொருத்தராக வந்து சூடாமணியிடம் உங்களை தப்பா நினைச்சுட்டோம் என்று மன்னிப்பு கேட்கின்றனர். இதைப் பார்த்து சண்முகம் குடும்பத்தினர் மொத்தமும் சந்தோஷம் அடைகிறது.

மகிழ்ச்சியில் இசக்கி: இவர்கள் வீட்டுக்கு வர முத்துப்பாண்டி வெளியில் காத்திருக்கிறான். அப்போது, வா மா வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிட பாக்கியம் அந்த ஆள் வீட்டுக்கு நான் வரமாட்டேன், இசக்கியை வேண்டுமானால் கூட்டிட்டு போ என்று சொல்கிறாள். உடனே, முத்துப்பாண்டி வீட்டுக்கே போலாம் என்று சொல்லிவிட்டு பைக்கில் ஏற என்ன எதுவும் சொல்லாம போறாரு என்று இசக்கி யோசிக்க உனக்கு புரியலையா வீட்டுக்கு கூப்பிடறாரு போ என்று அனுப்பி வைக்கின்றனர். இசக்கி முதல்முறையாக முத்துப்பாண்டி பைக்கில் உட்கார்ந்து வருவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறாள்.

கலாய்க்கும் சிவபாலன்: பின் வேகத்தடையில் பிரேக் போட, இசக்கி முத்து பாண்டியை இடிக்க, கோபப்பட்டு இடிக்காம வா என்கிறார். அப்போது, இசக்கி வண்டியில் இடிக்காமல் எப்படி வருவது என்று கேள்வி கேட்க தோளை பிடிச்சுக்கோ என்று சொல்ல இசக்கி சந்தோஷத்துடன் தோளை பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறாள். வீட்டிற்கு வந்தும், பைக்கை விட்டு இசக்கி இறங்காமல் உட்கார்ந்து இருப்பதை பார்த்த சிவபாலன் அவளை கலாய்க்க, இசக்கி வெட்கப்பட்டு உள்ளே ஓடுகிறாள்.

மொத்தமாக மாறிய முத்துப்பாண்டி: மறுபக்கம், கேரளா போலீஸ் சண்முகம் வீட்டிற்கு வந்து சூடாமணிக்கான பரோல் டைம் முடிய போவதாக சொல்கின்றனர். அதை நீட்டிப்பதற்காக உள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அவங்க இங்க பாதுகாப்பாக தான் இருக்காங்க என்று ஒரு ஃபைல் கொடுத்தா போதும் என்று சொல்கின்றனர். உள்ளூர் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி என்பதால் அவன் எப்படி தருவான் என்று சண்முகம் யோசிக்க பரணி அதை அவனிடமே கேட்டு விடலாம் என்று இரண்டு பேரும் ஸ்டேஷனுக்கு வந்து விஷயத்தை சொல்ல, முத்துப்பாண்டி ரைட்டர் வச்சி எழுதிட்டு வாங்க கையெழுத்து போடுறேன் என்று சொல்ல சண்முகம் ஆச்சரியப்படுகிறான்.

பிறகு ஐந்து நிமிடம் ஆகும் என்பதால் சண்முகம் வெளியில் காத்திருப்பதாக சொல்ல முத்துப்பாண்டி வெளியில் எதற்கு காத்திருக்கணும்? இங்கேயே உட்காருங்கள் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X