சனியனை போட்டு தள்ள பிளான் போட்ட சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், கேரளா போலீஸ் சண்முகம் வீட்டிற்கு வந்து சூடாமணிக்கான பரோல் டைம் முடிய போவதாக சொல்கின்றனர். அதை நீட்டிப்பதற்காக உள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கையெழுத்து வேண்டும் என்று சொல்ல, உள்ளூர் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி என்பதால் அவன் எப்படி தருவான் என்று சண்முகம் யோசிக்க பரணி அதை அவனிடமே கேட்டு விடலாம் என்று இரண்டு பேரும் ஸ்டேஷனுக்கு வந்து விஷயத்தை சொல்லி கையெழுத்து கேட்கின்றனர்.
பிறகு ஐந்து நிமிடம் ஆகும் என்பதால் சண்முகம் வெளியில் காத்திருப்பதாக சொல்ல முத்துப்பாண்டி வெளியில் எதற்கு காத்திருக்கணும்? இங்கேயே உட்காருங்கள் என்று சொல்லி கையெழுத்து போட்டுக்கொடுத்துவிட்டு, இன்னும் பத்து நாளில் அத்தையா கேரளா போலீசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா: இன்றைய எபிசோடில், சௌந்தரபாண்டி சூடாமணி ஜெயிலுக்கு செல்வதற்குள் அவளை போட்டு தள்ள முடிவெடுக்கிறான். சனியன் என்ன பண்ண போறீங்க? ஜெயிலுக்குள் இருக்கும் போது என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்புகிறான். பிறகு சௌந்தரபாண்டி ஏ. கே. எஸ் அண்ணாச்சியை வர வைத்து ஜாமீன் கேட்டீயா, நான் வெளியில் வந்தே ஆக வேண்டும், வெளியில் நிறைய வேலை இருக்கிறது என்று சொல்கிறான். அதான் சனியன் எல்லாத்தையும் சொல்லிவிட்டதால், ஜாமீன் கிடைக்கவில்லை என்று சொல்கிறான்.
சனியனை கடத்த திட்டம்: சனியனை தீர்த்து கட்டிவிடலாமா என்று அண்ணாச்சி கேட்க, வேண்டாம் அவன் இப்பாவி, நல்லவன், விஸ்வாசி என்று சௌந்தர பாண்டி சொல்ல, அப்போ அவனை கடத்திவிடலாமா அய்யா என்று அண்ணாச்சி ஐடியா கொடுக்க, இது சரியான ஐடியாத்தான், நான் வெளியில் வரணும் அதுக்கு சாட்சி சொல்ல சனியன் கோர்ட்-க்கு வர கூடாது, கோர்ட்க்கு அழைத்து செல்லும் வழியில் அவனை கடத்திடு என்றும் கட்டளையிடுகிறார்.
உதவி சண்முகத்தின் நண்பன்: இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்ததை கேட்ட காவல்நிலையத்தில் போலீசாக இருக்கும் சண்முகத்தின் நண்பன், சண்முகம் மற்றும் பரணியை பார்த்து, ஏ.கே.எஸ் அண்ணாச்சி வந்தாரு, அவரும் சௌந்தர பாண்டியனும் ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருந்தாங்க ஏதாவது பெருசா திட்டம் போடுறாங்க என்று சொல்கிறான். ரொம்ப மெதுவா பேசியதால் என்ன பேசுனாங்க என்று தெரியவில்லை, கவனமா இரு சண்முகம் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.
அண்ணாச்சி மீது வந்த சந்தேகம்: இதைத்தொடர்ந்து, ஷண்முகம் மற்றும் பரணி இருவரும் ஏ.கே.எஸ் அண்ணாச்சி மீது சந்தேகம் வந்து, அவனை எச்சரிக்க அவன் இடத்திற்கு போகின்றனர். அப்போது சண்முகம், என் குடும்ப விஷயத்தில் நீ தேவையில்லாமல் வந்தா அவ்வளவுதான். உன் வேலையை பாரு என்று சொல்ல, என் இடத்துக்கு வந்து என்னையே மிரட்டுறியா என்று கோபப்பட ஷண்முகம் அவனை அடிக்க பாய பரணி தடுத்து நிறுத்தி அவனை முத்துபாண்டியிடம் ஒப்படைக்கலாம் என்று சொல்கிறாள். பிறகு முத்துப்பாண்டி ஏ.கே.எஸ் அண்ணாச்சியை விசாரிக்க அவர் சௌந்தரபாண்டி சொன்ன விஷயத்தை சொல்லி விடுகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











