திருந்தாத சௌந்தரபாண்டி.. சூடாமணியை ஒழித்துக்கட்ட பிளான் .. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், சனியனை தீர்த்து கட்டிவிடலாமா என்று அண்ணாச்சி கேட்க, வேண்டாம் அவன் அப்பாவி, நல்லவன், விஸ்வாசி என்று சௌந்தரபாண்டி சொல்ல, அப்போ அவனை கடத்திவிடலாமா அய்யா என்று அண்ணாச்சி ஐடியா கொடுக்க, இது சரியான ஐடியாத்தான், நான் வெளியில் வரணும் அதுக்கு சாட்சி சொல்ல சனியன் கோர்ட்-க்கு வர கூடாது, கோர்ட்க்கு அழைத்து செல்லும் வழியில் அவனை கடத்திடு என்றும் கட்டளையிடுகிறார்.
இந்த விஷயத்தை, சண்முகத்தின் நண்பன், சண்முகம் மற்றும் பரணியை பார்த்து சொல்லிவிட, ஷண்முகம் மற்றும் பரணி இருவரும் ஏ.கே.எஸ் அண்ணாச்சி மீது சந்தேகம் வந்து, அவனை எச்சரிக்க அவன் இடத்திற்கு போகின்றனர். அப்போது சண்முகம், என் குடும்ப விஷயத்தில் நீ தேவையில்லாமல் வந்தா அவ்வளவுதான். உன் வேலையை பாரு என்று சொல்ல, என் இடத்துக்கு வந்து என்னையே மிரட்டுறியா என்று கோபப்பட ஷண்முகம் அவனை அடிக்க பாய பரணி தடுத்து நிறுத்தி அவனை முத்துபாண்டியிடம் ஒப்படைக்கின்றனர். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், அண்ணாச்சியை முத்துபாண்டியிடம் ஒப்படைத்துவிட்டு, இனி அவரை இப்படியே விட்டால், எல்லா சாட்சிகளையும் களைத்துவிடுவார். இதனால், அவரை நீதிபதியிடம் ஒப்படைத்துவிடலாம் என்று பரணி சொல்ல, சௌந்தரபாண்டியை முத்துப்பாண்டி நீதிபதி முன் ஆஜர்படுத்துகிறார். இதைத் தொடர்ந்து நீதிபதி சௌந்தரபாண்டிக்கு15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிடுகிறார்.

நாடகமாடும் சௌந்தரபாண்டி: இதைத்தொடர்ந்,முத்துப்பாண்டி, அப்பாவிடம் ஏன் இப்படி எல்லாம் செய்றீங்க, அந்த குடும்பத்திற்கு செய்த கொடுமை போதாதா, மறுபடி மறுபடியும் அந்த குடும்பத்திற்கு இப்படி தொல்லை கொடுப்பது நல்லது இல்லை, இதுக்கு மேலும் நீங்க இப்படி செய்தா நல்ல இருக்காது என்று மனம் விட்டு பேசுகிறான். இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த சௌந்தரப்பாண்டி மனம் திருந்துவது போல நாடகமாடுகிறான்.

சூடாமணியை போட்டுத்தள்ள பிளான்: ஏலே முத்துப்பாண்டி, நான் திருந்திட்டேன்டா என்னை எப்படியாவது காப்பாத்து டா என்று கதறுகிறார். நான் இனி மேல் சூடாமணிக்கும், சண்முகம் குடும்பத்திற்கும் எந்த கேட்டதும் நினைக்க மாட்டேன், உன் அம்மா, உன் பொண்டாட்டிக்கு மரியாதை கொடுப்பேன்.

நான் திருந்திட்டேன்டா என்னை காப்பாத்து என்று கதற. முத்துப்பாண்டி மனம் மாறி, சரி இனிமேல் நீங்க ஜெயிலுக்கு போக மாட்டீங்க நான் உங்களை பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறான்.

இதைத்தொடர்ந்து, சூடாமணியை போட்டுத் தள்ள ஆளை ஏற்பாடு செய்கிறான் முத்துப்பாண்டி. இதைத்தொடர்ந்து அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











