மகனிடம் பாசத்தை காட்டி ஏமாற்றிய சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், பாத்திரக்கடை அண்ணாச்சியை முத்துபாண்டியிடம் ஒப்படைத்துவிட்டு, இனிமை,அப்பாவை இப்படியே விட்டால், அவர் எல்லா சாட்சிகளையும் கலைத்துவிடுவார். இதனால், அவரை நீதிபதியிடம் ஒப்படைத்துவிடலாம் என்று பரணி சொல்ல, சௌந்தரபாண்டியை முத்துப்பாண்டின நீதிபதி முன் ஆஜர்படுத்துகிறார். இதைத் தொடர்ந்து நீதிபதி சௌந்தரபாண்டிக்கு15நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிடுகிறார். இதைத் தொடர்ந்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், சௌந்தரபாண்டி, முத்துப்பாண்டிக்காக சின்ன வயசில் அவனுக்காக செய்த விஷயங்களை சொல்லிக் காட்டி முத்துப்பாண்டியை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறார். செய்ததை எல்லாம் சௌந்தர பாண்டி சொல்லிக் காட்ட முத்துப்பாண்டி மனம் மாறி முத்துப்பாண்டி பக்கம் செல்கிறான். கடைசியாக இப்ப நான் என்ன பண்ணனும் என்று கேள்வி கேட்க என்னை தப்பிக்க வைக்கணும் என்று சொல்கிறார் சௌந்தரபாண்டி.

Zee tamil Anna

பிளான் போடும் சௌந்தரபாண்டி: பிறகு முத்துப்பாண்டி சரி உங்களை தப்பிக்க வைக்கிறேன், ஆனா நீங்க திரும்பவும் எந்த தகராறுக்கும் போகக்கூடாது என சொல்ல சௌந்தரபாண்டி, சத்தியமா சொல்லுறேன், சூடாமணிக்கும், சண்முகம் குடும்பத்திற்கும் எந்த கேட்டதும் நினைக்க மாட்டேன், உன் அம்மா, உன் பொண்டாட்டிக்கு மரியாதை கொடுப்பேன். நான் திருத்திட்டேன்டா என்று சொல்லி கதறுகிறார்.

அறுபதாம் கல்யாணம்: மறுபக்கம் சண்முகம் குடும்பத்தினர் எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க அப்போது வைகுண்டம், சூடாமணிக்கு அறுபதாம் கல்யாணம் செய்ய முடிவெடுத்து இருப்பதாக சண்முகம் சொல்கிறான். ஆனால் சூடாமணி, கல்யான வயசில் ரத்னா இருக்கும் போது, இந்த கல்யாணம் நடந்த நல்லாவா இருக்கும். முதலில் ரத்னா கல்யாணம் முடியட்டும், எங்களுக்கு எதுக்கு அறுபதாம் கல்யாணம் என்று கேள்வி கேட்க, சண்முகம் ரத்னாவோட கல்யாணம் தான் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்க போகுதுல என்று சொல்கிறான். சூடாமணி நிச்சயத்தில் நடந்த பிரச்சனையால் அவ இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருக்கா அவ கல்யாணத்துக்கு சம்மதிக்கட்டும் அதுக்கப்புறம் அறுபதாம் கல்யாணம் பற்றி யோசிக்கலாம் என்று சொல்கிறாள்.

சண்முகம் போட்டபிளான்: அடுத்து சண்முகம் மற்றும் உடன்குடி என இருவரும் தாடி மீசை எல்லாம் வைத்துக் கொண்டு மாறுவேடம் அணிந்து ரத்னா, வெங்கடேசனை சேர்த்து வைக்க வெங்கடேஷ் உடன் இணைந்து திட்டம் ஒன்றை தீட்டுகின்றனர். பிறகு வெங்கடேஷ் நடந்து வரும் ரத்னாவை வண்டியில் ஏற சொல்லி கூப்பிட அவள் முடியாது என்று கோபப்படுகிறாள். அப்போது, சண்முகம், பரணி கையை கையை பிடித்து இழுத்து சைகை காட்ட, வெங்கடேசனும் ரத்னா கையை பிடித்து இழுக்க உடனே மாறு வேடத்தில் இருந்த சண்முகம், உடன்குடி ஆகியோர் ஓடி வந்து பொம்பள புள்ள கிட்ட தகராறு பண்றியா என வெங்கடேஷை போட்டு அடிக்கின்றனர்.

பிறகு ரத்னா இடையில் புகுந்து அவர், நான் கட்டிக்க போற மாப்பிள்ளை என தடுத்து நிறுத்துகிறாள். பிறகு வெங்கடேஷ் உடன் பைக்கில் ஏறி செல்ல வைகுண்டம், சூடாமணி இதை பார்த்து சந்தோஷப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X