விஷ பாட்டிலை வைத்து மிரட்டிய இசக்கி.. அதிர்ச்சியில் சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில், சௌந்தரபாண்டியன் இசக்கியை அடித்து ரூமில் அடைத்துவைத்த நிலையில், வைகுண்டம் அங்கு வந்து சண்டை போட்டு தகராறு செய்ததை அடுத்து இசக்கி வெளியே வருகிறார். அப்போது பாக்யம், சூடாமணி தான் அம்மா என்ற உண்மையை சொல்ல வெளியே வந்த இசக்கி சூடாமணியை பார்த்து நீங்க தான் என் அம்மாவா என்று கட்டிப்பிடித்து கண் கலங்குகிறாள்.
இதைப்பார்த்த ரத்னாவிற்கும் உண்மை தெரிய,சூடாமணி மடியில் படுத்து நீங்க எங்களை விட்டு எங்கேயும் போகாதீங்க என்று பேசி கண் கலங்குகின்றனர். சூடாமணி உங்களுக்காக தான் ஜெயிலில் இருக்கேன் என்ற விஷயத்தை சொல்ல இதை வீராவும் கனியும் கேட்டு விட மொத்த குடும்பத்திற்கும் சூடாமணி தான் அம்மா என்கிற உண்மை தெரியவருகிறது. இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், ரத்னா, வீரா, கனி அனைவரும், சூடாமணியை கட்டியணைத்து அழுகின்றனர். நீங்க தான் அம்மானு தெரியாமல் உங்ககிட்டயே அம்மாவை திட்டி பேசி இருக்கோம் என்று வருத்தப்பட சூடாமணி உங்க இடத்தில் நான் இருந்து இருந்தாலும் அது தான் நடந்திருக்கும் என்று சொல்கிறாள். பிறகு அண்ணனுக்கு விஷயம் தெரிந்தும் எதுக்கு சொல்லல என்று கேட்க நான் தான் சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டதாக சொல்கிறாள். அண்ணன் நம்ம கிட்ட உண்மையை சொல்லாத மாதிரி நாமளும் நமக்கு உண்மை தெரிந்துடுச்சுனு காட்டிக்க வேண்டாம், நாம ஒரு கேம் விளையாடுவோம் என்று முடிவெடுக்கின்றனர்.
மிரட்டி: இதையடுத்து, பாக்யமும் இசக்கியும் வீட்டிற்கு வர சௌந்தரபாண்டி துப்பாக்கியுடன் எதிரே நின்று அதிர்ச்சி கொடுக்கிறார். இனிமே அந்த வீட்டிற்கும் எனக்கும் ஒட்டும் இல்ல உறவும் இல்லனு சொன்னா உள்ளே விடுறேன் என்று சொல்ல பாக்கியம் அப்படியெல்லாம் சொல்ல முடியாது என்று சொல்கிறாள். சனியன் அம்மா நீங்க இங்கேயே இருங்க நான் ஐயா கிட்ட பேசி உங்களை உள்ளே கூட்டிட்டு போறேன் என்று சொல்கிறான். உடனே பாக்கியம் நீ என்னை உள்ள கூட்டிட்டு போறியா? வா இங்க என்று கேட்டு கன்னத்தில் ஒரு அறை விட சனியன், சௌந்தரபாண்டி காலடியில் வந்து விழ கையில் ஏந்திய துப்பாக்கி கீழே இறங்க இசக்கி ஒரு பாட்டிலை காட்டி இது என்னனு தெரியுமா? விஷம், இங்க தான் சாப்பிடணும் நியாபகத்துல வச்சிக்கோங்க என்று மிரட்டி விடுகிறாள்.
மகிழ்ச்சியில் குடும்பம்: இதை தொடர்ந்து சண்முகத்தின் தங்கைகள் சூடாமணி கண்ணை கட்டி ஒளிந்து விளையாட வைகுண்டம், சூடாமணி கையை பிடித்து ரொமான்ஸ் செய்ய இதை பார்த்த வெட்டுக்கிளி மூணு தங்கைகளையும் தனியா கூட்டிட்டு போய் வீட்டிற்கு வந்திருப்பது உங்க அப்பாவோட செட்டப், அவங்க வீட்டில் இருக்கிறது நல்லது இல்ல என்று சொல்கிறான். இதை கேட்ட ரத்னா அப்பாவுக்கும் வயசாகுதுல, அவருக்கும் ஒரு துணை வேணும். செட்டப் தானே வச்சிக்கட்டும் என்று சொல்ல வெட்டுக்கிளி குடும்பமா இது? இனிமே இந்த வீட்டு வாசப்படியே மிதிக்க கூடாது என்று வெளியே வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











