கண்மூடித்தனமான அப்பா பாசம்.. முத்துப்பாண்டி போட்ட பிளான்..அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், சௌந்தரபாண்டி, முத்துப்பாண்டிக்காக சின்ன வயசில் அவனுக்காக செய்த விஷயங்களை சொல்லிக் காட்டி முத்துப்பாண்டியை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறார். செய்ததை எல்லாம் சௌந்தரபாண்டி சொல்லிக் காட்ட முத்துப்பாண்டி மனம் மாறி சௌந்தரபாண்டி பக்கம் செல்கிறான்.
மறுபக்கம் வைகுண்டம், சூடாமணிக்கு அறுபதாம் கல்யாணம் செய்ய முடிவெடுத்து இருப்பதாக சண்முகம் சொல்கிறான். ஆனால் சூடாமணி, கல்யான வயசில் ரத்னா இருக்கும் போது, இந்த கல்யாணம் நடந்த நல்லாவா இருக்கும். முதலில் ரத்னா கல்யாணம் முடியட்டும், எங்களுக்கு எதுக்கு அறுபதாம் கல்யாணம் என்று கேள்வி கேட்கிறாள். அதன் பின் ரத்னாவும் வெங்கடேஷும் ஒன்று சேர்த்துவைக்கின்றனர்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், ரத்னாவும் வெங்கடேஷும் ஒன்று சேர்ந்து விட்டதாக சொல்கிறான், யாரோ ஒரு ரெண்டு பேரால் தான் இப்படி நடந்ததாக சொல்ல உடன்குடி, ஷண்முகம் தான் இதற்கு காரணம் என்ற உண்மையை உடைக்க மொத்த குடும்பமும் சந்தோஷமடைகிறது.
சூடாமணி கொல்ல திட்டம் : மறுபக்கம், சௌந்தரபாண்டி ஏ.கே.எஸ் அண்ணாச்சியை கூப்பிட்டு நான் வெளியே வரும் போது அந்த சூடாமணி உயிரோட இருக்க கூடாது என்று சொல்கிறார். செத்து போன திருடனோட புள்ளைங்களுக்கு சூடாமணி வந்திருக்கும் விஷயங்களை தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார். அடுத்து ஏ.கே.எஸ் அண்ணாச்சி அந்த திருடனின் வாரிசு நம்பரை தேடி கண்டுபிடித்து உன் அப்பாவை கொன்னவள் இங்க தான் இருக்கா என்று சொல்ல அவங்களை உயிரோட விட மாட்டேன் என்று கிளம்பி வருகின்றனர்.
அப்பாவை காப்பாற்றும் முத்துப்பாண்டி: அடுத்து வைகுண்டம் இந்த 60-ம் கல்யாணம் எல்லாம் தேவையா என்று கேட்க, ஷண்முகம் கண்டிப்பா தேவை என்று சொல்கிறான். பிறகு ஷண்முகம் அப்பா அம்மா பெயரில் ஸ்பெஷல் அர்ச்சனை செய்ய கோவிலுக்கு வந்திருக்க முத்துப்பாண்டி குளத்தில் மூழ்கி எழுந்து ரவுடிகளுக்கு போன் செய்து சனியனை கடத்த சொல்கிறான். அப்பா ரிலீஸ் ஆக வேண்டும் என்று பேசி கொண்டிருக்க இதை கனி கேட்டு விட முத்துப்பாண்டி அதிர்ச்சி அடைகிறான்.
பிறகு கனி ஓடி வந்து ஷண்முகத்திடம் அப்பாவுக்கு இவர் தானே தண்டனை வாங்கி தரணும், இவரே அப்பா ரிலீஸ் ஆகணும்னு சாமி குடும்பிடுவதாக சொல்ல முத்துபாண்டி சமாளிக்கிறான். அடுத்து ரவுடிகளை சந்தித்து முத்துப்பாண்டி அப்பாவை தப்பிக்க வைக்க சொல்லி பணத்தை கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











