உயிர் தப்பிய சூடாமணி.. கொல்ல வந்தவனுக்கு நடந்த சோகம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், முத்துப்பாண்டி தனது அப்பா சௌந்தரபாண்டியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று, ரௌடிகளை வைத்து கோர்ட்டுக்கு போகும் வழியில் சனியனை கடத்த திட்டம் போடுகிறான். அப்போது தான் சூடாமணியை கடத்த சௌந்தர பாண்டி போட்ட திட்டம் அவனுக்கு தெரியவருகிறது. இதைத் தொடர்ந்து இன்று என்ன நடக்கக்போகிறது என்று பார்க்கலாம்.
அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், முத்துப்பாண்டி சௌந்தரபாண்டி சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைகிறான். உடனே ஷண்முகத்திடம் ஓடி வந்து அத்தை எங்கே என்று கேட்க அப்பாவுடன் கோவிலுக்கு சென்றிருப்பதாக சொல்கிறான். கூட யார் போய் இருக்கா என்று கேட்க ஷண்முகம் போட்டோகிராபர் என்று சொன்னதும் முத்துப்பாண்டி அதிர்ச்சியாகி, அது போட்டோகிராபர் இல்ல, அத்தையை கொல்ல வந்தவன் என்று சொன்னதும் ஷண்முகம் அதிர்ச்சி அடைகிறான்.மேலும் அப்பா தான் அத்தையை கொல்ல ஆள் அனுப்பி வச்சிருக்காரு என்ற விஷயத்தை சொல்லி ஷண்முகத்தை கோவிலுக்கு அனுப்பி வைக்கிறான்.

சனியனை கடத்திய ரவுடி: இதைத்தொடர்ந்து, முத்துப்பாண்டி ஸ்டேஷனுக்கு கிளம்பி விட்டு, ரவுடிகளுக்கு போனை போட்டு சனியனை கடத்த வேண்டாம் என்று சொல்ல, ரௌடிக்கு போன் போடுகிறான். ஆனால், அந்த ரவுடிகள் போனை எடுக்காமல் இருக்கின்றனர். பின், ரவுடிகள் முத்துபாண்டிக்கு போன் செய்து சனியனை கடத்தி விட்டதாக சொல்கின்றனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த முத்துப்பாண்டி, சனியனை மறுபடியும் கடத்திய இடத்திலேயே விட்டுவிடுங்கள் என்று சொல்ல, ரௌடிகள் பதறிப்போய், அய்யோ.. அது முடியாது, நாங்க மறுபடி அங்கே போனா போலீஸ்புடிச்சிடும் என்று சொல்ல, அதெல்லாம் ஒன்னும் ஆகாது என்று பேசிக்கொண்டிருக்கின்றனர்.
இதை சனியன் கேட்டுவிட்டு நைசா தப்பித்துவிடுகிறான். உடனே ரவுடிகள், முத்துப்பாண்டி சார், சனியன் நாம பேசியதை கேட்டுவிட்டு தப்பித்துவிட்டான் என்று சொல்ல, முத்துப்பாண்டி டென்ஷனாகி, ஒரு ஆளை ஒழுங்க பாத்துக்க தெரியலையா... போங்க போய் சனியனை தேடுங்க என்று ஆத்திரத்தில் கத்துகிறான்.
பதறிப்போன சூடாமணி: மறுபக்கம் போட்டோகிராபராக வந்தவன் சூடாமணியை கொல்ல முயற்சி செய்கிறான். ஆனால், அந்த அட்டெம்ப்ட் அனைத்தும் தோல்வியில் முடிகிறது. இதைத்தொடர்ந்து கோவிலில், எலெக்ட்ரிக்கல் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து, அந்த போட்டோகிராபர், சூடாமணியை சுட சரியான நேரத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் போது, ஷண்முகம் அம்மா என்று கத்த, பதறிப்போன போட்டோகிராபர் எலக்ட்ரிக்கல் ஒயரை மிதித்து ஷாக் அடித்து மயங்கி விழுகிறான்.
உடனே பதறிப்போன சூடாமணி எந்த ஒரு உயிரும் போக கூடாது, எப்படியாவது இந்த பையனை காப்பாத்து ஷண்முகம் என்று சொல்ல அம்மாவை கொல்ல வந்தவனை காப்பாற்றும் வேலையில் இறங்குகிறான் ஷண்முகம். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











