வேறு ஒரு திட்டத்தோடு சூடாமணி வீட்டுக்கு வந்த சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், போட்டோகிராபராக வந்தவன் சூடாமணியை கொல்ல வந்தவன் என தெரிந்து கோவிலுக்கு சண்முகம் வேகமாக வந்து கொண்டு இருக்கிறான். ஆனால், போட்டோ கிராப்பர் செய்த அட்டெம்ப்ட் அனைத்தும் தோல்வியில் முடிகிறது. இதைத்தொடர்ந்து கோவிலில், எலெக்ட்ரிக்கல் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து, அந்த போட்டோகிராபர், சூடாமணியை சுட சரியான நேரத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் போது, ஷண்முகம் அம்மா என்று கத்த, பதறிப்போன போட்டோகிராபர் எலக்ட்ரிக்கல் ஒயரை மிதித்து ஷாக் அடித்து மயங்கி விழுகிறான்.
உடனே பதறிப்போன சூடாமணி எந்த ஒரு உயிரும் போக கூடாது, எப்படியாவது இந்த பையனை காப்பாத்து ஷண்முகம் என்று சொல்ல அம்மாவை கொல்ல வந்தவனை காப்பாற்றும் வேலையில் இறங்குகிறான் ஷண்முகம். இதையடுத்து இன்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

அண்ணா: இன்றைய எபிசோடில், போட்டோகிராபரை ஷண்முகம் காப்பாற்றிய நிலையில், அதை பார்த்த சூடாமணி சந்தோசப்படுகிறாள், நல்லவேளை உனக்கு எதுவும் ஆகலப்பா என்று சந்தோசமாக பேச அதை பார்த்த அவன் கொல்ல வந்தவனே சாக கூடாதுனு நினைக்கிறாங்க-னு பீல் பண்ணுகிறான். பிறகு அவனை வீட்டிற்கு அழைத்து வர சிவபாலன் ஆகியோர் அடிக்க பாய தடுத்து நிறுத்திய ஷண்முகம் அவன் இப்படி வந்து நிற்கிறானா அதுக்கு காரணம் உன் அப்பன் தான் என்று சொல்ல முத்துப்பாண்டி அதிர்ச்சி அடைகிறான்.
கொலை செய்த சௌந்தரபாண்டி: உன் அப்பா கொலையை பண்ணிட்டு என் அம்மா மேல பழியை போட்டு தப்பிச்சிட்டான் என்று சொல்ல, கொல்ல வந்தவன் உண்மை அறிந்து மன்னிப்பு கேட்கிறான், இதை தொடர்ந்து கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் நடக்க சூடாமணியை பெண்களும் வைகுண்டத்தை ஆண்களும் ஒன்று சேர்ந்து அலங்கரிக்கின்றனர். அடுத்து சூடாமணி வைகுண்டத்தை உட்கார வைத்து சாப்பாடு பரிமாற மாமா முறை பையன் தான் உட்காரனும் என்று சொல்ல முத்துப்பாண்டி உட்காரலைனா என்ன நான் உட்காருறேன் என்று சிவாபாலன் உட்கார போகிறான்.
என்ன திட்டமோ தெரியல: அப்போது, எங்கிருந்தோ வந்த சௌந்தரபாண்டி, சிவபாலனை எட்டி உதைத்துவிட்டு உட்கார அனைவரும் அவனைப்பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். மச்சான் பக்கத்துல நான் தானே உட்காரனும், என் தங்கச்சிக்குத்தான 60வது கல்யாணம் நான் இருக்காம போய்டுவேனா, அதான் தப்பித்து வந்தேன் என்று சொல்ல அனைவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











