தப்பிய சனியன்.. மாஸாக என்ட்ரியான சௌந்தரபாண்டி..அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், சூடாமணியை கொல்ல வந்தவனை காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில், அந்த கொலையை செய்தது சூடாமணி இல்லை சௌந்தர பாண்டி என்பதும், கொலையை செய்துவிட்டு சூடாமணி மீது பழியை போட்டு தப்பித்து விட்டான் என்பது தெரிய வர, கொல்ல வந்தவன் உண்மை அறிந்து மன்னிப்பு கேட்கிறான். இதை தொடர்ந்து கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் நடக்க சூடாமணியை பெண்களும் வைகுண்டத்தை ஆண்களும் ஒன்று சேர்ந்து அலங்கரிக்கின்றனர்.

அடுத்து சூடாமணி வைகுண்டத்தை உட்கார வைத்து சாப்பாடு பரிமாற எங்கிருந்தோ வந்த சௌந்தரபாண்டி, சிவபாலனை எட்டி உதைத்துவிட்டு, உட்கார அனைவரும் அனைப்பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். மச்சான் பக்கத்துல நான் தானே உட்காரனும், என் தங்கச்சிக்குத்தான 60வது கல்யாணம் நான் இருக்காம போய்டுவேனா, இதற்காகத்தான் தப்பித்து வந்தேன் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil Anna

அண்ணா: இன்றைய எபிசோடில், அடாவடியாக வந்த சௌந்தரப்பாண்டி பந்தியில் வந்து சாப்பிட, சண்முகம் முத்துப்பாண்டியிடம் இப்போ இவனை வெளியில் அனுப்பவில்லை என்றால் நான் அடித்து அனுப்புவேன் என்று சொல்ல, பரணி சமாதானப்படுத்துகிறாள். உடனே சௌந்தரப்பாண்டி நான் ஜெயில்ல இருப்பேனு நினைச்சியா, என்ன ஜெயிலுக்கு எல்லாம் அனுப்ப முடியாது சாட்சி இல்லை என்று சொல்லிட்டாங்க என்று தக்கலாக சிரிக்கிறார். இதைத்தொடர்ந்து, பரணி, முத்துப்பாண்டியிடம் என்ன ஆச்சு என்று கேட்க, சாட்சி சொல்ல வந்த சனியன் தப்பித்துவிட்டான் என்று சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

வெறுப்பேத்தும் சௌந்தர பாண்டி: அதைத்தொடர்ந்து, முத்துப்பாண்டி,சௌந்தரபாண்டியின் கையைப் பிடித்து தர தரதரவென இழுத்து வெளியில் விட, டேய், முத்துப்பாண்டி என்னடா மரியாதை தெரியாதவனா இருக்க, கல்யாண விருந்து சாப்பிடும் போது இப்படி செய்யலாமா என்று வெறுப்பேத்தும் வகையில் பேசுகிறான். உடனே சூடாமணியைப்பார்த்து என் சூடாமணி, 60வது கல்யாணம் முடிஞ்ச கையோட ஜெயிலுக்கு போறியா போ... போ... உன் புருஷன் உன்ன சைக்கிளிலேயே கொண்டு போய்விடுவான். போகும் போது இதே மாலையே போட்டுவிட்டு போ அப்போத்தான், எனக்கு மாலை வாங்கும் காசு மிச்சம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான். உடனே சண்முகம், என்ன முத்துப்பாண்டி இப்படி ஆகிவிட்டது என்று சொல்ல, சனியனை தேடிக்கிட்டுத்தான் இருக்கிறோம் சிக்கிரம் அவன் சிக்குவான் கவலைப்படாத சண்முகம் என்று சொல்கிறான

இதைத்தொடர்ந்து, பரீட்சை எழுதுவதற்காக கனி,வீரா, இசக்கி மூன்று பேரையும் அழைத்துக்கொண்டு பரீட்சை எழுத செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X