ஆள் மாறாட்டம் செய்த சண்முகம்.. தாலி கட்டப்போவது யார்? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில்,சௌந்தரபாண்டியின் கையைப் பிடித்து தர தரதரவென இழுத்து வெளியில் தள்ளுகிறான் முத்துப்பாண்டி. இதைத்தெடர்ந்து, சௌந்தரபாண்டி, டேய், முத்துப்பாண்டி என்னடா மரியாதை தெரியாதவனா இருக்க, கல்யாண விருந்து சாப்பிடும் போது இப்படி செய்யலாமா என்று வெறுப்பேத்தும் வகையில் பேசுகிறான்.
பின் சூடாமணி 60வது கல்யாணம் முடிஞ்ச கையோட ஜெயிலுக்கு போறியா , போகும் போது இதே மாலையே போட்டுவிட்டு போ அப்போத்தான், எனக்கு மாலை வாங்கும் காசு மிச்சம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான். பின் பரீட்சை எழுதுவதற்கான கனி, வீரா, இசக்கி மூன்று பேரையும் அழைத்துக்கொண்டு ஷண்முகம் ஊருக்கு செல்கிறான். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடு ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக இரண்டரை மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது. ஷண்முகம் தங்கைகளுடன் மதுரைக்கு காரில் வந்து கொண்டிருக்க இளநீர் குடிப்பதற்காக ஒரு கடை அருகே இறங்குகின்றனர். அப்போது ஒருவன் லாரியில் விழுந்து சாக முயற்சி செய்ய ஷண்முகம் ஓடி சென்று காப்பாற்றுகிறான். அந்த நபர், சண்முகத்தை போலவே இருக்கும் டாக்டர் சரவணன் என தெரிய வருகிறது, ஷண்முகம் அவனை பற்றி விசாரிக்க நான் சரவணன், டாக்டராக இருக்கிறேன் என்று சொல்கிறான்.
சரவணனை காப்பாற்றிய சண்முகம்: மேலும் நான் கோப்பெருந்தேவி என்கிற ஒரு பொண்ணை காதலிக்கிறேன். அவளை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுகிறேன். ஆனால் அவளுக்கு வேறொரு பையனோட கல்யாணம் பண்ணி வைக்க பார்க்குறாங்க. எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னா அவங்க சொல்ற போட்டியில் கலந்துக்கிட்டு ஜெயிக்கணும்னு சொல்றாங்க. அவங்க படிப்பு பத்தி ஏதாவது சொன்னா நான் ஜெயித்திடுவேன், ஆனால் வீரத்தை நிரூபிக்க சொல்லி சொல்றாங்க என்று புலம்புகிறான். இதனால் ஷண்முகம் சரவணனாக மாற முடிவு எடுக்கிறான்.
ஆள் மாறாட்டம்: சரவணனை வீராவுடன் எக்ஸாம் எழுதும் இடத்திற்கு அனுப்பி வைத்து விட்டு ஷண்முகம் டாக்டராக மாறி கோப்பெருந்தேவி வீட்டிற்கு வருகிறான், அவளது பாட்டி உனக்கு எப்படிடா எங்க வீட்டு பொண்ணை தர முடியும்? உன் வீரத்தை காட்டு அப்புறம் பார்க்கலாம் என்று சில போட்டிகளை வைக்கின்றனர். முதல் போட்டியாக கல் தூக்கும் போட்டி நடக்கிறது, ஷண்முகம் அசால்டாக செய்து முடிக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர், அடுத்து கோப்பெருந்தேவிக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளையுடன் சிலம்பாட்டத்தில் மோதி ஜெயிக்க சொல்கின்றனர். ஷண்முகம் இந்த போட்டியிலும் ஜெயித்து விடுகிறான்.
மணமேடை ஏறும் ஷண்முகம்: மூன்றாவதாக வீட்டு பெண்கள் விலை வாசி எல்லாம் தெரிந்து வச்சிருக்கானா என்பதை பரிசோதிக்கும் வகையில் அரிசி, பருப்பு விலை எல்லாம் கேட்க அசால்ட் செய்கிறான் ஷண்முகம். இதனால் கல்யாணம் முடிந்து தான் இந்த வீட்டை விட்டு வெளியே போகணும் என்று அவனை ரூமுக்குள் பூட்டி வைக்கின்றனர். இங்கே எக்ஸாம் தொடங்கி விட போலீஸ் வீராவை உள்ளே விட மாட்டோம் என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர். அந்த நேரத்தில் ஒரு போலீஸ் மயங்கி விழ சரவணன் அவரை பரிசோதித்து குணப்படுத்த வீராவை தேர்வு எழுத அனுமதிக்கின்றனர்.
சரவணனும் சண்முகமும் இடம் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்க ஷண்முகம் அங்கிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கிறான், மாப்பிள்ளையாக மணமேடைக்கு ஏற்ற படுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? கோப்பெருந்தேவி கழுத்தில் சரவணன் தாலி கட்ட போவது எப்படி? ஷண்முகம் அங்கிருந்து தப்பிக்க போவது எப்படி என அண்ணா சீரியலை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











