வேறுவழியில்லாமல் தாலி கட்டிய சண்முகம்.. பரணியின் நிலை என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், சண்முகம், தங்கைகளை பரீட்சைக்கு அழைத்து செலலும் போது, ஒருவன் லாரியில் விழுந்து சாக முயற்சி செய்ய சண்முகம் ஓடி சென்று காப்பாற்றுகிறான். அந்த நபர், சண்முகத்தை போலவே இருக்கும் டாக்டர் சரவணன் என தெரிய வருகிறது. இதைத்தொடர்ந்து, கோப்பெருந்தேவி என்கிற ஒரு பொண்ணை காதலிக்கிறேன். அவளை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுகிறேன். ஆனால் அவளுக்கு வேறொரு பையனோட கல்யாணம் பண்ணி வைக்க பார்க்குறாங்க.
ஏதோ போட்டி நடத்துறாங்க, இதில் நான் நிச்சயம் ஜெயிக்க மாட்டேன் அதான் இந்த முடிவு எடுத்தேன் என்று சொல்ல, சண்முகம், டாக்டர் சரவணனாக மாறி அந்த இடத்திற்கு சென்று அனைத்து போட்டிகளிலும் ஜெயித்து விடுகிறான். இதைத்தொடர்ந்து கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா: இன்றைய எபிசோடில், சண்முகத்தை கல்யாணம் முடியும் வரைக்கும் நீ எங்கேயும் போகக்கூடாது என்று வீட்டில் வைத்து பூட்டி வைக்கின்றனர். அடுத்த நாள் காலையில் கோப்பெருந்தேவியுடன் திருமணத்திற்கு ஏற்பாடு நடந்து கொண்டு இருக்க, சண்முகம் என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றத்தில் இருக்கிறான். இதைத்தொடர்ந்து திருமணம் நேரம் நெருங்க என்ன மாப்பிள்ளை இன்னும் ரெடியாகாமல் இருக்கீங்க என்று கேட்க வேறு வழியே இல்லாமல், சரவணனாக நடித்து கொண்டு இருக்கும் சண்முகத்தை மணமேடைக்கு ஏற்றி விடுகின்றனர்.
அடுத்து என்ன ஆகும்: சண்முகம் மணமேடையில் இருக்க சரவணன் உள்ளே வர முடியாமல் தவிக்க கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் நடக்கிறது. கோப்பெருந்தேவிக்கு மட்டுமே மாப்பிள்ளையாக இருப்பது சண்முகம் என்ற ரகசியம் தெரியும். அவள் என்ன ஆகுமோ என்கிற பதற்றத்தில் இருக்கிறாள். இந்த நேரத்தில் சண்முகம் கையில் தாலியை கொடுத்து கட்டவும் சொல்ல வேறு வழியின்றி கோப்பெருந்தேவி கழுத்தில் சண்முகம் தாலி கட்டுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











