சனியனை கொல்ல துப்பாக்கியுடன் கிளம்பிய ஷண்முகம்.. பரபரப்பான அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் !
சென்னை: நேற்றைய எபிசோடில், சரவணனை வீராவுடன் எக்ஸாம் எழுதும் இடத்திற்கு அனுப்பி வைத்து விட்டு ஷண்முகம் டாக்டராக மாறி கோப்பெருந்தேவி வீட்டிற்கு வருகிறான், பாட்டி வைக்கும் அனைத்து போட்டியிலும், ஷண்முகம் அசால்டாக செய்து முடிக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இதையடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடக்க, சண்முகத்தை கல்யாணம் முடிந்து தான் இந்த வீட்டை விட்டு வெளியே போகணும் என்று ரூமுக்குள் பூட்டி வைக்கின்றனர். இதனால், சரவணன் உள்ளே வரமுடியாமல் இருக்க, சண்முகம் கையில் தாலியை கொடுத்து கட்டவும் சொல்ல வேறு வழியின்றி கோப்பெருந்தேவி கழுத்தில் சண்முகம் தாலி கட்டுகிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா: இன்றைய சீரியலில், அதாவது, கோப்பெருந்தேவி கழுத்தில் தாலி கட்டியது சரவணன் தான் என்பது தெரிய வருகிறது. இதனை தொடர்ந்து சண்முகமும் அவனது தங்கைகளும் ஊருக்கு கிளம்பி வருகின்றனர், ஷண்முகம் மதுரையில் நடந்த விஷயம் எதுவும் பரணிக்கு தெரிய வேண்டாம் என்று தங்கைகளிடம் சொல்ல எல்லாரும் சேர்ந்து இங்கு நடந்த விஷயத்தை மூடி மறைத்து விடுகின்றனர். வீட்டுக்கு வந்ததும் சூடாமணி அனைவரையும் அழைத்து விசாரிக்கிறாள். அப்போது பரணி முகத்தை பார்த்து ஏதோ கேட்க, வீரா நடந்த அனைத்தையும் சொல்லி விடுகிறாள்.
தப்பித்த சனியன்: அடுத்து வெட்டுக்கிளி பாலக்காடு ஒயின் ஷாப்பில் சரக்கடித்து கொண்டிருக்க அங்கு சனியன் வர வெட்டுக்கிளி அவனை பார்த்ததும் துரத்தி கொண்டு ஓட சனியன் வெட்டுக்கிளியை தள்ளி விட்டு எஸ்கேப் ஆகிறான், இதன் பிறகு வெட்டுக்கிளி வீட்டிற்கு ஓடி வந்து விஷயத்தை சொல்ல நீ எனக்கு போன் பண்ணி இருந்தால் நானே அங்கு வந்து இருப்பேனே என்று திட்டுகிறான்.
கோபப்படும் சண்முகம்: அந்த முத்துப்பாண்டி தான் அப்பனை காப்பாற்ற சனியனை தப்பிக்க வைத்து இருக்கான் என்று கோபப்பட, சூடாமணி முத்துப்பாண்டி அன்னைக்கு நம்ம கூட தான் இருந்தான், என்னை கொல்ல வந்தவனை பற்றி சொல்லி என்னை காப்பாற்றியதும் அவன் தான், நீ அவனை போய் பாரு என்று சொல்ல ஷண்முகம் சௌந்தரபாண்டி வீட்டிற்கு கிளம்பி வருகிறான்.
நடந்தது என்ன: இங்கே முத்துப்பாண்டி தனது பிஸ்டலை கழட்டி மீண்டும் சரி செய்து கொண்டிருக்க ஷண்முகம் அங்கு வந்து சனியனை தப்பிக்க வைத்து உன் அப்பனை காப்பாற்ற பாக்கறியா என்று கோபப்பட, முத்துப்பாண்டி நீ சனியனை பிடித்து கொடு, என் அப்பனுக்கு நான் தண்டனை வாங்கி தரேன் என்று சொல்கிறான். இதை கேட்டு ஷாக்காகும் சௌந்தரபாண்டி அவன் என்னை மாட்டி விட நினைக்கிறதுல ஒரு நியாயம் இருக்கு. உன்னை போலீஸ் ஆக்குனதே நான் தான், நீ என்னையே ஜெயிலுக்கு அனுப்பனும்னு சொல்ற சௌந்தரப்பாண்டி கோபமாக பேசுகிறார்.
செத்தான் சனியன்: இதைத்தொடர்ந்து ஷண்முகம் முத்துபாண்டியை ரூமிற்குள் அடைத்து வைத்து விட்டு அவனது பிஸ்டலை எடுத்து சனியனை தேடி கிளம்புகிறான். பாக்கியம் அவனை தடுத்து நிறுத்த, சனியன் ஒழுங்கா வந்து சாட்சி சொல்ல ஒத்துக்கிட்டா அவன் தப்பிச்சான், இல்லைனா அவன் உயிர் என் கையில் தான் என்று துப்பாக்கியால் சுடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











