நிச்சயத்தை நிறுத்த சௌந்தரபாண்டி போட்ட திட்டம்.. நடக்கக்போவது என்ன.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: அண்ணா சீரியலில் நேற்றை எபிசோடில், பாக்யமும் இசக்கியும் வீட்டிற்கு வர சௌந்தரபாண்டி துப்பாக்கியுடன், இனிமே அந்த வீட்டிற்கும் உனக்கும் ஒட்டும் இல்ல உறவும் இல்லனு சொன்னா உள்ளே விடுறேன் என்று சொல்ல, பாக்கியம் அப்படியெல்லாம் சொல்ல முடியாது என்று சொல்கிறாள். இதையடுத்து, அம்மா நீங்க இங்கேயே இருங்க நான் ஐயா கிட்ட பேசி உங்களை உள்ளே கூட்டிட்டு போறேன் என்று சொல்லிவிட்டு,பாக்கியம் நீ என்னை உள்ள கூட்டிட்டு போறியா? வா இங்க என்று கூப்பிட்டு,கன்னத்தில் ஒரு அறை விட சனியன், சௌந்தரபாண்டி காலடியில் காலில் விழுகிறான்.
மறுபக்கம் சண்முகத்தின் வீட்டில்,தங்கைகள் சூடாமணி கண்ணை கட்டி ஒளிந்து விளையாட வைகுண்டம், சூடாமணி கையை பிடித்து ரொமான்ஸ் செய்ய இதை பார்த்த வெட்டுக்கிளி மூணு தங்கைகளையும் தனியா கூட்டிட்டு போய் வீட்டிற்கு வந்திருப்பது உங்க அப்பாவோட செட்டப், அவங்க வீட்டில் இருக்கிறது நல்லது இல்ல என்று சொல்கிறான். இதையடுத்து, இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், பாக்கியம் நிச்சயதார்தத்துக்கு கிளம்ப சௌந்தரபாண்டி, நானும் வரேன் என்று சொல்ல நீங்க எதுக்கு அங்க அதெல்லாம் வேண்டாம் நாங்களே போயிட்டு வரோம் என்று பதிலடி கொடுக்கிறாள். அதெல்லாம் முடியாது நான் வருவேன், ஆட்டோவில் எல்லாம் வேண்டாம் நானே கூட்டிட்டு போய் விட்டுட்டு வரேன் என்று கிளம்பி வருகிறார். எவ்வளவு சொல்லியும் கேட்காததால், ஏதோ திட்டத்தை போட்டுவிட்டார் என்பதை தெரிந்து கொள்கிறாள்.
மரியாதை தெரியாத குடும்பம்: மறுபக்கம், நிச்சயம் நடக்கும் கோவிலில், மாப்பிள்ளை வீட்டார் 8 மணிக்கே வந்து விட, பெண் வீட்டார் ஒருத்தர் கூட இல்லாமல் இருக்க தாய் மாமன் சந்தானம், நிச்சயம் தானே நடக்கக்போகுது, இங்க ஒருத்தர் கூட வரவேற்க ஆள் இல்ல, மரியாதை இல்லாத வீட்டில் பொண்ணு எடுக்கணுமா? இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி அலப்பறை செய்கிறான். இதைப்பார்த்து டென்ஷனான வெங்கடேசன் கடுப்பாகி, எல்லாம் எங்களுக்கு தெரியும், ஒழுங்க உங்க வேலையை மட்டும் பாருங்க இல்லனா இங்க இருந்து கிளப்புங்க என்று சொல்ல, அவமானப்பட்ட சந்தானம் கோபித்து கொண்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறான்.
திட்டம் போடும் சௌந்தரபாண்டியன்: அந்த நேரம் பார்த்து, சௌந்தரபாண்டியன், காரில் வந்து கொண்டு இருக்க, சந்தானத்தை பார்த்த சௌந்தரபாண்டியன், காரை நிறுத்தி விட்டு எங்கே போறீங்க என்று கேட்க வரவேற்க ஒரு ஆள் கூட இல்ல, அதனால் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன், வெங்கடேஷ் என்னை இருந்தா இருங்க என்று பேசி அவமானப்படுத்திவிட்டான் அதான் கோச்சிக்கிட்டு கிளம்பிட்டேன் என்று சொல்கிறான். உடனே பாக்கியம், வெங்கடேஷ் தம்பி அப்படி சொல்லி இருக்க மாட்டாரு வாங்க,பேசி தீர்த்துக்கலாம் என்று சொல்கிறாள்.
நடக்கப்போவது என்ன: பிறகு சௌந்தரபாண்டி அவரை தனியாக அழைத்து சென்று பளாரென அறை விட, சந்தானம் ஐயா எதுக்கு அடிச்சீங்க என்று கேட்கிறான். நீ கோச்சிட்டு போய்ட்டா நான் யாரை வச்சி கல்யாணத்த நிறுத்துறது என்று தனது திட்டத்தை ரகசியமாக சொல்லி இதே மாதிரி பண்ணு என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











