இசக்கி மீது விழும் திருட்டு பழி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில்,சிவபாலனுக்கு வீராவும் போனில் பேசியதைப்பார்த்த சௌந்தரபாண்டியனுக்கு சந்தேகம் அதிகமாக. முத்துப்பாண்டி இசக்கியை கல்யாணம் பண்ணிட்டான், பரணி சண்முகத்தை கல்யாணம் பண்ணிட்டா சிவபாலனும் வீரா சேரக் கூடாது என்று முடிவெடுக்கிறார். இதற்காக, ஏகேஎஸ் அண்ணாச்சியை சந்தித்து அவரது மகளை தனது வீட்டுக்கு மருமகளாக கேட்க, ஏகேஎஸ் அண்ணாச்சி தயங்குகிறார். இதைத்தொடர்ந்து அண்ணாச்சியின் மகள் எனக்கு சிவபாலனை பிடிக்கும், சௌந்தரபாண்டி வீட்டு மருமகளாக ஆசைப்படுவதாக சொல்கிறாள்.
இதனால் அண்ணாச்சி இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கிறார், அடுத்த நாள் வீட்டில் ரத்னாவுக்கு நகை எடுப்பதற்காக பாக்யம், இசக்கி கிளம்பி கொண்டிருக்க சௌந்தரபாண்டி எங்கே போறீங்க என்று கேட்க இவர்கள் சமாளிக்க நகை எடுக்க போறீங்கன்னு எனக்கு தெரியும். அதுக்கு முன்னாடி ஒரு இடத்திற்கு போகணும் என்று சொல்லி, அண்ணாச்சி வீட்டுக்கு சம்மந்தம் செய்ய அழைத்து செல்கிறார். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

அண்ணா: இன்றைய சீரியல்,ஏகேஎஸ் அண்ணாச்சி மகள் சிவபாலனிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்ல சிவபாலன் நான் வேறொரு பொண்ணை காதலிக்கிறேன் எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்கிறான். ஆனால் ஏகேஎஸ் அண்ணாச்சி மகள் நீங்க யாரை வேணாலும் லவ் பண்ணுங்க, ஆனால் கல்யாணத்திற்கு பிறகு என்னை மட்டும் லவ் பண்ணுங்க என்று சொல்கிறாள். ,அதன் பிறகு ரத்னா, வைகுண்டம், பாக்கியம் என அனைவரும் நகை எடுக்க வருகின்றனர், வெங்கடேஷ் உனக்கு பிடிச்ச மாதிரி நகை எடுத்துக்கோ என்று சொல்ல ரத்னா உங்களால் என்ன எடுத்து தர முடியுமோ அதை எடுத்து தாங்க என்று சொல்ல எல்லாரும் இப்போவே புருஷனுக்கு கஷ்டம் கொடுக்க கூடாதுனு நினைக்கிறியா என்று கலாய்க்கின்றனர்.
திருட்டுப்பழி: அடுத்து சௌந்தரபாண்டி வெங்கடேஷின் தாய் மாமாவுக்கு போன் செய்து ஒரு திட்டத்தை சொல்ல இந்த நபர் யாருக்கும் தெரியாமல் ஒரு நகையை எடுத்து இசக்கி பையில் போட்டு விடுகிறான், நகை எடுத்து முடித்து எல்லாரும் கிளம்பி வர வழியில் போலீஸ் வேன் இவர்களை வழிமறித்து நகை காணாமல் போய் விட்டதாக சொல்ல வெங்கடேஷின் தாய் மாமா செக் செய்து கொள்ள சொல்கிறான். பிறகு போலீஸ் இவர்களை சோதனையிட இசக்கி பையில் இருந்து நகையை எடுக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











