மச்சானு சொல்லுங்க.. சண்முகத்திடம் மன்னிப்பு கேட்ட முத்துப்பாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில், பாக்கியம் நிச்சயதார்த்தத்துக்கு கிளம்ப சௌந்தரபாண்டி, நானும் வரேன் என்று சொல்லி அவர்களுடன் வருகிறான். இதனால், அதிர்ச்சி அடைந்த பாக்யம் மற்றும் இசக்கி இவர் ஏதோ பிளான் போட்டுவிட்டார் இதனால் நாம ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டு வருகின்றனர்.

நிச்சயம் நடக்கும் கோவிலில், மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட,பெண் வீட்டார் ஒருத்தர் கூட இல்லாமல் இருக்க தாய் மாமன் சந்தானம், நிச்சயம் தானே நடக்கக்போகுது, இங்க ஒருத்தர் கூட வரவேற்க ஆள் இல்ல, மரியாதை இல்லாத வீட்டில் பொண்ணு எடுக்கணுமா? இதை கேட்டு, டென்ஷனான வெங்கடேசன் கடுப்பாகி அவரை திட்டிவிட அவர் கோபித்துக்கொண்டு வெளியில் சென்று விடுகிறார். பின் அவரை பார்த்துவிடும் சௌந்தரபாண்டி, நீ கோச்சிட்டு போய்ட்டா நான் யாரை வச்சி கல்யாணத்த நிறுத்துறது என்று சொல்லி அவரை அழைத்து வருகிறார். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil Anna

அண்ணா சீரியல்: இன்றைய சீரியலில், நிச்சயதார்த்தத்திற்காக கோவிலில் இரண்டு குடும்பமும் ஒன்று கூட ஷண்முகம் மாப்பிள்ளை வீட்டில் வரவேற்க ஆள் இல்லாததால் மன்னிப்பு கேட்க வெங்கடேஷ் சீக்கிரமா வந்தது எங்களுடைய தப்பு தான் என்று சொல்கிறான். அடுத்து சௌந்தரபாண்டி சூடாமணியை தேட அவள் ஒரு ஓரமாக முக்காடு போட்டு மறைந்திருப்பதை கவனிக்கிறார். நேராக வந்த சந்தானத்தின் அருகில் அமர்ந்து கொண்டு, நிச்சயதார்த்த ஓலை படிக்க போகும் போது சௌந்தரபாண்டி சந்தானத்திடம் நீ அவங்க அம்மாவை பத்தி மட்டும் கேளு மத்ததை சனியன் பார்த்துப்பான் என்று சொல்கிறார்.

மன்னிப்பு கேட்ட முத்து: சௌந்தர பாண்டி சொன்னது போல் சந்தானம் முதலில் தாய் மாமா யாரு என்று கேட்க, உடன்குடி ஆட்கள் வந்து நிற்க இவன் எல்லாம் எனக்கு நிகரா உட்காருவானா என்று சத்தம் போட பாக்கியம் முத்துபாண்டியை தாய் மாமாவாக உட்கார வைக்க சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறான். இது மட்டுமில்லாமல் சண்முகத்திடம் மன்னிப்பு கேட்டு, இனிமேல் மச்சான் என்று சொல்லும் முத்துப்பாண்டி சொல்கிறார். இதைப்பார்த்த பரணி ஆச்சரியப்பட்டு என்னம்மா முத்து இப்படி மாறிவிட்டான் என்று கேட்க, ஆமாம் பரணி, சண்முகம் என்னை கத்தியால் குத்தியதில் இருந்தே முத்து ரொம்ப மாறிவிட்டான். சம்பள பணத்தைக் கூட என்கிட்டத்தான் கொடுக்கிறான் இப்படியே இருந்தா போதும், இசக்கி வாழ்க்கை நல்லா இருக்கும் என்கிறாள்.

பல்பு வாங்கிய சௌந்தரபாண்டி: அடுத்து, சந்தானம், சௌந்தரபாண்டி சொல்லி கொடுத்தது போல, சண்முகத்தின் அம்மாவை பற்றி பேச, சனியன் இவங்க அங்கு முக்காடு போட்டுக்கொண்டு நின்ற பெண்னை இழுத்துவந்து, இது தான் சண்முகம் அம்மா என்று சொல்ல, கடைசியில் அது சனியனின் மனைவி என தெரிய வர சௌந்தரபாண்டி பல்பு வாங்குகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X