ஓடுகாலி மகளுக்கு நிச்சயமா? சௌந்தரபாண்டியின் பிளானை உடைத்த முத்து.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், சௌந்தரபாண்டி சூடாமணியை தேட அவள் ஒரு ஓரமாக முக்காடு போட்டு மறைந்திருப்பதை கவனிக்கிறார். அதன்பின் நேராக வந்து சந்தானத்தின் அருகில் அமர்ந்து கொண்ட சௌந்தரபாண்டியன், நிச்சயதார்த்த ஓலை படிக்க போகும் போது, நீ அவங்க அம்மாவை பத்தி மட்டும் கேளு மத்ததை சனியன் பார்த்துப்பான் என்று சொல்கிறான்.

சௌந்தரபாண்டி சொன்னது போல் சந்தானம் முதலில் தாய் மாமா யாரு என்று கேட்க, உடன்குடி ஆட்கள் வந்து நிற்க இவன் எல்லாம் எனக்கு நிகரா உட்காருவானா என்று கேட்க, சண்முகம் தாய் மாமன் யாரும் இல்லை என்று சொல்ல, யாராவது வந்தாதான் நிச்சயம் நடக்கும் என்று சொல்லிவிடுகின்றனர். இதையடுத்து இன்று நடக்க போவது என்ன என்று பார்க்கலாம்.

Zee tamil Anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், மேடையில் ஷண்முகம் படும் அவமானத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் சூடாமணி, தானே மேடைக்கு போய்விடலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்க, அங்கு வரும் பரணி, அத்தை இது என் அப்பா வேலை, அவர் நிச்சயத்தை நிறுத்த பார்க்கிறார். இதனால் நீங்க வரவேண்டாம் என்று சொல்ல சூடாமணி கலங்கிய கண்ணோடு நின்று கொண்டு இருக்கிறார்.

முத்துபாண்டி செய்த செயல்: இதையடுத்து, முத்துப்பாண்டி நானும் ரத்னாவிற்கு மாமா முறை தான் என்று சொல்லி உக்காரட்டுமா என்று கேட்க, கடுப்பான சௌந்தரபாண்டி, ஏல முத்துப்பாண்டி உனக்கு பைத்தியம் புடிச்சிடுச்சா, அங்கே போய் உக்காருற என்று கேட்க, நான் உக்காந்தா என்ன தப்பு, ரொம்ப நாள் கழித்து இந்த குடும்பத்தில் ஒரு நல்ல விஷயம் நடக்குது என்று சொல்ல, மகிழ்ச்சி அடைந்த பாக்யம், ஏலே முத்துப்பாண்டி, வாடா வந்து உக்காரு, உனக்கும் எல்லா உரிமையும் இருக்கு என்று சொல்கிறாள்.

மகிழ்ச்சியில் பாக்யம்: இதையடுத்து, சபையில் முத்துப்பாண்டி வந்த உட்கார, கடுப்பான சந்தானம் என்னப்பா உன் அப்பா தான் முறை மாமா அவரே வேண்டாம் என்று இருக்கும் போது நீ இப்படி உக்காரலாமா, முறை மாமா உறவு என்றால் என்ன நினைச்ச, எவ்வளவு சீர் செய்யணும்னு தெரியுமா.. இந்த கல்யாணத்தோட முடியாது பிள்ளை பிறப்பு, அந்த பெண்ணு வயசுக்கு வருவதுனு நிறைய இருக்கு என்று சொல்ல. எல்லாம் எனக்கு தெரியும்ங்க நானும் இந்த ஊரில் பிறந்தவன் தான் இப்ப மட்டும் நீங்க, தட்டை மாத்தல வரதட்சணை கேட்குறீங்கனு புகார் கொடுத்து உள்ளே தூக்கி போட்டுவேன் என்று சொல்கிறார்.

கடுப்பில் சௌந்தரபாண்டி: இதனால், பயந்து போன சந்தானம், ஒரு பக்கம் அப்பன் நிச்சயத்தை நிறுத்த பணம் கொடுக்கிறான், மகன் ஜெயில்ல போடுவேனு சொல்லுறான் என்னடா பெரிய தொல்லையா போச்சே என்று நினைத்துக்கொண்டு, நமக்கு எடுத்து வம்பு என்று தட்டை மாற்றிக்கொள்ள நிச்சயம் நல்லபடியாக முடிகிறது. இதைப்பார்த்து கடுப்பான சௌந்தரபாண்டி, நம்ம போட்ட திட்டம் எல்லாம் இப்படி வீணா போச்சே, கடைசியில இந்த பயலே இப்படி பண்ணிட்டானே இனிமே எப்படி கல்யாணத்தை நிறுத்தவேண்டும் என்று தான் பிளான் போட வேண்டும் என்று மனதிற்குள் புலம்புகிறார். இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X