நான் உத்தமினு நிரூபிப்பேன்.. சவால் விட்ட சூடாமணி..அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி சொல்லிக் கொடுத்தது போல, சந்தானம் முறை மாமா வந்தா தான் நிச்சயம் நடக்கும் என்று சொல்ல, சபையில் முத்துப்பாண்டி வந்த உட்கார, கடுப்பான சௌந்தரபாண்டி டேய் என்னடா பண்ற என்று கேட்டு சத்தம் போடுகிறான் இதைத்தொடர்ந்து பெண்ணின் அம்மா யார், அவங்க வரவேண்டும் என்று கேட்டு நிச்சயத்தை நிறுத்தப்பார்க்கிறான்.
அவரின் திட்டத்தை தெரிந்து கொண்ட முத்து, இப்போ தட்டை மாத்தல வரதட்சணை கேட்குறீங்கனு புகார் கொடுத்து உள்ளே தூக்கி போட்டுவேன் என்று சொல்கிறார்.இதனால், பயந்து போன சந்தானம், ஒரு பக்கம் அப்பன் நிச்சயத்தை நிறுத்த பணம் கொடுக்கிறான், மகன் ஜெயில்ல போடுவேனு சொல்லுறான் என்னடா பெரிய தொல்லையா போச்சே என்று நினைத்துக்கொண்டு, நமக்கு எடுத்து வம்பு என்று தட்டை மாற்றிக்கொள்ள நிச்சயம் நல்லபடியாக முடிகிறது. இதையடுத்து என்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு: அண்ணா சீரியலில், ரத்னா நிச்சயம் நல்லபடியாக முடிந்து சூடாமணி வெளியே வந்த நிலையில், மைக்கை எடுத்த சனி, அய்யோ, சௌந்தரபாண்டி சண்முகத்தை குத்திவிட்டார் என்று கத்த, பதறிப்போன சூடாமணி ஓடிவருகிறாள். இந்த நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்த சௌந்தரபாண்டி, எவன் கூடவோ ஓடிபோனாளே அவதான் இந்த சூடாமணி, கோவில் நகையை திருடியவள் என்று அவள் மீது பழியை போட சண்முகமும் அவனது தங்கைகளும் எங்க அம்மா உத்தமி, அதை நான் நிரூபித்து காட்டுறேன் என்று சவால் விடுகிறான் ஷண்முகம்.
சவால் விட்ட சூடாமணி: மேலும் சௌந்தரபாண்டி தான் குற்றவாளி என்று சொல்கிறாள், என் மீது அபாண்டமா பழி போட்டு, இந்த ஊர் முன்னாடி என்ன கெட்டவளா ஆக்கி, என் பசங்க கிட்ட இருந்து இத்தனை வருஷம் என்ன பிரிச்சது எல்லாம் நீ தான், நீ தான் எல்லா தப்பையும் பண்ணேன்னு நிரூபித்து ஜெயிலுக்கு அனுப்புவோம். அப்படி நிரூபிக்க முடியலைன்னா நான் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொள்கிறேன் என்று சூடாமணி சபதம் எடுக்கிறாள்.
சபதம் எடுத்த சண்முகம்: வீட்டில் அனைவரும் கவலையோடு இருக்க, ஷண்முகம், அம்மா நீ உத்தமினு இந்த ஊர் முன்னாடி நிரூபித்து காட்டுவேன் என்று விபூதி தட்டில் அடித்து முருகன் மீது சத்தியம் செய்கிறான். அடுத்து வெங்கடேஷ் வீட்டிற்கு வந்து நடந்த விஷயத்துக்காக மன்னிப்பு கேட்கிறான். ஆனால் ரத்னா அவனது மன்னிப்பை ஏற்க மறுக்கிறாள். நிச்சயதார்த்த மேடையில் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்த்திட்டு இப்போ எதுக்கு வந்த என்று ஆவேசப்படுகிறாள். வெங்கடேஷ் அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறாள். ஆனால் சமாதானம் ஆகாத ரத்னா எனக்கு இந்த கல்யாணமே வேண்டாம் என்று அழுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்


Click it and Unblock the Notifications











