ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. வீட்டை விட்டு வெளியேறிய பாக்யம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில் நிச்சயதார்த்தத்தில் சனியன், சௌந்தரபாண்டி சண்முகத்தை குத்திவிட்டார் என்று கத்த, பதறிப்போன சூடாமணி ஓடிவருகிறாள். இந்த நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்த சௌந்தரபாண்டி, எவன் கூடவோ ஓடிபோனாளே அவதான் இந்த சூடாமணி, கோவில் நகையை திருடியவள் என்று அனைவர் முன்னும் அவளை அசிங்கப்படுத்துகிறான்.
என் மீது அபாண்டமா பழி போட்டு, இந்த ஊர் முன்னாடி என்ன கேட்டவளா ஆக்கி, என் பசங்க கிட்ட இருந்து இத்தனை வருஷம் என்ன பிரிச்சது எல்லாம் நீ தான், நீ தான் எல்லா தப்பையும் பன்னேனு நிரூபித்து ஜெயிலுக்கு அனுப்புவோம். அப்படி நிரூபிக்க முடியலைன்னா நான் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொள்கிறேன் என்று சூடாமணி சபதம் எடுக்கிறாள் இப்படியான நிலையில் இன்று நடப்பதை பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், சௌந்தரபாண்டி நினைத்ததை சாதித்த சந்தோஷத்தில் இருக்க சனியன் அவனை பாராட்டி பேச பாக்கியம் வீட்டிற்கு வருவதை பார்த்து பேச்சை அடக்கி கொள்கின்றனர். வீட்டிற்கு வந்தவள் சிவபாலனிடம் தண்ணீர் எடுத்து வர சொல்லி சௌந்தரபாண்டியிடம் சண்டையிட்டு தலையில் தண்ணீர் ஊற்றி கொண்டு உங்களை இன்னையோட தலை முழுகுகிறேன். இனிமே உங்களுக்கும் எனக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை, நான் இந்த வீட்டை விட்டு வெளியே போறேன் என்று கிளம்புகிறாள்.
நான் கோழை: இங்கே ஷண்முகம் வீட்டில் எல்லாரும் சாப்பிடாமல் இருக்க, ஷண்முகம் சாப்பிட கூப்பிட யாரும் சாப்பாடு வேண்டாம் என்று கவலையில் இருக்கின்றனர். இதையடுத்து, வைகுண்டம் குடித்து விட்டு வீட்டிற்கு வருகிறார். எனக்கு அவனை கொல்றதுக்கு தைரியம் இல்ல.. நான் ஒரு கோழை. அதான் குடிச்சிட்டு வந்திருக்கேன் என்று புலம்புகிறான். இதைப்பார்த்து ஷண்முகம் மிகவும் வருத்தப்படுகிறார்.
வீட்டை விட்டு வெளியேறிய பாக்யம்: மறுபக்கம், பாக்கியம் இசக்கி மற்றும் சிவபாலனுடன் வீட்டை விட்டு வெளியேற, எதிரே வரும் முத்துப்பாண்டி பாக்கியத்தை சமாதானப்படுத்துகிறான். ஆனால், பாக்யம் இந்த ஆளு இப்படி செய்வான் இனிமேல் இவனுக்கு மன்னிப்பே இல்லை, இனி இந்த வீட்டில் நான் இருக்க மாட்டேன், என்ன பாக்கணும்னா சண்முகம் வீட்டுக்கு வந்து பாரு என்று சொல்கிறாள். முத்து எவ்வளவு சொல்லியும், பாக்யம் சமாதானம் ஆகாததால், என்னை தாண்டி போங்க என்று குறுக்கே படுத்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? பாக்கியம் எடுக்க போகும் முடிவு என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











