தலைநிறைய மல்லிப்பூ.. சீரியலிலும் அந்த சீன்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: இன்றைய எபிசோடில், முத்துப்பாண்டி, இசக்கியிடம் உன் மேல எனக்கு பாசமும் இருக்கு, காதலும் இருக்கு, பொண்டாட்டி என்றால் நீ மட்டும் தான். என் கூட வாழ உனக்கு விருப்பம் இருக்கா? இல்லையா? அதை மட்டும் சொல்லு என்கிறான். ஆனால், இசக்கி, அண்ணா சொல்லாமல் வரமாட்டேன் என்கிறாள். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த முத்துப்பாண்டி வெட்கம், மானம் எல்லாத்தையும் விட்டுட்டு நீதான் வேணும்னு, நான் இந்த வீட்டுக்கு வந்து நின்னா, நீ என்ன வேண்டாம்னு சொல்லிட்டியா? இனிமே நீயும் எனக்கு தேவையில்லை என்று சொல்லிவிட்டு பைக் எடுத்து விட்டு வேகமாக கிளம்பி விடுகிறான்.
பாக்கியம், சண்முகம் வீட்டிற்கு வந்து முத்துப்பாண்டி கூப்பிட்டும் ஏன் இசக்கியை அனுப்பல, ஊருக்கு முன்னாடி உன் கால்ல விழுந்தால் தான் இசக்கியை வீட்டுக்கு அனுப்புவியா என்று கேட்க, சண்முகம் என் தங்கச்சியை எங்கையும் அனுப்ப மாட்டேன். முத்துப்பாண்டி என் வீட்டுல வந்து என் தங்கச்சியோட என் கண்முன்னாடியே சந்தோஷமாக வாழ்வதாக இருந்தால் வாழட்டும் என தனது முடிவில் உறுதியாக இருக்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், சண்முகத்தின் முடிவால் கடுப்பான பாக்கியம், திருமணம் ஆகுற வரைக்கும் தான் அவ உங்க வீட்டு பொண்ணு கல்யாணம் ஆகிவிட்டால், அவ எங்க வீட்டு பொண்ணு நான் அவளை கூட்டிட்டு போறேன் என்று இசக்கியின் கையை பிடித்து இழுக்க, இசக்கியோ அண்ணாவின் பேச்சை மீறி வராமல் அழுது கொண்டே நிற்கிறாள். இதைப் பார்த்த சண்முகம், என்னுடைய தங்கச்சி புருஷன் கூட வாழ்வதை விட உயிரோட இருக்கணும், அதுதான் எனக்கு முக்கியம். அந்த வீட்ல என் தங்கச்சி இருந்தா நிச்சயமா, அந்த ஆளு ஏதாவது என் தங்கச்சிய பண்ணிடுவான். என்னோட தங்கச்சி கூட முத்துப்பாண்டி வாழனும்னு நினைச்சா, இந்த வீட்டுல வாழட்டும், என் கண் முன்னாடியே அவங்க சந்தோஷமா இருக்கட்டும் என்று சொல்கிறான்.
சண்முகம் செய்த வேலை: இதை கேட்ட பாக்கியம், உன்னுடைய தங்கச்சி வாழ்க்கையை நீ தான் கெடுக்குற, அண்ணா நீ கூட எதுவுமே சொல்லாம இப்படியே உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம் என்று பாக்கியம் வைகுண்டத்தை பார்த்து கேட்க, அவன் தப்பு செஞ்சான்னா தப்பு அப்படின்னு சொல்லு அண்ணா, தங்கச்சி வாழ்க்கை சண்முகத்தால், கெட்டுப்போச்சுன்னு யாரும் சொல்லிடக்கூடாது. அதுக்காகத்தான் நான் இப்ப வந்து புலம்பி கிட்டு இருக்கேன் அந்த ஆளு இசக்கிய, முத்துப்பாண்டி கூட வாழ வைக்க கூடாதுன்னு நினைச்சாரு. அதுபடியே நடந்துடுச்சு என்று புலம்பிக்கொண்டு வெளியில் சென்றுவிடுகிறாள்.
புலம்பும் பரணி: இதையடுத்து இசக்கி யாருக்குமே தெரியாமல் அழுது கொண்டு இருப்பதை பார்த்த பரணி, எத்தனை வாட்டி உனக்கு சொல்றது உன் வாழ்க்கையை நீ பார்க்க வேண்டும் இசக்கி, அண்ணா சொன்னதுக்காக நீ வந்து இந்த வீட்ல இருப்பது நல்லது இல்ல. வாழ்க்கை தான் முக்கியம், இந்த வாழ்க்கை போச்சுனா திரும்ப வருமா, அதுவும் முத்துப்பாண்டி எப்படி மோசமா இருந்தான். இப்ப உனக்காக அவன் இறங்கி வந்து கூப்பிட்டும், நீ போகவே இல்ல, அதனால அவன் தேவையில்லாத ஏதாவது விபரீத முடிவு தான் எடுப்பான். இது உனக்கு கொஞ்சமும் புரியல, உங்க அண்ணன் சண்முகத்துக்கும் இது புரியல, எல்லாருமே என்னை தப்பாதான் புரிஞ்சிக்கிறீங்க என்று புலம்புகிறாள் பரணி.
சீரியலிலும் அந்த சீன்: இதையடுத்து சண்முகம் படுப்பதற்காக ரூமுக்குள்ள வர ரூம் ஃபுல்லா தண்ணி ஊத்தி வச்சிட்டு, பரணி தல நிறைய மல்லிகை பூவை வச்சிக்கிட்டு, மல்லிப்பூ வச்சு வச்சு வாடுது என்ற பாட்டுப்பாடி, ரொமான்ஸா ஆட்டம் ஆடி சண்முகத்திடம் ரொமான்ஸ் செய்கிறாள். இதை பார்த்து இறங்கி போற சண்முகம், என்ன அப்படின்னு கேட்க, அப்பாக்கிட்ட சத்யா செஞ்சு கொடுத்தா மட்டும் போதாது, அது படி சத்தியத்தை நிறைவேற்றதுக்கு என்னென்ன பண்ண வேண்டுமோ அதை செய்ய வேண்டும் என்று சொல்கிறாள்.


Click it and Unblock the Notifications











