மீண்டும் வில்லத்தனத்தை காட்டும் முத்துப்பாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், ரத்னாவிடம் இருந்து வெங்கடேஷ் ஸ்கூலை எழுதி வாங்கிக்கொண்டு, கனிக்கு டிசி கொடுத்து ஸ்கூலை விட்டு துரத்தி விடுகிறான். இது பிசினஸ் நடக்க வேண்டிய இடம்.. இந்த இடத்தில போய் ப்ரீயா பாடம் சொல்லி கொடுத்துட்டு இருக்காங்க என்று ஸ்கூலை வைத்து பிசினஸ் செய்ய திட்டம் போடுகிறான். வீட்டிற்கு வந்த ரத்னா விஷயத்தை சொல்ல பரணி இப்போதைக்கு இந்த விஷயம் ஷண்முகத்திற்கு தெரிய வேண்டாம் என்று சொல்ல ஷண்முகம் வந்ததும் கனி கட்டிப்பிடித்து அழுது நடந்த விஷயத்தை சொல்லி விடுகிறாள்.
இதையடுத்து, வெங்கடேஷ் சண்முகத்திடம் அந்த ஸ்கூல வச்சி என்னென்ன பிளான் போட்டேன் என்பதை குறித்து பேசிய அனைத்தையும், சண்முகம் வீடியோவாக எடுத்து, அந்த ஸ்கூலில் இருக்கும் டீச்சர், குழந்தைகளின் பெற்றோர், ஊர் பெரியவர்கள் என அனைவருக்குமே அனுப்பி விடுகிறான். அந்த வீடியோவை பார்த்த அனைவருமே வந்து, வெங்கடேசனை பார்த்து பணம் சம்பாதிக்க நீ ஸ்கூல் நடத்துறியா என்று கேட்டு அடிக்கின்றனர். உடனே வெங்கடேசன், ரத்னாவின் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு அந்த ஸ்கூல்ல விட்டு ஓடிடுறாரு. இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், வீரா போலீசாக வேண்டும் என ஆசைப்பட்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது போலீஸ் ட்ரைனிங்கில் பங்கேற்பதற்காக லெட்டர் வீட்டிற்கு வருகிறது. இந்த லெட்டரால் மொத்த குடும்பமும் சந்தோஷப்படுகின்றனர். மேலும் வீரா போலீஸ் ப்ராக்டிஸில் கலந்துகொள்ள லோக்கல் இன்ஸ்பெக்டரின் கையெழுத்து தேவை என தெரியவர முத்துப்பாண்டி கையெழுத்து போடுவானா இல்லையா என்ற சந்தேகம் வருகிறது.
கையெழுத்துபோட முடியாது: சண்முகம் அவன் கையெழுத்து போடலனா என்ன நாம டிஜிபிஐ சந்தித்து கையெழுத்து வாங்கிக்கலாம் என்று சொல்ல பரணி நீ எங்க போனாலும் கடைசியில் முத்துப்பாண்டி தான் கையெழுத்து போடணும்.. முதல்ல அவன் கிட்ட போய் பேசு அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம் என்று சொல்கிறாள். நேராக சண்முகம் ஸ்டேஷனுக்கு வந்து வீராவுக்கு கையெழுத்து பாட சொல்லி கேட்க முத்துப்பாண்டி கேட்டதெல்லாம் கையெழுத்து போட முடியாது அதுக்குன்னு முறை இருக்கு என சொல்லி விட சண்முகம் என் மேல இருக்க கோபத்தில் என் தங்கச்சியோட கனவை அழிச்சிடாத என சொல்லிவிட்டு வீட்டுக்கு வருகிறான்.
வீட்டில் நடந்த விஷயத்தை சொல்கிறான். அவன் மட்டும் கையெழுத்து போடாம போகட்டும் அதுக்கப்புறம் இருக்கு என ஆவேசப்பட்டு வெளிய கிளம்புகிறான். அதன் பிறகு வீரா முத்துப்பாண்டி கையெழுத்து போடுவானா இல்லையா என்ற குழப்பத்தில் இருக்க பரணி உனக்கு முத்துப்பாண்டி கையெழுத்து போடணும் அவ்வளவுதானே அதற்கு நான் சொல்ற மாதிரி செய்யணும் என ஐடியா ஒன்றை கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











