ஆக்கிப்போடத்தான் பொம்பளைங்களா.. சௌந்தரபாண்டியால் குழம்பிய சண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், வீராவிற்கு போலீஸ் ட்ரெயினிங்கில் பங்கேற்பதற்காக லெட்டர் வருகிறது. வீரா போலீஸ் ப்ராக்டிஸில் கலந்துகொள்ள லோக்கல் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியின் கையெழுத்து தேவை என தெரியவர முத்துப்பாண்டி கையெழுத்து போடுவானா? இல்லையா என்ற சந்தேகம் வருகிறது.
சண்முகம் அவன் கையெழுத்து போடலனா என்ன நாம டிஜிபிஐ சந்தித்து கையெழுத்து வாங்கிக்கலாம் என்று சொல்ல பரணி, நீ எங்க போனாலும் கடைசியில் முத்துப்பாண்டி தான் கையெழுத்து போடணும். முதல்ல அவன் கிட்ட போய் பேசு அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம் என்று சொல்கிறாள். நேராக சண்முகம் ஸ்டேஷனுக்கு வந்து வீராவுக்கு கையெழுத்து போட சொல்லி கேட்க முத்துப்பாண்டி கேட்டதும் கையெழுத்து போட முடியாது அதுக்குன்னு முறை இருக்கு என சொல்லி விடுகிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், வீரா முத்துப்பாண்டி கையெழுத்து போடுவானா இல்லையா என்ற குழப்பத்தில் இருக்க பரணி உனக்கு முத்துப்பாண்டி கையெழுத்து போடணும் அவ்வளவுதானே அதற்கு நான் சொல்ற மாதிரி செய்யணும் என ஐடியா ஒன்றை கொடுக்கிறாள். இசக்கி பேசினால் முத்துப்பாண்டி கண்டிப்பாக கையெழுத்து போடுவான்.. பொண்டாட்டி பேச்சை தட்ட மாட்டான் என்று சொல்ல வீரா, இசக்கியிடம் உதவி கேட்கிறான்.
அடுத்த நாள் காலையில் முத்துபாண்டிக்காக சட்டினியும் பணியாரமும் செய்து எடுத்து கொண்டு சண்முகத்திற்கு தெரியாமல் வீராவும், இசக்கியும் போலீஸ் ஸ்டேஷன் வருகின்றனர். இங்கே முத்துப்பாண்டி முப்பிடாதியிடம் சண்முகம் குடும்பத்தில் இருந்து யார் வந்தாலும் உள்ளே விடாதே என்று சொல்கிறான். இதை தொடர்ந்து இசக்கி மற்றும் வீரா ஸ்டேஷனுக்கு வர முப்பிடாதி உள்ளே விட கூடாதுனு ஐயா சொல்லி இருக்காரு என்று தடுக்க இருவரும் அவனை தள்ளி விட்டு உள்ளே வருகின்றனர். இசக்கி உங்களுக்கு என் மேலே பாசமே இல்லை என்று ஆரம்பிக்க முத்துப்பாண்டி அதெல்லாம் தேவையில்லாத பேச்சு என்ன விஷயம் அதை மட்டும் சொல்லு என்று கேட்கிறான்.
மகிழ்ச்சியில் இசக்கி: என் தங்கச்சிக்காக கையெழுத்து போடணும் என்று சொல்ல முப்பிடாதி நேத்து சண்முகம் வந்து போனதும் ஐயா கையெழுத்து போட்டு அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்பியாச்சு என்று சொல்கிறான். பிறகு இசக்கி மீண்டும் உங்களுக்கு என் மேல பாசமே இல்ல.. உங்களுக்காக நைட் எல்லாம் கண் முழிச்சி கஷ்டப்பட்டு இந்த பணியாரத்தை செய்து வந்தேன் என்று சொல்லி பனியாரத்தை நீட்ட, முத்துப்பாண்டி அதெல்லாம் எனக்கு வேண்டாம் எடுத்துக்கொண்டு போ என்று சொல்லியும் இசக்கி அதை அங்கேயே வைத்து விட்டு வருகிறாள். இவர்கள் கிளம்பி வந்ததும் முத்துப்பாண்டி அதை ஆசையாக எடுத்து சாப்பிட்டு சந்தோசப்படுகிறான்.
ஆக்கிப்போடத்தான் பொம்பளைங்களா: மறுபக்கம் ஷண்முகம் வண்டியில் சென்று கொண்டிருக்க சௌந்தரபாண்டி அவனை வழி மறித்து, நீ உன் தங்கச்சியை இங்கே இருந்து கூட்டிட்டு போய் நீயும் அவளை வேலைக்காரியாக தானே வச்சிட்டு இருக்க. என் வீட்டில் செய்த அதே வேலையை தானே இப்போ உன் வீட்டில் செய்துட்டு இருக்கா. வாய்க்கு ருசியா ஆக்கி போட தானே பொம்பளைங்க என்று பேசுகிறார். ஷண்முகம் சௌந்தரபாண்டி பேசியதால் மனம் குழம்பிப்போன சண்முகம், நாம செய்தது புரட்சி இல்லை. இசக்கிக்கு ஒரு நல்ல வாழக்கையை ஏற்படுத்தி கொடுக்கணும் என்று முடிவெடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











