சண்முகம் சொன்ன வார்த்தை.. கண் கலங்கும் இசக்கி.. காரணம் என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: வீராவின் போலீஸ் டிரைனிங் ஆடரில் கையெழுத்து போடும் படி, கேட்டு வீராவும் இசக்கியும் முத்துபாண்டியை பார்க்க வருகின்றனர். அப்போது, இசக்கி என் தங்கச்சிக்காக கையெழுத்து போடணும் என்று சொல்ல முத்துப்பாண்டி நேத்து சண்முகம் வந்து போனதும் ஐயா கையெழுத்து போட்டு அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்பியாச்சு என்று சொல்கிறான். பிறகு இசக்கி மீண்டும் உங்களுக்கு என் மேல பாசமே இல்ல.. உங்களுக்காக நைட் எல்லாம் கண் முழிச்சி கஷ்டப்பட்டு இந்த பணியாரத்தை செய்து வந்தேன் என்று சொல்லி பணியாரத்தை கொடுக்கிறாள்.

முத்துப்பாண்டி அதெல்லாம் எனக்கு வேண்டாம் எடுத்துக்கொண்டு போ என்று சொல்லியும் இசக்கி அதை அங்கேயே வைத்து விட்டு வருகிறாள். இவர்கள் கிளம்பி வந்ததும் முத்துப்பாண்டி அதை ஆசையாக எடுத்து சாப்பிட்டு சந்தோசப்படுகிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், முத்துப்பாண்டி வீட்டுக்கு தூக்குடன் வருவதை பார்த்த சௌந்தரபாண்டி என்னடா அது என்று கேட்க முத்துப்பாண்டி பணியாரமும் சட்டினியும் என்று சொல்கிறான். உடனே சௌந்தரபாண்டி உங்க அம்மா சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கெல்லாம் செத்து போய் இருக்கு.. வெளியே சாப்பிட போனால் மருமகளை துரத்தி விட்டவன் என்று அவமானப்படுத்துறாங்க என்று பிடிங்கி ரசித்து ருசித்து சாப்பிடுகிறார்.

பிளான் போடும் சௌந்தரபாண்டி: பாண்டியம்மா இதை பார்த்து எனக்கும் ரெண்டு கொடுடா, என்று வாங்கி சாப்பிட பாக்கியமும் சிவபாலனும் இதை சாப்பிட்டு விட்டு இது இசக்கி சமைத்தது என்று புரிந்து கொண்டு சைகையில் கேட்க முத்துபாண்டியும் ஆமாம் என்று சொல்கிறாள். அடுத்து இந்த விஷயத்தை சொல்ல சௌந்தரபாண்டி அவ சமைத்ததையா நான் சாப்பிட்டேன்? என்று வாந்தி எடுக்கிறார்.

பணத்தை கொடுக்கிறாள்: மறுபக்கம் சண்முகம் சௌந்தரபாண்டி சொன்னதை வைத்து இசக்கிக்கு ஏதாவது செய்யணும் என்று யோசிக்கிறான். இந்த நேரத்தில் வீராவுக்கு போலீஸ் ட்ரைனிங் குறித்த லெட்டர் வர எல்லாரும் சந்தோசப்படுகின்றனர். வீரா இனிமே மாசம் 1-ம் தேதி ஆனதும் சம்பளத்தை உங்க கிட்ட கொடுத்துடுவேன் என்று வைகுண்டத்திடம் சொல்ல ரத்னா இதை கேட்டு விட்டு பரணியிடம் பணத்தை எடுத்து கொடுக்கிறாள். கல்யாணத்திற்கு முன்னாடி வரைக்கும் அண்ணா என்னை பாத்துக்கிச்சி.. இனிமே என்னுடைய செலவுக்கு நான் பணம் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி பேசுகிறாள்.

கண்கலங்கும் இசக்கி: இதை பார்த்த இசக்கி நானும் வாழாமல் இந்த வீட்டில் தான் இருக்கிறேன்.. நாம என்ன கொடுக்கறது என்று யோசித்து வளையலை கழட்டி கொடுக்கிறாள். பரணி அவ தான் படிச்சா திமிர்ல இப்படி பண்றா.. உனக்கு என்ன என்று திட்டி விடுகிறாள். பிறகு சண்முகத்தை கூப்பிட்டு பரணி திட்ட இசக்கி பண்ணதுல என்ன தப்பு இருக்கு.. அவ இந்த வீட்டில் சும்மா தானே இருக்கா.. அவளுடைய செலவுக்கு யார் பணம் கொடுப்பா என்று பேச பரணி ஷாக்காக இசக்கி பின்னாடி நின்று இதை கேட்டு கண் கலங்குகிறாள். வளையலை கழட்டி அண்ணனிடம் கொடுத்து விட்டு கண்ணீரோடு வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X