இசக்கி வாழ்க்கை என்னாகுமோ.. குழப்பத்தில் பரணி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், போலீசாகப்போகும் வீரா, இனிமே மாசம் 1-ம் தேதி ஆனதும் சம்பளத்தை உங்க கிட்ட கொடுத்துடுவேன் என்று வைகுண்டத்திடம் சொல்ல ரத்னா இதை கேட்டு விட்டு பரணியிடம் பணத்தை எடுத்து கொடுக்கிறாள். கல்யாணத்திற்கு முன்னாடி வரைக்கும் அண்ணா என்னை பாத்துக்கொண்டார். இனிமே என்னுடைய செலவுக்கு நான் பணம் கொடுத்து விடுகிறேன் என்கிறாள்.

இதை பார்த்த இசக்கி நானும் வாழாமல் இந்த வீட்டில் தான் இருக்கிறேன்.. நாம என்ன கொடுப்பது என்று யோசித்து, வளையலை கழட்டி கொடுக்கிறாள். பரணி அவ தான் படிச்ச திமிர்ல இப்படி பண்றா.. உனக்கு என்ன என்று திட்டி விடுகிறாள். பிறகு சண்முகத்தை கூப்பிட்டு பரணி திட்ட இசக்கி பண்ணதுல என்ன தப்பு இருக்கு.. அவ இந்த வீட்டில் சும்மா தானே இருக்கா.. அவளுடைய செலவுக்கு யார் பணம் கொடுப்பா என்று பேச பரணி ஷாக்காக இசக்கி பின்னாடி நின்று இதை கேட்டு கண் கலங்குகிறாள். வளையலை கழட்டி அண்ணனிடம் கொடுத்து விட்டு கண்ணீரோடு வருகிறாள்.

zee tamil anna

இன்றைய எபிசோடில்: இசக்கியின் இந்த செயலால் பரணி வருத்தமடைகிறாள், ஷண்முகம் எதுக்கு இப்படி பேசினான் எனவும் குழப்பம் அடைகிறாள். அடுத்த நாள் காலையில் ஷண்முகம் உடன்குடி மற்றும் வெட்டுக்கிளியிடம் நின்று பேசி கொண்டிருக்கும் போது யாரோ ஒரு பெண்மணி கடைக்கு தேவையான சாமான்களை வண்டியில் கட்டி கொண்டு செல்வதை பார்க்கின்றனர், இது யாரு நமக்கு போட்டியாக என்று பின்தொடர்ந்து சென்று மடக்கி வண்டியை நிறுத்த இசக்கி என தெரிந்து ஷாக் ஆகின்றனர்.

மளிகைக்கடை: இசக்கி மளிகை கடை வைக்க போவதாக சொல்ல ஷண்முகம் உன் மனசுக்கு பிடிச்சதை பண்ணு என்று சொல்கிறான். அடுத்து இசக்கி வீட்டிற்கு வந்து அவளது முடிவை சொல்ல ஷண்முகம் தங்கைகள் சந்தோசப்படுகின்றனர். ஆனால் பரணியும் வைகுண்டமும் அரை மனதோடு இருக்கின்றனர், இசக்கி கடையை ஆரம்பித்து விட்டால் வாழ போகாமல் இங்கேயே இருந்து விடுவாள் என்று அவளது வாழ்க்கையை நினைத்து கவலைப்படுகின்றனர்.

கவலையில் சண்முகம்: அடுத்து பரணி இசக்கியிடம் வந்து உன் அண்ணன் இப்படி சொன்னதால் தப்பா எடுத்துக்காத என்று சொல்லி பேச என் அண்ணனை பத்தி நான் எப்படி தப்பா நினைப்பேன் என்று சொல்கிறாள். பிளாஷ்கட்டில் இசக்கி தூங்காமல் இருக்க ஷண்முகம் என்னாச்சு என்று கேட்க எல்லாரும் படிச்சி இருக்காங்க ஒரு வேலை செய்து காசு கொடுக்கிறாங்க.. நான் என்ன செய்ய என்று கவலைப்பட ஷண்முகம் படிச்சா தான் முன்னேற முடியுமா? உனக்கு எது சரினு படுதோ அதை செய்.. அண்ணன் உனக்கு துணையா இருப்பேன் என்று சொல்லியது தெரிய வருகிறது.

மகிழ்ச்சியில் பரணி: இதை கேட்ட பரணி அண்ணனும் தங்கைகளும் சேர்ந்து தான் இப்படியொரு காரியம் பண்ணீங்களா? என்று சந்தோசப்படுகிறாள். அதை தொடர்ந்து ஷண்முகம் தங்கச்சிங்களுக்கு தான் இடது தோள்.. பிடிச்சவளுக்கு வலது தோள் வந்து சாய்ந்துக்க என்று சொல்ல பரணி ஷண்முகம் தோளில் சாய்ந்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X