புருஷன் தான் முக்கியம்.. சபதம் போட்ட முத்துப்பாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், இசக்கி கடையை திறந்துவிட்டாள், அவள் மீண்டும் வீட்டுக்கே வரமாட்டாள் என்பதால், பாக்கியம் அவளை வீட்டுக்கு அழைத்துவா என்று சொல்கிறாள். இதை தொடர்ந்து முத்துப்பாண்டி இசக்கி கடை திறப்பை நிறுத்தி அவளை வீட்டிற்கு கூட்டி வர கிளம்பி வருகிறான்.
மறுபக்கம் ஷண்முகம் கையால் ரிப்பன் கட் செய்து கடையை திறக்க போகும் சமயத்தில் அங்கு வரும் முத்துப்பாண்டி இசக்கியை வீட்டிற்கு கூப்பிட ஷண்முகம் முத்துப்பாண்டி கையை பிடித்து நிறுத்தி, இசக்கிக்கு வீட்டுக்கு வர விருப்பம் இருந்தா கூட்டிட்டு போங்க என்று சொல்ல இசக்கி கடை தான் முக்கியம், வீட்டுக்கு வரமாட்டேன் என்று சொல்ல, முத்துப்பாண்டி கோபித்து கொண்டு அங்கிருந்து கிளம்பி வந்து விடுகிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், காலையில் எழுந்ததும் முத்துப்பாண்டி நெற்றியில் பட்டையை போட்டு கொண்டு கந்த சஷ்டி கவசம் படிக்க அதை கேட்டு எழுந்து கொள்ளும் சௌந்தரபாண்டி ஷண்முகம் வீட்டில் இருக்கோமோ என்று குழப்பம் அடைகிறார். இதையடுத்து பூஜையறையில் முத்துப்பாண்டி மந்திரம் படிப்பதை பார்த்து என்னடா பண்ணிட்டு இருக்க என்று கேட்க நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன் என்று சொல்ல சௌந்தரபாண்டி இசக்கியை பிரிய முடிவு எடுத்து இருப்பதாக நினைத்து சந்தோசப்பட்டு நீ எடுத்து இருக்கிறது தான் நல்ல முடிவு என்று சொல்கிறான்.
பாக்கியம் கொடுத்த அட்வைஸ்: அடுத்து முத்துப்பாண்டி எல்லாரிடமும் ஆசிர்வாதம் வாங்கும் போது பிளாஷ்கட் ஓபனாகிறது. முத்துப்பாண்டி நைட் தூங்காமல் இருக்க பாக்கியம் என்னாச்சு என்று கேட்க உனக்கு தெரியாதா? இசக்கி ஏன் இப்படி பண்ணுறா? அவ மேலே நான் எவ்வளவு பாசம் வச்சிருக்கேன் தெரியுமா என்று சொல்கிறான். இதை கேட்ட பாக்கியம் என்னடா பாசம் வச்சிருக்க? ரத்னாவை தான் கல்யாணம் பண்ணிப்பேனு தாலியை வச்சிட்டு சுத்திகிட்டு இருந்த, இசக்கியும் சிவபாலனும் லவ் பண்ணிட்டு இருந்தாங்க. நீ இசக்கி கழுத்தில் தாலி கட்டியதும் சிவபாலன் அண்ணினு கூப்பிட்டா அது அவ மேலே வச்சிருந்த மரியாதை.
புருஷன் தான் முக்கியம்: உன்னை ஒரு அம்மாவா என்னால் திருத்த முடியல.. ஆனால் இசக்கி திருத்தினா, அப்படி இருக்கும் போது நீ என்ன பண்ண? அண்ணன் பாசம் தான் முக்கியம்னு இருக்க அவளை உன் பாசத்தால் மாத்து. புருஷன் தான் வேணும்னு சொல்லவை என்று சொல்கிறாள். இதை கேட்டு முத்துபாண்டியும் அவளை மாத்தி காட்டுறேன் என்று சவால் விடுகிறான். இந்த விஷயம் அறிந்து சௌந்தரபாண்டி ஆசிர்வாதம் செய்ய மாட்டேன் என்று கிளம்பி செல்கிறார். மறுபக்கம் இசக்கி ஆட்டோவில் இருந்து கடைக்கு தேவையான மளிகை சாமான்களை இறக்கி வைத்து கொண்டிருக்கிறாள்.
இதுவேற வகை ரொமான்ஸ்: அப்போது இஸ் இஸ் என்று சத்தம் கேட்க திரும்பி பார்க்க ஆட்டோக்காரர் மட்டுமே இருக்கிறார். மீண்டும் மீண்டும் அதே சத்தம் கேட்க இசக்கி ஆட்டோ ட்ரைவரை அடிக்கபோக ஏன் மா நான் இல்ல அங்க பாரு என்று சொல்ல முத்துப்பாண்டி ஆட்டோ பின்னாடி இருந்து முகத்தை காட்ட இசக்கி வெட்கத்தில் நெளிகிறாள். எதுக்கு இஸ் இஸ்-னு கூப்டீங்க என்று கேட்க உன் பேரு இசக்கி தானே? அதான் இஸ் இஸ்-னு கூப்பிட்டேன் என்று சொல்கிறான். மேலும் பசிக்குது சாப்பிடல என்று சொல்ல இசக்கி கலரை எடுத்து கொடுக்க அதை குடித்து விட்டு வேலைக்கு கிளம்புகிறான்.
நல்லா இருக்கு கதை: இசக்கி அவனை தடுத்து நிறுத்த முத்துப்பாண்டி ரொமான்ஸா ஏதாவது சொல்ல போறா என்று நினைக்க குடிச்ச கலருக்கு காசு கேட்கிறாள். முதல் போனியே சும்மா கொடுக்க முடியாது என்று சொல்ல முத்துபாண்டி காசு எடுத்துட்டு வரல என்று சொல்கிறான். அப்போது கனி வெளியே வர மாமா நீங்களா என்று சத்தம் போடுகிறாள். உங்களுக்கு நான் காசு தரேன். நாளைக்கு வட்டியோட திருப்பி கொடுக்கணும் என்று சொல்லி கொடுக்கிறாள். அடுத்து பரணி கிளினிக்கில் இருக்க வெங்கடேஷ் அவளை பார்ப்பதற்காக அங்கு வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











